25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


'பரோட்டா' சூரிடூ “சூரி என்று வளர்ந்து நிற்கிறார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'பரோட்டா' சூரிடூ “சூரி என்று வளர்ந்து நிற்கிறார்

'வெண்ணிலா கபடிக் குழு' படத்தில்'பரோட்டா' காட்சியில் பிரபலமானதால்'பரோட்டா' சூரி என்று அழைக்கப்பட்டு பிரபலமானார் சூரி. தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து'விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் உயர்ந்தார்.'பரோட்டா' சூரி இப்போது'பட விழாக்களின்' சூரி என்று வளர்ந்து நிற்கிறார்.
கடந்த மாதக் கடைசியில் நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 4 வரை நடைபெற்ற 53வது சர்வதேச திரைப்பட விழாவில் சூரி நடித்த'விடுதலை, ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. அதற்காக அப்படக் குழுவினருடன் அந்தத் திரைப்பட விழாவில் சூரி கலந்து கொண்டார்.

அடுத்து ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெற்று வரும்74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சூரிந டித்துள்ள'கொட்டுக்காளி' படம் திரையிடப்பட்டுள்ளது. பிப்ரவரி15முதல்25வரை இத்திரைப்பட விழா நடைபெறுகிறது. பிப்ரவரி16ம் தேதி இப்படம் அங்கு திரையிடப்பட்டது. அடுத்து பிப்ரவரி18,19,20,25 ஆகிய நாட்களிலும் திரையிடப்பட உள்ளது. அதற்கான டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனையாகிவிட்டன.

இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து சூரி,“உலக அரங்கில் கொட்டுக்காளி!! பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பன்னாட்டு பார்வையாளர்கள் படத்தை பார்த்து கொண்டாடியது பெரும் மகிழச்சி! நமது வாழ்வியலையும், தமிழ் சினிமாவையும் கடல் கடந்து கொண்டு வந்து சேர்த்த இயக்குநர் தம்பி வினோத்ராஜுக்கும், தம்பி சிவகார்த்திகேயனுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News