ஆகர்நாத் சிவன்.இவரை தரிசித்தால் தேசப்பற்று அதிகரிக்கும்.
உத்தரபிரதேசத்தில் மீரட் நகர்கன்டோன்மென்ட்சர்தார்பஜாரில்காளிபல்தான்என்னும்இடத்தில் 'ஆகர்நாத்' என்னும் பெயரில் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார். இவரை தரிசித்தால் தேசப்பற்று அதிகரிக்கும்.
1857ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ராணுவப்படையும், அவர்களின் குடியிருப்பும் இங்கு இருந்தன. படையில் இருந்த இந்திய வீரர்களை கருப்பு ராணுவம் (காளி பல்தான்) என ஆங்கிலேயர்கள் இழிவாக குறிப்பிட்டு ' வந்தனர். இதை இந்தியர்கள் எதிர்த்தனர். இந்நிலையில் துறவி ஒருவர் இங்குள்ள கோயிலுக்கு வந்திருந்தார். அவரிடம் இந்திய வீரர்கள் ஆலோசித்ததன் விளைவாக சிப்பாய் கலகம் உருவானது. சுதந்திர போராட்டத்திற்கு இதுவே வித்திட்டது. இதற்கு காரணமானவர்கள் மரண தண்டனை பெற்றனர். இதன்பின் இக்கோயில் பிரபலம் அடைந்தது.
விஜய நகர மன்னர் கிருஷ்ண தேவராயர், மராட்டிய மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். 1968ல் கோயில் புதுப்பிக்கப்பட்டு செவ்வக வடிவ அடுக்குகளின் மீது மூன்று தளங்களாக உள்ளது. 4 கிலோ எடை கொண்ட தங்கக்
கலசத்துடன் கோபுரம் 2001ல் நிறுவப்பட்டது. கருவறையில் சுயம்பு லிங்கமும், அதன்பின்புறம் சலவைக்கல்லால் ஆனசிவனும், பார்வதியும்நின்றநிலையில்உள்ளனர்.சிங்கவாகனத்தில்துர்கை, ராதாகிருஷ்ணர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. கோயிலின் பின்புறத்தில் உள்ள சுதந்திரப் போராட்டத்தின் நினைவுச் சின்னம்ஒன்றும் உள்ளது. இங்கு சிப்பாய்க்கலகத்தை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 10ல் விழா நடக்கிறது.சிரவண (ஆவணி) மாத திங்கள் கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும்.
0
Leave a Reply