விளையாட்டு போட்டிகள் 17th november 2025
உலக குத்துச்சண்டை கோப்பை தொடர் பைனல்ஸ்உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், பெண்களுக்கான 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரீத்திபவார், உஸ்பெகிஸ்தானின் நிகினா உக்டமோவா மோதினர். உடல் நிலைகாரணமாக , ஒரு ஆண்டுக்கு பின் போட்டிக்கு திரும்பிய பிரீத்தி 5-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்தியாவின் மீனாக்ஷி பெண்களுக்கான 48 கிலோ பிரிவு காலிறுதியில் கஜகஸ்தானின் போலட் அக்போட்டை வீழ்த்தினார். மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அங்குஷ் பங்கால் (80 கிலோ), நரேந்தர் பெர் வால் (+90 கிலோ) வெற்றி பெற்றனர்.
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் எகிப்தில் நடக்கும் 25 மீ., 'சென்டர் பயஸ் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஹர் பிரீத் சிங் (291.10 புள்ளி) 2வது இடம் பிடித்தார்.
உலக கோப்பை ஸ்னுாக்கர் லீக் போட்டிஓமனில் நடக்கும் இந்தியாவின் பங்கஜ் அத்வானி 3-0 என, பஹ்ரைனின் ஹேஷாம் அல்சாகரை வீழ்த்தினார். தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த அத்வானி, 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான பில்லி ஜீன்கிங் கோப்பை டென்னிஸ்பெங்களூருவில் நடந்த 'பிளே-ஆப்' போட்டியில் இந்திய அணி 0-2 என நெதர்லாந்திடம் வீழ்ந்தது. ஏற்கனவே சுலோவேனியாவிடம் தோற்ற இந்தியா, பைனலுக்கான தகுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.
0
Leave a Reply