25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 21, 2026

சட்டமன்ற பொது தேர்தல், 2026 நடைபெறுவதையொட்டி பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த காவல் பார்வையாளர் வருகை.

எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகள் எந்தவித சந்தேகங்களுக்கும் இடமின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையம் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும்  தேர்தல் பொது பார்வையாளர்களாக  இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும்,  செலவின பார்வையாளர்களாக இந்திய வருவாய் பணி அலுவலர்களையும், ஒருங்கிணைந்த காவல் பார்வையாளராக இந்திய காவல் பணி அலுவலரையும்  நியமனம் செய்து ஆணையிட்டுள்ளது.அதன்படி, தேர்தல் பொதுப்பார்வையாளர்களாக 202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு திரு.உதயன் மிஷ்ரா, I A S., அவர்களும் (9489985870), 206- விருதுநகர் மற்றும் 207- அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.அனுப்குமார் யாதவ், I A S., அவர்களும்(9489985872), 208- திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.சஞ்சீவ் ஶ்ரீவாஸ்தவா, I A S ., அவர்களும்(9489985873) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் செலவின பார்வையாளர்களாக 202-இராஜபாளையம் மற்றும் 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு திரு.சுக்செயின் சிங்,இ.வ.ப., அவர்களும்(9489985874), 204- சாத்தூர் மற்றும் 205- சிவகாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.அனில்குமார்,இ.வ.ப., அவர்களும்(9489985875), 206- விருதுநகர் மற்றும் 207- அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிகளுக்கு திரு.நாயன்ஜோதி நாத், இ.வ.ப., அவர்களும்(9488985876), 208- திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு திரு.வாக்மரே ஜெய்,இ.வ.ப., அவர்களும்(9488985877) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் திரு.அகிலேஷ் குமார் சௌராசியா,இ.கா.ப., அவர்களை (9488985878) ஒருங்கிணைந்த காவல் துறை பார்வையாளராக நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.ஆதலால் பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்ற தொகுதிகள் தொடர்பான தேர்தல் பணிகள் குறித்த புகார்கள் ஏதும் இருப்பின், தொடர்புடைய சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பார்வையாளர்களின் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் வாயிலாகவோ, நேரிலோ தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Mar 19, 2026

விருதுநகரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் சட்டமன்றத் தேர்தல்- 2026 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக  அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தொடங்கி  வைத்தார். சட்டமன்றத் தேர்தல்- 2026 நடைபெறயுள்ளதை யொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி,  விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் தொடங்கி  வைத்தார். இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வாக்காளர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து,  வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கியும், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Mar 19, 2026

திருச்சுழியில் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி, வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்   (18.03.2026) சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு, மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.1. மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு செல்லக்கூடிய வழிகள் மற்றும் மாற்று வழிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.2. வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் இருப்பின் அவற்றினை சரிசெய்யும் பொருட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து சரிசெய்யப்பட வேண்டும்.3. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.4. வாக்குச்சாவடி பகுதிகளில் கட்சி கொடிகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் இருப்பின் அவற்றினை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.5. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் போது மண்டல அலுவலர்கள் தகுந்த பயிற்சியினை அளித்திட வேண்டும்.6. வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளுதல் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.7. தேர்தல் நாளுக்கு முந்தைய தினம் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் எடுத்துச் செல்லப்படும் படிவங்கள் மற்றும் தேர்தல் நாளன்று பயன்படுத்தப்படும் பொருட்கள் எண்ணிக்கையினை விடுபடாமல் எடுத்துச் செல்லப்பட வேண்டும். 8. சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட, வாக்குப்பதிவு இயந்திரமா என்பதை சரிபார்த்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.9. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி அலுவலர்களின் பணிகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.10. வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதேனும் ஏற்படின் உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்குத்  தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,  மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Mar 19, 2026

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் - பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகள் ஆய்வு .

