1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) இறுதி நாள்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயத்தின் (ஜமாபந்தி) இறுதி நாளான (22.05.2025) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த பசலி ஆண்டிற்கான 1434-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 15.05.2025 முதல் 28.05.2025 வரை என 10 வட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் தணிக்கை செய்யப்பட்டது.
இந்த ஜமாபந்தியின் நோக்கமானது வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு இறுதி நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் மற்றும் ஆணைகள் வழங்கப்படும்.அதன்படி, சிவகாசி வட்டத்தில், 15.05.2025, 16.05.2025 20.05.2025, 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய 5 தினங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதனடிப்படையில், பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து, வருவாய் தீர்வாயத்தின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களிடம் குறைகள் தீர்க்கும் பொருட்டு 392 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 160 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 160 பயனாளிகளுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்களை விரைந்து நிறைவு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, ஜமாபந்தியின் இறுதி நாளான இன்று நத்தம் பட்டா மாறுதல் (முழுப்புலம்) 6 பயனாளிகளுக்கும், நத்தம் பட்டா மாறுதல் (உட்பிரிவு) 1 பயனாளிக்கும், பட்டா மாறுதல் (உட்பிரிவு) 4 பயனாளிகளுக்கும், இலவச வீட்டுமனைப்பட்டா 7 பயனாளிகளுக்கும், இ-பட்டா 3 பயனாளிகளுக்கும், முதியோர் உதவித்தொகை 38 பயனாளிகளுக்கும், விதவை உதவித்தொகை 46 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 21 பயனாளிகளுக்கும், முதிர்கன்னி உதவித்தொகை 1 பயனாளிகளுக்கும், உழவர் பாதுகாப்புத் திட்டம் நிதி உதவி தொகை 7 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 26 பயனாளிகளுக்கும் என மொத்தம் 160 பயனாளிகளுக்கு ரூ.6,37,250ஃ- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply