அயோத்தியில் கட்டப்பட் டுள்ள ராமர் கோயிலில் அமைந்துள்ள மரங்களில் ஏராளமான குரங்குகள் வாழ்கின்றன. அந்த குரங்குகளுக்கு ஆஞ்சநேயர் சேவா என்ற அறக்கட்டளை சார்பில் ,தினமும் உணவு வழங்கி வருகிறார்கள். அந்த குரங்குகளுக்கு உணவு அளிப்பதற்காக ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான அக்ஷய் குமார் ரூ.ஒரு கோடி நன் கொடை வழங்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படம் 25 நாட்களி லும், 'டான்' படம் 12 நாட்களிலும் 100 கோடி வசூலித்தது. 'அமரன்' வெளியான 3 நாளில் இப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளது. தமிழ் சினிமாவில் டாப் வசூல் நடிகர்களாக ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் உள்ளனர். அவர்களது படங்கள் 2, 3 நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துவிடும். அவர்களைத் தவிர வேறு எந்த நடிகருக்கும் மூன்று நாட்களில் 100 கோடி வசூல் என்பது நடந்ததில்லை.
நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் அப்பாவை போலவே மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழ்,தெலுங்கு, ஹிந்தியிலும் நடிக்கிறார். 2018ல் மகாநடி படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர் தொடர்ந்து 2022ல் சீதா ராமம், தீபாவளிக்கு வெளியான லக்கி பாஸ்கர் என தெலுங்கில் ஹாட்ரிக் வெற்றியை தந்துள்ளார். இவர் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகராக மாறியிருக்கிறார்.
மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைப்'. சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட் டோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பாடல் காட்சி படமாகி வருகிறது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு காலை 11:00 மணியளவில் இதன் சிறப்பு வீடியோவை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.ஏ.ஆர் ரஹ்மான் இசை. சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது ஒரு பாடல் காட்சி பட மாகிறது. அதன் படப்பிடிப்பு போட்டோவை பகிர்ந்து, 'இந்த ஆல்பத்தில் எனக்கு பிடித்த பாடல்' என திரிஷா குறிப்பிடப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்களாவது வெளியாகும். இந்த வாரம் நவ. 8 (நாளை) தமிழ் செல்வன் என்பவர் இயக்கிய 'இரவினில் ஆட்டம் பார்' என்ற படம் வெளியாவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சரவணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
45 இலவசப் பள்ளிகள், 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலைகள், 1800 மாணவர்கள் கல்வி. மேலும் இறப்பதற்கு முன் கண்ணை தானம் செய்தார்.மாபெரும் நடிகரான புனித் ராஜ்குமாரை நினைவுகூறுவோம், அவரைப் போல் இன்னொரு சூப்பர் ஸ்டார் இருக்க மாட்டார்
பான் இந்தியா நடிகராக பிரபலமாகிவிட்ட பிரபாஸ் தற்போது மாருதி இயக்கத்தில் 'ராஜா சாப்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி 24 மணிநேரத்தில் 8.3 மில்லியன் பார்வைகளைப் பெற்று இந்திய அளவில் சாதனை படைத்தது. இதற்கு முன் பவன் கல்யாணின் 'ப்ரோ' மோஷன் போஸ்டர் 5.83 பார்வைகளை பெற்று முதலிடத்தில் இருந்தது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 50 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டு 1974ல் கல்லுாரி படிப்பின்போது இ நடித்த முதல் நாடகத்தின் புகைப்படத்தை வெளியிட்ட சிரஞ்சீவி நர்சபூர் ஒய்என்எம் 'ராஜினாமா'. கோனா கோவிந்தராவ் எழுதியது ; நடிகராக முதல் அங்கீகாரம். 50 ஆண்டு நடிப்பு... தீராத மகிழ்ச்சி" என நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இன்றையடிஜிட்டல் யுகத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களே அதிகம் கேட்கப்படுகிறது. அவருடைய பாடல்கள் பல தளங்களில் கிடைத்தாலும், தனக்கென தனியாக யுடியூப் சேனல் ஒன்றையும் வைத்து பாடல்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது பின்னணி இசைகளை வெளியிடுவதற்காகவும் தனியாக ஒரு யுடியூப் சேனலை துவக்கியுள்ளார். அதில் அவர் இசையமைத்த திரைப்பட பின்னணி இசை தொகுப்புகளை வெளியிட உள்ளார்.
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க உள்ளார் ராஜமவுலி. இதற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ள மகேஷ்பாபு, பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகிறார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குள் இதன் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி, படம் திரைக்கு வரும்வரைஇந்த படத்திற்கான கெட்டப்பில் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள கூடாது என மகேஷ்பாபுவுக்கு கண்டிஷன் போட்டுள்ளார்.