விடாமுயற்சி' படத்தை முடித்துவிட்டு 'குட் பேட் அக்லி' படத் - தில் நடிக்கிறார் அஜித். அதோடு கார் ரேஸ் களத்தில் மீண்டும் இறங்கி உள்ளார். தற்போது 'அஜித் 'குமார் ரேஸிங்' என்ற பெயரில் கார் பந்தய அணியை துவக்கி, அதற்கான லோகோவையும் அவரது மேலாளர் மூலம் வெளியிட்டுள்ளார். அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித்தும், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஐரோப்பியா வில் நடக்கும் 24எச் கார் ரேஸிங்கில் போர்ஷே 992 ஜிடி3 கப்' பிரிவில் இவரது அணி பங்கேற்கிறது.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சொல்லிட்டு, தமிழ் நாட்டோட மத்திய பகுதி திருச்சில இருந்து வந்த ஒரு பையன் நடிச்சி இவ்ளோ சீக்கிரம் மேல் வரானா அவன நம்ம பாராட்டணும்,ஆதரவா இருக்கணும். சினிமாவுல ஆரோக்கியமான போட்டி வெச்சிக்கோங்க, இன்னைக்கு சிவகார்த்திகேயன் நடிச்ச படம் டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமா வசூல் ஆகுதுனா நீங்க அத விட சிறந்த படம் குடுக்க முயற்சி பண்ணுங்க அத விட்டுட்டு பொறாமைப்படுறது, இழிவா பேசுறது சரி இல்ல! நடிகர் நெப்போலியன்
.கார்த்தியின் 25வது திரைப்படத்தை முன்னிட்டு 25 சமூகசெயற்பாட்டாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.25 லட் சமும், நிதியுதவி தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற்ற ரூ.25 லட்சம் என ரூ.1 கோடி வழங்க உள்ளார் நடிகர் கார்த்திஇது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன். பாராட்டலாம். இவரை போல அனைவரும் முன்வந்தால் மகிழ்ச்சி,
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஜெயிலர்'. 'இதன் இரண் டாம் பாகம் உருவாக உள் ளது. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப் ஆகியோர் நடித்த நிலை யில் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கியமான வேடத் தில் நடிகர் தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
இந்தியன் 2 படுதோல்வி அடைந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் நடித்திருக்கும், தக்லைப் படத்தை எதிர்பார்க்கிறார். கமலஹாசன். இதையடுத்து இரட்டை ஸ்டன்ட் இயக்குனர்களான, அன்பறிவ் இயக்கும் அதிரடி, 'ஆக்க்ஷன்' படத்தில் நடிக்கப் போகிறார், கமலஹாசன். இந்த படத்தில், ஏ.ஐ., தொழில்நுட்பத்திலும் சில சண்டை காட்சிகள் உருவாக இருக்கிறது.
தீபாவளி ரிலீஸ் படங்கள்சிவகார்த்திகேயனின் - அமரன், ஜெயம் ரவியின் - பிரதர், கவினின் - ப்ளடி பெக்கர், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்,ஆகிய படங்கள் நாளை 31-ம் திே தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. அஜீத்தின் விடா முயற்சி டிரெய்லர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
கிடைக்கிற கேப்பில் படங்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள். இன்று அக். 25ல் "ஆங்காரம், தீபாவளி போனஸ், கண் பேசும் வார்த்தைகள், காட்டேணி, ல்தகா சைஆ, லூஸி, ஒற்றைப் பனை மரம், சேவகர், சீன் நம்பர் 52" ஆகிய 9 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தெலுங்கில் அபிஷேக் நாமா இயக்கத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகும் படம் 'நாகபந்தம்'. இதை பான் இந்தியா பட மாக வெளியிடும் நோக்கில் உருவாக் குகின்றனர். இதன் படப்பிடிப்பை நடிகர் சிரஞ்சீவி துவக்கி வைத் தார். "இதன் கதை இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களுடன் தொடர்புடைய நாகபந்தத்தைச்சுற்றி நடக்கும். மந்திரம், மர்மம் மற்றும் சாகசங்கள் அடங்கிய புதிய சாம்ராஜ்யத் திற்கு இந்த படம் அழைத்துச் செல்லும்" என்கிறார் அபிஷேக் நாமா.
நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தை விட்டு தனியாக பிரிந்து சென்ற பின் தன து தொழிலில் அதிக கவனம் எடுத்து வருகிறார் அந்த வகையில் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அதோடு ஒரு படத்தை டைரக்ட் செய்யவும் செய்கிறார் இந்த படத்தின் கதாநாயகனாக யோகிபாபு நடிக்க இருக்கிறார்.
“என் பிள்ளைகளுக்கு சொல்லும் அறிவுரை" நீயும் உங்க அம்மாவும் காஸ்ட்லியா துணி எடுக்க போற கடைக்கு வெளியே தான் நான் வேல செஞ்சிட்டு,சாப்பிட்டு இருந்தேன்". "நான் மேல. நீங்க கிழனு என் குழந்தைங்க மனசுல ஒரு துளி கூட எண்ணம் வந்துடக்கூடாது'கிழனு நினைக்கும் போது, உங்க அப்பா கிழ இருந்து தான் வந்தார்னு நினைச்சுக்கோங்க"