டெப்லிம்பிக்சில்' தங்கம் வென்ற இந்திய ஜோடி !
காது கேளாதோருக்கான 'டெப் லிம்பிக்ஸ்' 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், நடக்கிறது. இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர்.
10 மீ., 'ஏர் ரைபிள்' துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணி,தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் 23, மஹித் சாந்து 21, ஜோடி, தென் கொரி யாவின் ஜியான் டெய்ன்,கிம்ஊரிம் ஜோடியை சந்தித்தது.துவக்கத்தில் முன்னிலை 4-0 என பெற்ற இந்திய ஜோடி, முடிவில் 17-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.
தனுஷ் டோக்கியோ 'டெப்லிம் பிக்சில்' வென்ற இரண்டாவது தங்கம். முன்னதாக இவர், தனிநபர் 10 மீ., ‘ஏர் ரைபிள்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார். தவிர - பெண்களுக்கான தனிநபர் பிரிவில் வெள்ளி வென்ற மஹித் சாந்துவுக்கு இது முதல் தங்கம் ஆனது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 10 மீ., 'ஏர் ரைபிள்' கலப்பு அணிகள் இந்தியாவின் முர்டசா வானியா, கோமல் மிலிந்த் ஜோடி, 16-12 என உக்ரைனின் லைகோவா, ஒலெக்சாண்டர் ஜோடியை வீழ்த்தியது.
இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்றுள்ளது.
0
Leave a Reply