25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய  மின்  பலகை  பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி     வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மற்றும்  டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய  மின்  பலகை  பொருத்தும்   தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Solar Panel Installation Technician training)   வழங்கப்படவுள்ளது.
    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின்  வாழ்க்கை தரத்தை மேம்படுத்த  பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
    இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும்  டாக்டர் ரெட்டி நிறுவனம்  இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு  சூரிய  மின்  பலகை  பொருத்தும்   தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி(Solar Panel Installation Technician training)  வழங்கப்படவுள்ளது.
    இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களரகவும்இ  18 முதல் 32 வயது வரை நிரம்பி  இருக்கவேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்கவேண்டும். பத்து,  பன்னிரெண்டாம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு,  பொறியியல்படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு   முடித்தவர்கள்   விண்ணப்பிக்கலாம்.  
  இப்பயிற்சி காலம் 45 நாட்கள் ஆகும்.  இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழக அங்கீகார  சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக  ரூ.18000/- முதல் ரூ.30000/-வரை கிடைக்க வழிவகை செய்யப்படும்.வேலைவாய்ப்பினை விரும்பாத இளைஞர்களுக்கு சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.
இப்பயிற்சி பெற  தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம்.  மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி உணவுக்கான  செலவினம்  டாக்டர் ரெட்டி நிறுவனம்   மூலமாக ஏற்கப்பட உள்ளது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *