25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில்    பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

2025-ஆம் ஆண்டில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யவேண்டும்.  இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவ/மாணவிகளுக்கு உதவிடும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் விருதுநகர்/அருப்புக்கோட்டை/சாத்தூர்/திருச்சுழி, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், விருதுநகர்- 3 ஆகிய இடங்களில் சேர்க்கை உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்ப கட்டணம் ரூ.50/-யை Debit Card/Credit Card/Net Banking/G-pay வாயிலாகவும் செலுத்தலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 19.05.2025
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசிநாள் 13.06.2025

பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், காலணி, பஸ்பாஸ் வழங்கப்படும்.  மேலும் மாதந்திர உதவித்தொகைரூ.750/- மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் உயர்கல்வி உறுதி திட்டம் மூலமும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் படியும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும்.  மேலும்,பயிற்சி முடித்த பின், வளாக நேர்முகத்தேர்வின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் அரசுஃதனியார் நிறுவனங்களில் தொழிற்பழகுநர் பயிற்சி பெற்றுத்தரப்படும்.

இது தொடர்பாக மேலும், விவரங்கள் பெற்றிட,முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகர் - 04562-252655/294382 முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அருப்புக்கோட்டை - 04566-225800
முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சாத்தூர் - 04562-290953
முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருச்சுழி– 7395873907/7010040810 உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விருதுநகர் -04562-294755 மேற்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News