விளையாட்டு போட்டிகள் .18th November 2025
சவுதி அரேபியாவில் ,ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் நடக்க உள்ளது. இதற்கான 3வது கட்ட தகுதிச் சுற்றில் இந்தியா, ஆசிய கோப்பை வாய்ப்பை இழந்தது. இன்று தாகாவில் நடக்கும் தனது கடைசி போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு சிட்னியில் நடக்கும் சாலஞ்சர் கோப்பை முதல் சுற்றில் இந்தியாவின் கரண் சிங் 7-6, 6-3 என்ற நேர்செட்டில் சக வீரர் ஆர்யன் ஷாவை வென்றார்.
இன்று சிட்னியில் ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் தொடர்,. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஒற்றையர்பிரிவில் லக்சயா, பிரனாய் இதில் பங்கேற்கின்றனர்.
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் எகிப்தின் கெய்ரோவில் ,ஆண்களுக்கான 25 மீ. சென்டிரல் பயர் பிஸ்டல் பிரிவில்இந்தியாவின் குர்பிரீத் சிங், வெள்ளிப்பதக்கம் வென்றார். இத்தொடரில் 3 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் இந்தியா 13 பதக்கம் வென்று பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
0
Leave a Reply