25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"FOCUS GIVES SUCCESS "

“FOCUS GIVES SUCCESS ”என்பதைப் பற்றி பிப்ரவரி 1 ஆம் தேதி ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையத்தில் Dr.A.வேலுமணி (Creater Thyrocare) சிறப்புரை ஆற்றினார்.  அப்பநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர். தன் பள்ளிப் படிப்பை தன் கிராமத்தில் உள்ள ஒற்றை ஆசிரியரிடம் படித்தவர். காலேஜ்க்கு பீஸ் கட்ட பணமின்றி B.com படித்தார். பி.காம் ஏன் படிக்கிறாய் இன்ஜினியரிங் படிக்கலாமே என்று கூறிய ஆசிரியரிடம் பண வசதி இல்லை என்று கூறியுள்ளார். அந்த புரொபசரும் அவருக்காக 100 ரூபாய் கட்டியதால்  B.Sc யில் சேர்ந்து படித்தார். அனைத்து பாடங்களிலும் full mark எடுத்து சாதித்து உள்ளார். கோயம்புத்தூரில் 150 ரூபாய் சம்பளத்திற்கு சேர்ந்திருந்தார். முதலில் வேலைக்கு சென்று பின் விஞ்ஞானி ஆக மாறி, எழுத்தாளராகி, பின் வியாபாரம் செய்து வெற்றி பெற்றார் .   

வெறும் 500 ரூபாய் எடுத்துக் கொண்டு மும்பை சென்று பல வருடங்கள் அயராது உழைத்து இன்று 5000 கோடி மதிப்புள்ள தைரோ கேர் நிறுவனத்தின் அதிபராகி இருப்பதை உலகமே வியந்து பார்க்கிறது. தமிழ் மீடியத்தில் கல்வியைக் கற்று இன்று உலக அளவில் போற்றும் பெரிய பணக்காரராக மாறியுள்ளார். தைரோ கேர் நிறவனத்தின் நிறுவனர் வேலுமணி.

ஆங்கிலம் ஒரு மொழியே தவிர, அது Knowledge இல்லை என்று கூறினார். வாழ்வில் ஒன்றை இழந்தால் தான் ஒன்றை அடைய முடியும், குழந்தைகள் கஷ்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கொடுங்கள். நான் சிறு வயதில் அனுபவிக்காத கஷ்டங்களே இல்லை என்றார். கஷ்டப்படாத பிள்ளைகள் பிற்காலத்தில் பிரகாசிக்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு எதுவுமே கொடுக்காதீர்கள். ஆனால் அவர்களை சுதந்திரமாக விடுங்கள். அதுவே பெற்றோரின் கடமை. கடன் வாங்காதீங்க. EMI கட்டியே காலத்தை வீணடித்து விடுவீர்கள். யாரோ ஏமாத்திட்டாங்க என்று ஒரு நாளும் வருத்தப்படக்கூடாது. ஏதாவது செய்ய வேண்டும் என்றால் யாரையும் கலந்தாலோசிக்காமல் முடிவெடுங்கள். ஏழைகளுக்கு அடைய வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கும். ஆனால் பணக்காரர்களுக்கு இருப்பதை இழந்துவிடுவோமோ என்ற பயம் இருக்கும். தற்கால இளைஞர்களுக்கு, தன்னுடைய வாழ்வில் நடந்த விஷயங்களை கூறி, சிறப்பாக உரையாற்றினாார். இராஜபாளையம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினராகவும், பதவி ஏற்றார். இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் முத்து பதவிப் பிரமானம் செய்து வைத்தார்  .Rtn. M. பார்த்தசாரதி President அவர்கள் தலைமையில், Rtn. K. R. ஆனந்தி  Secreatary அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News