இம்சை அரசன் படத்துல 15 பக்க வசனம் மனோரமா அம்மாட்ட கொடுத்தேன்.டைம் எடுத்துக்கங்க வசனத்தை மனப்பாடம் பண்ணிடுங்கனு சொன்னேன்.அவங்க பேப்பர்களை வாங்கிட்டு 2 டைம் படிச்சுட்டு அப்படியே எக்ஸ்பிரசனோட சொன்னாங்க அசந்து போயிட்டேன்,எப்படிமானு கேட்டேன் 1000 படம் மேல பண்ணியாச்சு இது கூட முடியலனா எப்படிபான்னு சிரிச்சாங்க,அவங்களாம் நம்ம தமிழ் சினிமால இருந்தது நமக்கு பெருமை -சிம்புதேவன்
' என்.ராஜசேகர் இயக்கத்தில் சித் தார்த் நாயகனாக நடித்துள்ள படம் 'மிஸ் யூ'. நாய கியாக ஆஷிகா ரங்கநாத்தும், முக் கிய வேடங்களில் கருணாகரன், பால சரவணன், லொல்லு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்துள் ளனர். ஒரு இளைஞன் தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை காதலிக்கிறான். அது ஏன் என் பது தான் படத்தின் கதை. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படம் நவ., 29ல் ரிலீஸ் என அறிவித்துள்ளது.இந்தாண்டு தமிழில் 200 படங்களுக்கு மேல் வெளியாகியுள்ளது. ஆண்டின் கடைசி கட்டத்தில் இருப்பதால், சிறு பட்ஜெட் படங்கள் வரிசையாக ரிலீசாகி வருகின்றன. இந்த வாரம் நவ., 29ல் 'அந்த நாள், டப்பாங்குத்து, மாயன், மிஸ்யு, உறுதி பரமன், சைலண்ட், சாதுவன், சொர்க்கவாசல், திரும்பிப்பார்' ஆகிய 9 படங்கள் வெளியாக உள்ளன. இதில் சித்தார்த்தின் 'மிஸ் யூ', ஆர்.ஜே. பாலாஜி யின் சொர்க்கவாசல்' மட்டுமே தெரிந்த நாயகர்கள் நடித்துள்ள படங்கள்.
'குணா' படம் நல்ல விமர்ச னங்களை பெற் றாலும், வெற்றி பெறவில்லை.. இப்படத்தில் உள்ள 'கண்மணி அன்போடு' பாடல் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்திலும் இடம்பெற்றிருந்தது. அப்படம் ஹிட்டானதற்கு அப்பாடலும் ஒரு காரணம். இதனால் குணா படம் பற்றிய பேச்சுகளும் பரவலானது. சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்து 1991ல் வெளிவந்த படம் 'குணா' .இந்த நிலையில், 33 ஆண்டுகளுக்கு பிறகு 'குணா' படத்தை முதல் முறையாக ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். நவ., 29ல் படம் வெளியாகிறது.
கன்னடத்தில் சிவராஜ் குமாரின் வெற்றி படமான 'மப்டி' படத் தின் இரண்டாம் பாகம் 'பைரதி ரணங்கள்' எனும் தலைப்பில் உருவானது. நாரதன் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், ராகுல் போஸ், சாயா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். சில வாரங்க ளுக்கு முன்பு கன்னடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற இப்ப டம் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் நவ. 29ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இளையராஜா கூறுகையில், "மலையாள படங்களில் இசையமைக்க ஆசைதான். ஆனால் அங்கு வீட்டிற்கு ஒரு இசையமைப்பாளராவது இருக்கிறார்கள். அவர்களே இசையை உருவாக்க துவங்கி விட்டார்கள். 1978ல் 'வியாமோகம்' படம் மூலம் மலையாளத்தில் கால்பதித்தார் இசையமைப்பாளர் இளையராஜா. அதன் பிறகு 'யாத்ரா, மைடியர் குட்டிச்சாத்தான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்தார். பின்னர் தமிழில் பிஸியானதால், மலையாளத்தில் தொடர்ந்து பயணிக்க வில்லை.மலையாள படங்களுக்கு இசையமைக்க அழைத்தால் நிச்சயம் தயாராக இருக்கிறேன்" என்றார்.
டாக்டர், பீஸ்ட்,கோலமாவு கோகிலா, ஜெயிலர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக மீண்டும் ரஜினியை வைத்து 'ஜெயிலர் 2' படத்தை இயக்க தயாராகி வருகிறார். அந்தப் படத்தை முடித்ததும் ,தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போகிறார். இதற்காக ஜூனியர் என்டிஆரிடம் கதை சொல்லி ஓகே செய்துவிட்டாராம்.
கலகலப்பு 3யை இயக்கப்போகிறார் சுந்தர் சி. இதுபற்றி சுந்தர் சியின் மனைவி, நடிகை குஷ்பூ வெளியிட்ட பதிவில், "துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி உடன் இணைந்து கலகலப்பு 3 படத்தை நாங்களும் தயாரிக்கிறோம். அடுத்தாண்டில் படம் ரிலீஸாகும். நடிகர்கள் உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என குறிப்பிட்டுள்ளார்.சுந்தர் சி இயக்கத்தில் 'கலகலப்பு' ,கலகலப்பு 2' படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன .
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கி உள்ளது. இயக்குனர் கூறுகையில், "கதையில் பல காமெடி காட்சிகள் இருந்தன. அந்த காட்சிகளை வைத்தால் சிவகார்த்திகேயனின் மற்ற படங்கள் போல் ஆகிவிடும். அதனால் முகுந்த் வாழ்க்கை குறித்த கதை மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என தோன்றியதால் காமெடி காட்சிகளை நீக்கிவிட்டேன்” என்றார்.
தமிழ் சினிமாவில் 2023ல் 240 படங்கள்.வெளியானது. ஆனால் இந்தாண்டு இது வரை 200 படங்களே வெளியாகியுள்ளன. அதில் பெரிய நடிகர்களின் படங்களே எதிர்பாராத வசூலை பெறாமல் ரசிகர்களை ஏமாற்றியது. ஒரு சில படங்கள் மட்டும் ஹிட்டானது. 2024 முடிய இன்னும் ஆறு வாரங்களே உள்ள நிலையில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் டிச.20ல் வெளியாகும் 'விடுதலை 2' பெரிய பட்ஜெட் படம். அதாவது ஹிட் கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
1991ல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி இணைந்து நடித்து வெளியான படம் 'தளபதி'. 33 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி திரைப்ப டம் முதல்முறை யாக ரஜினியின் பிறந்த நாளான டிச.12ல் புதுப் பொலிவுடன் வெளியிடுவதாக அறிவித்துள்ள னர். பெரும்பா லும் ரஜினி பிறந்த நாளில் பாட்ஷா, சிவாஜி, பாபா ஆகிய படங்கள் தான் ரீ ரிலீஸ் ஆகும். இந்தாண்டு தளபதி படம் ரீ ரிலீஸ் ஆகிறது.