25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுத்தல், கொண்டு செல்தல், சேமித்து வைத்தல் உள்ளிட்டவைகளை தடுத்து கனிம வளத்தினை பாதுகாப்பது குறித்த தொடர்புடைய அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுத்தல், கொண்டு செல்தல், சேமித்து வைத்தல் உள்ளிட்டவைகளை தடுத்து கனிம வளத்தினை பாதுகாப்பது குறித்த தொடர்புடைய அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் எடுத்தல், கொண்டு செல்தல், சேமித்து வைத்தல் உள்ளிட்டவைகளை தடுத்து கனிம வளத்தினை பாதுகாப்பது குறித்த தொடர்புடைய கனிமவளத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பாட்டு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.
 

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சில கிரசர்களிலிருந்து வெளிவரும் எம்.சான்ட் (M.Sand),  பி.சான்ட் (P.Sand)  மற்றும் ஜல்லி கற்கல், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இசைவாணை மற்றும் அனுமதிசீட்டு இன்றி (Transit Pass) GST Bill  மட்டும் வைத்துக்கொண்டு கனிமங்கள் எடுத்துச்செல்வது தெரியவருகிறது.

(Tamilnadu Prevention of Illegal Mining Transportaion and Storage of Minerals and Mineral Dealer Rules, 2011) தமிழ்நாடு கனிமங்கள் சட்ட விரோதமாக தோண்டி எடுத்தல் கொண்டு செல்லுதல், இருப்பகத்தில் வைத்தல் தடுப்பு மற்றும் கனிம வணிகர்கள் விதிகள் 2011,ன் படி Transit Pass  இன்றி கனிமங்களை ஏற்றிசெல்லும் வாகனங்கள் யாவும் உரிய அனுமதிசீட்டின்றி கனிம கடத்தலில் ஈடுபட்டதாக கருதி Mines and Minerals Delvelopment Regulation Act, 1957 (MMDR ACT 1957)  மற்றும் Tamilnadu Minor Mineral Concession Rule, 1959 (TNMMCR) –ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், Transit Pass தொடர்பாக எவ்வித நீதிமன்ற தடையாணையும் இல்லை. எனவே, தமிழ்நாடு கனிமங்கள் மற்றும் கனிம வியாபாரிகளின் சட்ட விரோத சுரங்கம், போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகள் 2011பிரிவு 4-ல் தெரிவித்துள்ளவாறு கனிம சேமிப்புக் கிடங்கிற்கு (FORM A)-ல் ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் தங்களது கனிம சேமிப்பு கிடங்கானது நிரந்தரமாக மூடப்படும் என்றும், அனுமதி இல்லாமால் இருப்பு வைக்கப்பட்டுள்ள கனிமங்களானது பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், அரசாணை எண். 50 மற்றும் 14 ன் படி வண்டல் / களி மண் எடுப்பது குறித்து அரசு வழங்கிய நடைமுறைகளை பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது.  வண்டல் / களி மண் தவிர பிற கனிமங்கள் எடுத்துச் செல்லக்கூடாது. மேலும், சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது சுரங்கங்களும் கனிமங்களும் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 1957 பிரிவு 21(1)-ன்படி தண்டனைக்குறிய குற்றமாகும். மேலும், இச்செயல்கள் பாரதிய நியாய சன்ஹிதா 2023 பிரிவு 303(2)-ன்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலம் வழக்கு பதிவு செய்யப்படும்.

மேலும், மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *