25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சிறப்பு கல்வி கடன் முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறப்பு கல்வி கடன் முகாம்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ/மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் 13.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவிருந்த சிறப்பு கல்வி கடன் முகாம், நிர்வாக காரணங்களால் 19.09.2024(வியாழக்கிழமை) அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in  என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் கல்வி கடன் விண்ணப்ப நகல், மாணவ/மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட bonafide சான்றிதழ் மற்றும் கல்விக்கட்டண விவரம், பத்து பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டபடிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல்பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட கல்லூரி சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இம்முகாமில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து 15 தினங்களுக்குள் தகுதியான அனைவருக்கும் கடன் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News