25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 13, 2026

சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகள் மூலம் விழிப்புணர்வு.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில்  (11.04.2026) பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டு வில்லைகள் (Stickers):          ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்ற வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், “என் வாக்கு, என் குரல்” என்ற வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகள் (Stickers) வீடு வீடாகச் சென்று ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.உறுதிமொழி ஏற்பு:          தொடர்ந்து, "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Apr 13, 2026

“2026-ஆம் ஆண்டிற்கான தங்குமிடவசதியற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமானது வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது .

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விருதுநகர் மாவட்டத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் அறிவியல் பூர்வமான பயிற்சியை வழங்கும் கோடைகாலப் பயிற்சி முகாமானது நடத்தப்படுகின்றது. இதனடிப்படையில் “2026-ஆம் ஆண்டிற்கான தங்குமிடவசதியற்ற இலவச கோடைக்கால பயிற்சி முகாமானது வருகின்ற 17.04.2026 முதல் 01.05.2026 வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த கோடைக்கால பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் இரண்டு அமர்வுகளாக பயிற்சிகள் வழங்கப்படும்.இப்பயிற்சி முகாமில், குத்துச்சண்டை, டென்னிஸ், வளைகோல்பந்து, யோகா, தடகளம், கபாடி, கையுந்துபந்து மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சிகள் வழங்கப்படும். கோடைக்கால பயிற்சி முகாமில்  கலந்து கொள்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். கோடைக்கால பயிற்சி முகாமில் சேர விரும்புவோர் தங்களது பெயர்களை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு நேரடியாக வருகைபுரிந்து பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 13, 2026

208-திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு ஊராட்சியில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7-சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நேர்மையான மற்றும் கண்ணியமான தேர்தலை எதிர்கொள்ளவும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வகையிலும் வாக்களர்களிடையே பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வருகின்றன.விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்:          அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதி செய்யவும், என் வாக்கு விற்பனைக்கு அன்று என்பதை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், உறுதிமொழி, ரங்கோலி போட்டி, மெஹந்தி போட்டி மற்றும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் சட்டமன்றத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாக்காளர்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.துண்டு பிரசுர விழிப்புணர்வு:அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், 208-திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு ஊராட்சியில் உள்ள வாரச்சந்தையில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Apr 13, 2026

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்த 49 குழுக்கள் அமைக்கப்பட்டு 13.04.2026 முதல் 17.04.2026 வரை வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெறவுள்ளனர் - மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களது விருப்பத்தின்பேரில் வீடுகளுக்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கெனவே படிவம் 12D-இல்இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 330 மூத்த வாக்காளர்கள் மற்றும் 240 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும்,திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 357 மூத்த வாக்காளர்கள் மற்றும் 358 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 306 மூத்த வாக்காளர்கள் மற்றும் 214 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும்,சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 224 மூத்த வாக்காளர்கள் மற்றும் 177 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 318 மூத்த வாக்காளர்கள் மற்றும் 310 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 303 மூத்த வாக்காளர்கள் மற்றும் 252 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 170 மூத்த வாக்காளர்கள் மற்றும் 294 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் என 7 சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2008 மூத்த குடிமக்கள், 1845 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க  விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர்.மேற்படி வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிக்க வாக்குப்பதிவு அலுவலர் தலைமையின் கீழ் நுண்பார்வையாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு 10, திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 10, சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 5, சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு 5, விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு 6, அருப்புக்கோட்டை சட்டமன்ற  தொகுதிக்கு 7, திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு 6  என மொத்தம் 49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்குழுக்கள் நாளை 2026 ஏப்ரல் 13 முதல் 17 வரை வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.இந்த வசதியைப் பயன்படுத்தி ஏற்கெனவே விருப்பம் தெரிவித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தே வாக்குகள் செலுத்தலாம். படிவம் 12D-இல் விண்ணப்பம் செய்த பிறகு வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது.எனவே, தபால் வாக்குக்கு விண்ணப்பித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் வாக்களிக்க ஏதுவாக வீட்டிலேயே இருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ,மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 13, 2026

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சட்ட மேதையான அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் (14.04.2026) அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சமத்துவ உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்  (13.04.2026) அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-14ஆம் நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது,ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து, அனைவரிடமும் சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் சமூக நீதி நிலவுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு சமத்துவ நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் சாதி வேறுபாடுகளுக்கெதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி, ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வுகளை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும்,சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். 

Apr 11, 2026

செந்திக்குமார நாடார் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளார் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன.அதன்படி, கல்லூரியில் பயிலும் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கோலப் போட்டிகளில் மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு   வாக்காளர் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர். இளம் வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வுஇதன் ஒரு பகுதியாக, இன்று (10.04.2026) செந்திக்குமார நாடார் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில், 100 க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் 100% Vote என்ற தேர்தல் வாசகம் வடிவில் நின்று வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தினர். உறுதிமொழி ஏற்பு:          "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மேலும், மாணவிகள் கைகளில் மெஹந்தி மூலம் விழிப்புணர்வு படங்கள் மற்றும் வாசகங்களை எழுதியும், முகத்தில்  வர்ணம் பூசியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு செயல்பாடுகள்:இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மாணவர்களுக்கு நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியாக வாக்காளர் விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. கையெழுத்து இயக்கம்தொடர்ந்து, எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு அனைவரும் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்வில், கல்லூரி பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Apr 11, 2026

ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-னை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையிலும், "என் வாக்கு விற்பனைக்கு அல்ல" என்பதை வலியுறுத்தி நேர்மையான தேர்தலை எதிர்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு (SVEEP) நிகழ்ச்சிகள் நடைபெற்று  வருகின்றன.முதல் தலைமுறை வாக்காளர்களின் எழுச்சிமிகு விழிப்புணர்வு:இதன் ஒரு பகுதியாக, இன்று (09.04.2026) 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லி ஊராட்சியில், ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில், கல்லூரி மாணவ-மாணவியர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு குறித்த சிறப்பான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:உறுதிமொழி ஏற்பு: "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.கையெழுத்து இயக்கம்தொடர்ந்து, எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு அனைவரும் கையெழுத்திட்டனர்.இறுதி நிகழ்வாக, மாணவர்களிடையே தேர்தல் விழிப்புணர்வு சிறப்புரை மேற்கொள்ளப்பட்டது.இந்நிகழ்வில், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்), வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

Apr 11, 2026

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக, இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்படும் பணி.

விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு கணினி  அறையில் (10.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள் (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு. அரவிந்த் மீனா, I A S.,., அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு. ரஞ்சித் குமார் லால்,I A S,. அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S.,., அவர்கள்(திருச்சுழி) ஆகியோர் முன்னிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை-1, நிலை -2, நிலை -3 அலுவலர்கள் கணினி மூலம் சுழற்சி முறையில்(Randomization) சட்டமன்ற தொகுதி வாரியாக இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.          தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் -23 ந்தேதி நடைபெறுவதையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2001 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடக்கூடிய வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை-1, நிலை -2, நிலை -3 என மொத்தம் 9604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.          இதில் 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடி மையங்களில் 1,292 அலுவலர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்களில் 1,480 அலுவலர்களும், 204-சாத்தூர்  சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடி மையங்களில் 1,396 அலுவலர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடி மையங்களில் 1,392 அலுவலர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்களில் 1,348 அலுவலர்களும், 207-அருப்புக்கோட்டை  சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடி மையங்களில் 1,296 அலுவலர்களும், 208-திருச்சுழி  சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடி மையங்களில் 1,400 அலுவலர்களும் என மொத்தம் 7  சட்டமன்ற தொகுதிளில்  2,001 வாக்குச்சாவடி மையங்களில் 9,604 அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட  ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 11, 2026

வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (10.04.2026) மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் திரு.உதயன் மிஷ்ரா,I A S., அவர்கள் (இராஜபாளையம் மற்றும் திருவில்லிபுத்தூர்), திரு. அரவிந்த் மீனா, I AS., அவர்கள்(சாத்தூர் மற்றும் சிவகாசி), திரு. ரஞ்சித் குமார் லால்,I A S., அவர்கள்(விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை), திரு. சஞ்சீவ் ஸ்ரீவாஸ்தவா, I A S., அவர்கள்(திருச்சுழி) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 2001 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 128 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 128 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 08 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 203-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 09 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 17 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 28 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 13 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 22 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 31 தேர்தல் நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 128 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்களாக வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்கள் தேர்தல் நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.    தேர்தல் நுண்பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, வாக்குப்பதிவு அலுவலர்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிந்து, அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணித்து தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.  குறிப்பாக, வாக்குப்பதிவு நாளில் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நல்ல முறையில் எந்தவொரு சந்தேகமுமின்றி மேற்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணிகளை நேர்த்தியாகவும், சிறப்பாக செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை முறையாக கண்காணித்து சம்மந்தப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.    இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சீனிவாசன், தேர்தல் தொடர்பான அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 11, 2026

சிவகாசி மாநகராட்சியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூன்: சார் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

எதிர்வரும் தேர்தல்களில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை 100 சதவீதம் நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.          அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் *சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய **ராட்சத பலூன்* பறக்கவிடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.முக்கிய அம்சங்கள்:    துவக்கி வைத்தவர்: - சிவகாசி சார் ஆட்சியர் திரு. முகமது இர்பான்,I A S. அவர்கள் இந்த ராட்சத விழிப்புணர்வு பலூனைப் பறக்கவிட்டு, விழிப்புணர்வுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.   வாசகங்கள்:  அந்த பலூனில் "வாக்களிப்பது நமது கடமை", "100% வாக்களிப்போம்" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இடம்பெற்றிருந்தன.  இடம்:  அதிகப்படியான மக்கள் நடமாட்டம் உள்ள சிவகாசி பேருந்து நிலையத்தில் இது அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்களிடையே இந்த செய்தி சென்றடையும்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.        

1 2 3 4 5 6 7 8 9 10 ... 122 123

AD's



More News