நடிகர் ராம் சரண் மகள் கிளின் காராவை பார்த்துக் கொள்பவருக்கு மாதம் ரூ. 5 லட்சம் சம்பளம்
தெலுங்கு திரையுலகில் மெகா குடும்பம் சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துவிட்டார் ராம் சரண் .
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர் பான் இந்தியா நடிகராக வலம் வரும் இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் 2012ம் ஆண்டு உபாசனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணம் ஆகி 11 ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தவர்களுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது, குழந்தைக்கு கிளின் காரா என பெயரிட்டுள்ளனர்.
ராம் சரண் மற்றும் உபாசனா அவரவர் தொழிலில் பிஸியாக இருப்பதால் சாவித்ரி என்ற பெண்ணை குழநதையை பராமரிக்க நியமித்துள்ளனர்பாலிவுட் நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் குழந்தையைபராமரித்த இவர் தற்போது ராம் சரண் குழந்தையை பார்த்து வருகிறார்.அதற்காக இவருக்கு மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்களாம்.
0
Leave a Reply