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, பந்தல்குடியில் (18.03.2026) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகளை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த நான்கு முக்கியக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.அதன்படி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகள் (Flying Squads) வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு குழுவிற்கு 7 நபர்கள் வீதம் மொத்தம் 441 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதேபோல், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் மொத்தம் 63 நிலைக்கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டு, அவற்றில் 441 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.மேலும், வீடியோ பதிவுகள் மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு குழு வீதம் மொத்தம் 7 வீடியோகண்காணிப்புக்குழுக்கள்(VideoSurveillanceTeams)அமைக்கப்பட்டு,இதில்மொத்தம்21நபர்கள்இடம்பெற்றுள்ளனர்.இக்குழுக்கள் பதிவு செய்யும் காட்சிகளை ஆய்வு செய்ய, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குழு வீதம் மொத்தம் 7 வீடியோ பார்வையிடல் குழுக்கள் (Video Viewing Teams) அமைக்கப்பட்டு, அதில் 14 நபர்கள் பணியாற்றி வருகின்றனர்.அதன்படி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, பந்தல்குடியில் இன்று (18.03.2026) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் நடத்தப்படும் வாகன சோதனை பணிகளை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வாகனச் சோதனையின் போது பொதுமக்களுக்கோ, நோயாளிகளுக்கோ அல்லது அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்வோருக்கோ தேவையற்ற சிரமங்கள் இருக்கக்கூடாது. அதே சமயம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் நியாயமாகவும், தூய்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் கண்காணிப்புக் குழுக்களின் பங்கு மிக முக்கியமானது எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

Mar 18, 2026

வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (17.03.2026) சட்டமன்றத் தேர்தல்- 2026 யை முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சட்டமன்றத் தேர்தல்- 2026 தமிழகத்தில் ஏப்ரல்-23 அன்று நடைபெறவுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல், இளம் தலைமுறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், திருநங்கை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில்,  பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மூன்று சக்கர மோட்டார் வாகனத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வரை சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் தவறாமல் நேர்மையாகவும் நியாயமாகவும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்,  தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 18, 2026

தேர்தல் புகார்களை உடனுக்குடன் கையாளுதல் -பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கு அறிவுறுத்தல்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை நிலைநாட்டவும், புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், பறக்கும் படை (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கான (Static Surveillance Teams) cVIGIL செயலி  தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இப்பயிற்சியின் வகுப்பில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை எவ்விதத் தாமதமுமின்றி கையாள்வது குறித்து இணை இயக்குநர்/ மாவட்ட தகவலியல் அலுவலர் திரு.வெ.பிரபாகரன் அவர்கள் வழிகாட்டுதல்களை வழங்கினார்.அதன்படி, cVIGIL செயலி புகார்கள்:பறக்கும் படையினர் தங்களின் கள ஆய்வுகளை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் ESMS (Election Seizure Management System) என்ற மென்பொருளில் பதிவேற்றம் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.பொதுமக்களிடமிருந்து cVIGIL செயலி வழியாக வரும் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். புகார் பெறப்பட்ட 100 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, அதன் முடிவை செயலியில் பதிவேற்ற வேண்டும்.தேர்தல் கட்டுப்பாட்டு அறை (Control Room): மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பகிரப்படும் தகவல்கள் மற்றும் வாட்ஸ்அப் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.தொலைபேசி வாயிலாக வரும் புகார்கள்: 1950 போன்ற கட்டணமில்லா எண்கள் மற்றும் இதர தொலைபேசி வாயிலாகப் பெறப்படும் புகார்களின் உண்மைத்தன்மையை விரைந்து ஆய்வு செய்ய வேண்டும்.குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்கள்:1. நேரடி ஆய்வு: புகார் வந்தவுடன் ஜி.பி.எஸ் (GPS) பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் விரைந்து செயல்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்றடைய வேண்டும்.2. வீடியோ பதிவு: சோதனையின் போது நடைபெறும் நிகழ்வுகள், பறிமுதல் செய்யப்படும் பணம் அல்லது பொருட்கள் என அனைத்தையும் எவ்வித விடுபடலும் இன்றி வீடியோ பதிவு (Video Graphing) செய்ய வேண்டும்.3. ஆவணப் பராமரிப்பு: பறிமுதல் செய்யப்படும் பொருட்களுக்கு உரிய படிவங்களை வழங்கி, அவற்றைக் கருவூலத்தில் ஒப்படைக்கும் வரை சட்டப்படியான நடைமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும்.4. பொதுமக்களுடன் கனிவான அணுகுமுறை: வாகனச் சோதனையின் போது பொதுமக்களுக்கோ, நோயாளிகளுக்கோ அல்லது அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்வோருக்கோ தேவையற்ற சிரமங்கள் இருக்கக்கூடாது. அதே சமயம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் நியாயமாகவும், தூய்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் கண்காணிப்புக் குழுக்களின் பங்கு மிக முக்கியமானது.தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம், பரிசுப் பொருட்கள்  போன்றவற்றை விநியோகம் செய்வதைத் தடுப்பதில் இக்குழுக்களின் பங்கு குறித்து விரிவாக விளக்கப்பட்டது. வாகனச் சோதனையின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கண்ணியத்துடன் நடந்துகொள்ளவும், அதே சமயம் சோதனையைத் துல்லியமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Mar 18, 2026

இராஜபாளையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற மோட்டார் சைக்கிள் வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விருதுநகர்  மாவட்டம், இராஜபாளையத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்- 2026 முன்னிட்டு, வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணி  (17.03.2026) நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் - 2026 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், அதிக முறை வாக்களித்த மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறும் வகையில், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், ரங்கோலி வரைதல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி,  இராஜபாளையத்தில், இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து காந்தி சிலை, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் முக்கு சாலை, மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள பத்மா மருத்துவமனை, நகராட்சி அலுவலகம், இரயில் நிலையம் பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் நிலையம் வழியாக மீண்டும்  வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வரை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட  இருசக்கர வாகன வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, நகராட்சித்துறை, கூட்டுறவுத்துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து,  வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும்.  ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  பதாதைகளை ஏந்தி சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஆர்.அமர்நாத் அவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / இராஜபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ்காந்தி அவர்கள், உட்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 18, 2026

சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு, மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு .

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதி, சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில்  (17.03.2026)சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 முன்னிட்டு, மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Mar 17, 2026

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், கலையரங்க உரிமையாளர்கள், உணவகம் தங்கும் விடுதி உரிமையாளர்கள், பணம் கடன் கொடுப்பவர்கள் மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுடனான தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள்  தலைமையில்  (16.03.2026) நடைபெற்றது.தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் தேதி 23.04.2026 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் 15.03.2026 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.அச்சக உரிமையாளர்கள்மக்கள் பிரிநிதித்துவ சட்டம் பிரிவு 127 ஏன் கீழ் தேர்தல் காலங்களில் அச்சக உரிமையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தேர்தல் சமயங்களில் அடிக்கப்படும் அனைத்து போஸ்டர் துண்டு பிரசுரம், பேனர் போன்றவை எவையாயினும் அது எந்த அச்சகத்தால் அடிக்கப்பட்டது என்ற விபரம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் வாசகங்கள் எவையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ அமையக் கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் நகல் ஒன்றுடன் ஒரு உறுதி மொழி படிவத்துடன் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிக்கை அனுப்பி வைத்திட வேண்டும்.அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் ஆகியன நகல் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும் அதுவும் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் பிரசுரமாகவே கருதப்படும்.அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் சரியான எண்ணிக்கையை குறிப்பிட்டு பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். மேற்படி எண்ணிக்கையினை கூட்டியோ அல்லது குறைத்தோ காட்டக் கூடாதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127 மீறி செயல்படும் எந்த ஒரு அச்சு உரிமையாளர் மீதும் ஆறு மாதம் மற்றும் இரண்டாயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் அச்சக உரிமையும் ரத்து செய்யப்படும்.