25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தீயாக பரவின, நடிகர் விஜய் மட்டுமின்றி தயாரிப்பாளர் லலித்குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட வீடியோ காட்சிகளை அந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு உணவு தயார் செய்து கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மாஸ் காட்டிய விஜய்: லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிம்பிளாக வந்து அந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக மாற்றி, ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் நடிகர் விஜய் ஈர்த்து இருந்தார். நடிகர் விஜய் வரும்போது அவருக்கு உற்சாக வரவேற்பை மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த வீடியோவையும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனியாக வெளியிட்டுள்ளார்.விஜய் அம்மா, அப்பா: நடிகர் விஜய் மட்டுமின்றி அவரது தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு உண்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் தற்போது சினிமா பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு புக் செய்யப்பட்டு வருகிறது

விக்னேஷ் சிவனை உட்கார வைத்து: மேலும், இப்ப நான் விக்னேஷ் சிவனை உட்கார வைத்து அவருக்கு மாதம்பட்டி ரங்கராஜ் உணவு பரிமாறும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. ராக்ஸ்டார் அனிருத், கவிஞர் பா விஜய், விஜய் அட்மின் ஜெகதீஷ், புஸ்ஸி ஆனந்த், நடிகர் சூரி, சாந்தனு உள்ளிட்ட பல பிரபலங்கள் லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காட்சிகளை மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ளார். உணவு மெனு: ஜாலபெனோ சீஸ் சமோசாவில் ஆரம்பித்து, பானிபூரி ஸ்டால், ஃப்ரூட் சாலட், விதவிதமான இனிப்பு பண்டங்கள், ஐஸ்கிரீம் ஸ்டால்கள் என களைகட்டிய நிலையில், மெயின் மெனுவாக கோதுமை தந்தூர் ரொட்டி குல்ச்சா, மாதம்பட்டி ஸ்பெஷல் கொத்து பரோட்டா - தண்ணி குழம்பு, ராஜஸ்தானுக்கு செடி - குஜராத்தி கடி, மினி தட்டு இட்லி - தேங்காய் சட்னி, போடி கோதுமை தோசை - வெஜ் ஆம்லெட், கொள்ளு ரசம் சாதம், சிறிய வெங்காயம் சாமை தயிர் சாதம் - இஞ்சி ஊறுகாய் என மெயின் கோர்ஸ் களைகட்டியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News