சச்சின், விஸ்வநாத் ஆசிய குத்துச்சண்டை கால்இறுதிக்கு முன்னேறினார்.
மங்கோலியா தலைநகர் உலான்பத்தாரில் ,ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இதில் நேற்று நடந்தபோட்டியில், ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சச்சின் சிவாச் 4-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் பயந்தலாவின் பயார் குவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். சச்சின் சிவாச் கால் இறுதியில் சீனதைபேயின் செங் வெய் லீயை சந்திக்கிறார் எதிர்கொள்கிறார்.
இந்திய வீரர் விஸ்வநாத் சுரேஷ் ,50கிலோ எடைப் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் , 5-0 என்ற கணக்கில் கிர்கிஸ்தானின் பெக் ஸாட் எர்ஷோவை தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் விஸ்வநாத் சுரேஷ், உலக சாம்பியனான சன்ஜார் தாஷ்கன் பேயை (கஜகஸ்தான்) எதிர்கொள்கிறார்.
0
Leave a Reply