'விருமன்' படம் மூலம் தமிழில் அறிமுகமான அதிதி ஷங்கர், தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'நேசிப்பாயா' படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே 'பைரவம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். விஜய் கனகமெடலா இயக்கத்தில் பெல்லம் கொன்டா சீனிவாஸ் நடிக்கும் இப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் அதிதி நடிக்கிறார். இப்படம் தமிழில் வெளி வந்த 'கருடன்' படத்தின் தெலுங்கு ரீமேக்.
மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் 2008ல் 'டுவென்டி 20' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாகினர். தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இதில் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். டிசம்பரில் படப்பிடிப்பு துவங்குகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி உள்ளிட் டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. இருதினங்களுக்கு முன் இதன் டீசர் வெளியானது. 24 மணிநேரத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் 70 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்திய அளவில் 24 மணி நேரத்தில் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சலார்' டீசர் 116 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரின் 14 வது படத்தை ராகுல் சாங்கிருத்யன் இயக்குகிறார். அடுத்தாண்டு துவங்கும் இந்த படம் 1850 காலகட்ட கதையில் நடப்பதாக உருவாகிறது. இந்நிலையில் இதில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூவை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இவர் மம்மி, டார்க் மேன், பிளட் டைமண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆவார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பில் வரவேற்பை பெற்ற படம் 'கருடன்'. இதை தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலைகள் நடந்து வந்தன. இப்போது இதற்கு 'பைரவம்' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். சூரி வேடத்தில் பெல்லம் கொண்ட சீனிவாஸ் நடிக்கிறார். மஞ்சு மனோஜ், நர ரோகித் ஆகியோரும் முதன்மை வேடத்தில் நடிக்க, விஜய் கனகமெடலா இயக்குகிறார்.
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் வரும் பாலா படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார். இதுதவிர தனது சமூக சேவைகளின் மூலமும் கவனம் பெறுகிறார். தற்போது 'ராக்காயி' என்ற இசை ஆல்பத்தில் ஆடியுள்ளார். நடிகை தேவதர்ஷினியின் மகளான நியதி அவருடன் ஆடி உள்ளார். ஏ.கே.பிரியன்" இசையமைக்க, கார்த்திக் ஸ்ரீநிவாஸ், வருஷா பாலு பாடியுள்ளனர்.
பாயல் கபாடியா இயக் கத்தில் கனி குஸ்ருதி நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்'. பல் வேறு சர்வதேச திரைப்பட விழாக் களில் பங்கேற்றதோடு கேன்ஸ் பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகை விருது களை வென்றது. மும்பையில் பணியாற்றும் இரண்டு மலையாள நர்சு களின் கதை. இந்த படத்தை நடிகர் ராணா இந்தியா முழுக்க நவ., 22ல் வெளியிடுகிறார். "எனது படம் இந்திய தியேட்டர் களில் வெளியாக போகிறது. அதை காண ஆவலுடன் உள்ளேன்” என்கிறார் பாயல் கபாடியா.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம்னு சொல்லிட்டு, தமிழ் நாட்டோட மத்திய பகுதி திருச்சில இருந்து வந்த ஒரு பையன் நடிச்சி இவ்ளோ சீக்கிரம் மேல் வரானா அவன நம்ம பாராட்டணும்,ஆதரவா இருக்கணும். சினிமாவுல ஆரோக்கியமான போட்டி வெச்சிக்கோங்க, இன்னைக்கு சிவகார்த்திகேயன் நடிச்ச படம் “ டாப் 5 நடிகர்கள் படத்துக்கு சமமா வசூல் ஆகுதுனா, நீங்க அத விட சிறந்த படம் குடுக்க முயற்சி பண்ணுங்க! ”அத விட்டுட்டு பொறாமைப்படுறது இழிவா ,பொறாமையில் தவறாக பேசாதீர்கள்" நடிகர் நெப்போலியன் .அமரன் திரைப்படம் வெளியாகி 6நாட்களில் சுமார் ரூ. 163 கோடி வசூலித்துள்ளது.
இப்போ என் பையன் என்கிட்ட வந்து" நான் இந்த நடிகரோட ரசிகர் மன்றத்துல சேர போறேனு சொன்னா அதெல்லாம் வேண்டாம்,படத்தை பார்த்தீயா அதோட போய் பொழப்ப பாருனுதான் சொல்வேன்." “என் பையன்ட்ட இப்படி சொல்லிட்டு எனக்கு ரசிகர் மன்றம் வச்சு அதை வளர்த்து, மத்தவங்களோட பசங்கள கெடுக்குறது எந்த விதத்துல நியாயாம்?” ஹீரோக்கள் இதை பண்ண கூடாது,உங்க பசங்களுக்கு ஒரு நியாயம் ஊரான் பையனுக்கு ஒரு நியாயமா?-அரவிந்த்சாமி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா.ஜவான் மூலம் ஹிந்தியிலும் பிரபலமானார்.நடிப்பு தவிர்த்து நாப்கின், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு தற்போது அம்பானி குழுமத்துடன் நயன்தாரா கை கோர்த்துள்ளார். தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வாரிசான இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின்மூலம் தன் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.