அனிமல் படம் - கோடிகளில் வசூல்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜுன் ரெட்டி என்னும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை வைத்து பேன் இந்திய அளவில் அனிமல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த வாரம் திரைக்கு வந்த படம் இப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் நெகட்டிவ் ஆக தான் விமர்சனங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், ரசிகர்கள் இந்த படத்தை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.
அதிலும் வட இந்தியாவில் இப்படம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.இந்நிலையில் ஷாருக்கான், சல்மான் படங்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அனிமல் படம்4 நாட்களில்410 கோடிகளை வசூல் செய்து மிரட்டியுள்ளது.இதில் வட இந்தியா மட்டும் ரூ250 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரன்பீர் கபூர் தான் அடுத்த பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஷாருக்கான், சல்மான் கானை அச்சத்தில் ஆழ்த்திய அனிமல் வசூல்.
0
Leave a Reply