தமிழக அணி தேசிய பெண்கள் கிக் பாக்சிங் போட்டியில் 'சாம்பியன்'.
சென்னையை அடுத்தபையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ,ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் ,கேலோ இந்தியா பெண்கள் தேசிய கிக் பாக்சிங் லீக் போட்டி ,3 நாட்கள் சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் தமிழக அணி 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆசிய போட்டியில் பதக்கம் வென்றவரான நீனா, உலகக்கோப்பை போட்டியில் பதக்கம் வென்றவரான சுபாஷினி ஆகியோர் தங்கள் பந்தயங்களில் ,தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். மராட்டியம் 9 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்என 16 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்தது.
இந்திய பெண்கள் கபடி அணியின் முன்னாள் கேப்டன் கவிதா செல்வராஜ், காமன்வெல்த் வலுதூக்குதல் போட்டியில் பதக்கம் வென்றவரான டாக்டர் ஆர்த்தி, ஆகியோர் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினர்.
0
Leave a Reply