வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (06.06.2025) சிவகாசி வட்டம், நெடுங்குளம் தனியார் பட்டாசு ஆலையில் 26.04.2025 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A S, அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.
அதன்படி, இந்த வெடி விபத்தில் உயிரிழந்த சிவகாசி வட்டம் சொக்கம்பட்டியைச் சேர்ந்த திருமதி மாரியம்மாள் என்பவரது வாரிசுதாரரான திரு.முனிச்செல்வம் என்பவருக்கும், வத்திராயிருப்பு வட்டம் கூமாப்பட்டியைச் சேர்ந்த திருமதி திருவாய்மொழி என்பவரது வாரிசுதாரரான திரு.ராமர் என்பவருக்கும், சிவகாசி வட்டம் மங்கலத்தைச் சேர்ந்த திருமதி கலைச்செல்வி என்பவரது வாரிசுதாரரான திரு.முத்துச்சாமி என்பவருக்கும், சிவகாசி வட்டம் எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த திருமதி பாக்கியலட்சுமி என்பவரது வாரிசுதாரரான திரு.துரைராஜ் என்பவருக்கும் தலா ரூ.4 இலட்சம் வீதமும்,
வெடி விபத்தில் பலத்த காயமடைந்த கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ராமசுப்பு மற்றும் ரெங்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி லட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.1 இலட்சம் வீதமும்,
லேசான காயமடைந்த கோபாலன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி முனியம்மாள், கூமாப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி, திருமதி பாத்திமுத்து மற்றும் திருமதி ராபீயா பீவி ஆகியோருக்கு தலா ரூ.50,000/- வீதமும் என வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 10 நபர்களுக்கு மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான காசோலைகளை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply