25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் வேளாண்மை உழவர் நலத்துறைச் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும்  மானியத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,, அவர்கள் (10.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரியில்,  வேளாண்மைத்துறையில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு 70 சதவீத மானியத்தில் பவர் டில்லர் இயந்திரம் வழங்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நோில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து பயனாளியுடன்  கலந்துரையாடினார்.

மேலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லிபத்திரியில்,வேளாண்மை பொறியில் துறையின் சார்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பண்ணைக்குட்டையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, வில்லிபத்திரியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் சார்பில் மாநில தோட்டகலை வளர்ச்சித் திட்டம் தென்னை பரப்பு விரிவாக்கம் மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள 48 தென்னை கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அழகிய நல்லூர் ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் தெளிப்புநீர் பாசனக் கருவிகள் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், முழு மானியத்தில் வழங்கப்பட்டுள்ள சப்போட்டா பழமரக்கன்றுகளையும், நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  மேலும், அழகிய நல்லூர் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட தேனீ பெட்டிகள் மற்றும் தேன் எடுக்கும் கருவியினையும், ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மானியத்தில் வழங்கப்பட்டுள்ள தேனீப்பெட்டி, மண்புழு உரப்படுக்கை மற்றும் கால்நடைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ.,)திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ)திருமதி சுமதி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி, செயற்பொறியாளர் திருமதி இந்திரா, வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News