விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் அரசு சேவைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் (10.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, விருதுநகர் மாவட்டம், கூரைக்குண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும், கூரைக்குண்டு ஊராட்சியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருட்களின் தரம் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.பின்னர் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர் சந்தையில் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் ரூ.14.06 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 244 குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு குடியிருப்பு வீடுகளின் தரம் குறித்தும் மின்சாரம் சாலை குடிநீர் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply