25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


வெள்ளித்திரை

Dec 11, 2024

தெலுங்கு 'பேபி'  படம் ஹிந்தியில் ரீமேக். மறைந்த நடிகர் இர்பான் கானின் மகன் பாபில் கான் இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

தெலுங்கில் சின்ன பட்ஜெட்டில் உருவாகி பெரிய லாபத்தை தந்த படம் 'பேபி'. விஜய் தேவர கொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நாயகனாகவும், வைஷ்ணவி சைதன்யா நாயகியாகவும் நடித்தனர். சாய் ராஜேஷ் நீலம் இயக்கினார். தற்போது இந்தப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. 

Dec 11, 2024

பரபரப்பான அரசியல் வேலை களுக்கு நடுவே “ ஹரிஹர வீரமல்லு “ பட வேலைகளில் சில மணிநேரங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்  துணை முதல்வர் பவன் கல்யாண்.

சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் தற்போது அங்கு துணை முதல்வராக உள்ளார். அரசியலுக்கு பயணித்ததால் அவர் நடித்து வந்த ஓஜி, ஹரிஹர வீர மல்லு ஆகிய படங்களின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி உள்ளார்"பரபரப்பான அரசியல் வேலை களுக்கு நடுவே ஹரிஹர வீரமல்லு பட வேலைகளில் சில மணிநேரங்கள்'' என குறிப்பிட்டு பவன் கல்யாண்.,படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட செல்பி போட்டோவை பகிர்ந்துள்ளார்

Dec 11, 2024

தமிழ் சினிமாவில்  ஆயிரம் கோடி வசூலை இது வரை எந்த படமும் எட்டியதில்லை

இயக்குனர் லோகேஷ் தற்போது ரஜினியை வைத்து தான் இயக்கும் கூலி படத்தில் ஆயிரம் கோடி வசூலை நிகழ்த்தி காட்ட திட்டமிட்டு வருகிறார்.'கூலி' படத்தை தனது பாணியில் இயக்கினாலும், ரஜினிக்கு ஏற்ப அவரது படத்தில் இருக்கும் கமர்ஷியல் சார்ந்த விஷயங்களையும் கொஞ்சம் அதிகமாக சேர்த்து படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

Dec 11, 2024

9 படங்கள் ரிலீஸ்  ( டிச. 13ல் )

டிச.6ல் நான்கு படங் கள் வெளியான நிலையில், நாளை (டிச.13) 'ஐகே லவ் ஸ்டோரி, மிஸ் யு, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட் ராஸ், அந்த நாள், மௌனமே காதலாய், விடிஞ்சா எனக்கு கல்யாணம், மழையில் நனைகிறேன், தென்சென்னை,சூது கவ்வும் 2' ஆகிய 9 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. சில படங்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கலாம்

Dec 11, 2024

பாடலாசிரியர் ரோகிணி என்பது பலருக்கும் தெரியாது

பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'உனக்குள் நானே".. விஜய் நடித்த வில்லு படத்தில் 'ஷல்சா' பாடலும், மாயா திரைப்படத்தில் இடம் பெற்ற 'முன் தினம் பார்த்தேனே' மாலைப்பொழுதின் மயக்கத்திலே திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியவர் ரோகிணி தான். 50வருடங்களாக தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடிகையாக நடித்திருந்தாலும் இவர் பல தமிழ் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் ரோகிணி என்பது பலருக்கும் தெரியாது.

Dec 05, 2024

பிரபாஸ் உடன் மூன்று படங்கள்

கன்னட சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஹோம் பாலே. கேஜிஎப் 1, 2, சலார், காந்தாரா போன்ற வெற்றிபடங்களை தயாரித்துள்ளது. இந் நிறுவனம் ஏற்கனவே பிரபாஸின் சலார் படத்தை தயாரித்த நிலையில் அடுத்து இவரை வைத்து மூன்று படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. இவற்றில் சலார் 2வும் ஒன்று. மேலும் 2026, 2027, 2028 ஆண்டுகளில் பிரபாஸின் மூன்று படங்கள் வெளியாகும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Dec 05, 2024

கல்கி' இயக்குனர் வர்நாக் அஷ்வின் படத்தில் ஆலியா பட்

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் நடிப்பில் 'கல்கி 2898 ஏடி' படத்தை இயக்கிய வர்நாக் அஷ்வின். அடுத்து இதன் இரண்டாம் பாகம் பட வேலைகளில் இவர் உள்ளார். இதற்கடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதையை படமாக்க போகிறார். ஏற்கனவே  ஆலியா ஆர்ஆர்ஆர் படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடம் பிரபலமானவர் இதில் ஹிந்தி நடிகையான ஆலியா பட்டை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.

Dec 05, 2024

சினிமாவாகும் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை

இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த். இவரது வாழ்க்கையை படமாக்க பல முயற்சிகள் நடந்தன. இப்போது அதற்கு சம்மதம் சொல்லி உள்ளார் ஆனந்த் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பான் இந்தியா படமாக உருவாக உள்ள இதை ஏ.எல்., விஜய் இயக்க உள்ளார். ஆனந்த் வேடத்தில் மாதவன் நடிக்க வாய்ப்புள்ளது.

Dec 04, 2024

ஜமீன் போல வாழ்ந்த எஸ்.என்.லட்சுமி

சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை பராமரிக்க ஆட்கள் இல்லாததால் 20க்கு மேற்பட்ட அனாதை இல்லங்களை கட்டி உதவியவர், வருடத்துக்கு ஒரு முறை அவர் பெயரில் இன்றுவரை ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார் .மொத்த சொத்தையும் ஆசிரமம் கட்டிய ஒரே நடிகை. 

Dec 04, 2024

8 ஆண்டுகளுக்கு பின் மலையாளத்தில் சமுத்திரகனி

இயக்குனராக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் பிஸியாக நடிக்கிறார் சமுத்திர கனி. 2016ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'ஒப்பம்' படத்தில் வில்லனாக நடித்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு தற் போது மலையாளத்தில் 'ஒரு அன்வேசத்தின்டே தொடக்கம்' என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

1 2 ... 34 35 36 37 38 39 40 ... 59 60

AD's



More News