திருமண மண்டபங்கள்தேர்தல் காலங்களில் முன்பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகள் அரசியல் சார்பானவை மற்றும் சார்பற்றவை என பிரித்துக்கொள்ள வேண்டும். அரசியல் சார்பான நிகழ்ச்சிகள் எனில் காவல்துறை மற்றும் பிற அனுமதிகள் முறையாக பெறப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.நிகழ்ச்சி நடத்துவதற்கு பெறப்படும் உண்மையான கட்டண தொகை தெரிவிக்கப்பட வேண்டும். கூட்டியோ அல்லது குறைத்தோ தெரிவிக்க கூடாது.அரசியல் நிகழ்ச்சிகளில் பணமோ அல்லது பரிசு பொருட்களோ விநியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கும். காவல்துறையினருக்கும் தெரிவித்திடல் வேண்டும். தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பணமோ, பரிசு பொருட்களோ போன்றவை இலவசமாக விநியோக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறான இனங்கள் எதுவும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட வேண்டும்.திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் மொத்தமாக சாப்பாடு, பிரியாணி போன்றவை தயாரிக்க அனுமதிக்க கூடாது. திருமண மண்டபங்களை வாக்காளர்களை கவரும் விதத்தில் பரிசு பொருட்களை சேரித்து வைக்கும் குடோனாக பயன்படுத்திட அனுமதி இல்லை.தங்கும் விடுதிகள்தங்கும் விடுதிகளில் நாளது தேதியிலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ பதுக்கும் விதத்தில் செயல்படுவோரை கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவித்திடல் வேண்டும்.மேற்கண்ட நிபந்தனைளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர்எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் நகை அல்லது பத்திரத்தின் பேரில் கணிசமான ரொக்க தொகையினை வழங்கிடுவதற்கு முன்னர் அவர் அரசியல் அல்லது வேட்பாளர் தொடர்புடையவரா என அறிந்து கொள்ள வேண்டும்.வாக்காளர்களை கவரும் விதத்தில் டோக்கன் விநியோகத்தின் மீது பணமோ அல்லது பொருளோ கொடுத்திடக் கூடாது. வாக்காளர்களை கவரும் விதத்தில் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகைகளை இலவசமாக திருப்பி தருவதோ அல்லது சிறிய நகைகளுக்கு அதிக அளவு பணம் தருவதோ கூடாது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைளும் வெளிப்படை தன்மையுடனும் உரிய விதிமுறைகளின் படியும் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இனங்களும் அதற்குரிய பதிவேட்டில் சரியாக பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.மேற்கண்ட நிபந்தனைகளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது.எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அச்சகங்கள், நகை அடகு பிடிப்போர் மற்றும் திருமணம், தங்கு விடுதிகளின் உரிமையாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம்/தொழில் செய்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், வங்கி அனைத்து திருமண மண்டபங்கள், அச்சக, தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் மற்றும் நகை அடகுதொழில் புரிவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 17, 2026

தேர்தல் செலவுகளை கண்காணிப்பது தொடர்பான அனைத்து வங்கியாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (16.03.2026) சட்டமன்றத் தேர்தல்-2026 தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் செலவுகளை கண்காணிப்பது தொடர்பான அனைத்து வங்கியாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தேர்தல் வேட்பாளர்களுக்கு வங்கி கணக்கு திறப்பதற்கும் காசோலை புத்தகங்கள் வழங்குவதற்கும் சுமூகமான நடைமுறைகளை உறுதி செய்ய வேண்டும்.சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ரூ.10 இலட்சத்திற்கு மேல் சந்தேகத்திற்குரிய வங்கி பணப்பறிமாற்றம் நடைபெற்றால் தகவல் தெரிவிக்கும்படியும், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்ப வாகனங்களில் பணம் எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களுடன் பணப்பரிமாற்றம் செய்யும்படியும், பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களில் உள்ள பணியாளர்களுக்கு அவர்களுடைய அமைப்புகள் / நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை கண்டிப்பாக எடுத்துச் செல்லும்படியும், வேட்பாளர் வங்கி கணக்கில் நடைபெறும் அனைத்து பணப்பறிமாற்றத்தினை கண்காணிக்கும்படியும், தேர்தல் பணிக்காக பணப்பறிவர்த்தனைகளை கண்காணிக்க போதுமான அலுவலர்களை நியமிக்கவும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பணப்பறிமாற்றம் நடைபெற்றால் உடன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்கும்படியும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், வங்கி மேலாளர்கள், அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 122 123

AD's



More News