25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


. வசூலில் சாதித்த சின்ன பட்ஜெட் படங்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

. வசூலில் சாதித்த சின்ன பட்ஜெட் படங்கள்

அதிக அளவில் பட்ஜெட் படங்கள்தான் வெற்றி பெறும் என்பதை சின்ன பட்ஜெட் படங்கள் வசூலை அதிகமாக்கி வெற்றி பெற்றுள்ளன. 

 வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச்31ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் விடுதலை படம் வெளியானது. இப்படத்தில் நடிப்பதற்கு முன் காமெடி நடிகராக இருந்த சூரி இதில் முதன்முதலாக ஹீரோவாக நடித்தார். அப்படி நடித்த இந்த படம் மக்கள் ஹீரோவாக வரவேற்கும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பும் கதைக்கு ஏற்ற தத்ரூபமான விஷயங்களும் அமைந்து இருந்தது. அதனாலேயே மக்கள் இப்படத்திற்கு பெரிதும் வரவேற்பு கொடுத்தார்கள்.

.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் திரைப்படம்.இப்படத்தின் கதை ஹரிஸ்க்கும், எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே நடக்கும் வரட்டு கௌரவத்தால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி அழகாக விவரித்து காட்டப்பட்டிருக்கும். படம் பார்க்கிற இரண்டு மணி நேரம் எந்தவித எரிச்சலும் இல்லாமல் படம் பார்க்கும் திருப்தியை கொடுத்தது

 ரா. வெங்கட் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காளி வெங்கட் மற்றும் ராமு நடிப்பில் கிடா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்டையும் பாசத்தையும் வைத்து தாத்தா பேரனின் அன்பை வெளிப்படுத்தும் கதைஇப் படம் சர்வதேச திரைப்படம் விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.:

 யுவராஜ் தயாளன் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் நடிப்பில் இறுகப்பற்று திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது காதலித்து கல்யாணம் செய்த தம்பதிகள் மற்றும் பெற்றோர்களால் பார்த்து திருமணம் செய்த தம்பதிகள் இருவருக்கும் வாழ்க்கையில் நடக்கும் இயல்பான விஷயங்களை காட்டும் விதமாக கதை ,மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுவிட்டது.

எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சித்தா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமையை எதிர்த்து காட்டும் விதமாக எந்தவித அலப்பரையும் காட்டாமல் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News