டெப்லிம்பிக்' துப்பாக்கிசுடுதலில் இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கம் வென்றுள்ளது .அனுயா பிரசாத் தங்கம் வென்றார் .
காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் ('டெப்லிம் பிக்ஸ்') 25வது சீசன் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், இந்தியா சார்பில் 45 வீரர், 28 வீராங்கனைகள் என மொத்தம் 73 பேர் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ,இந்தியா சார்பில் அனுயா, பிரஞ்ஜலி பங்கேற்றனர்.டெப்லிம்பிக் தகுதிச்சுற்றில் 572 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்த பிரஞ்ஜலி, புதிய உலக சாதனை படைத்தார். அனுயா 564 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்றார். இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.இதில் அனுயா, 241.1 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். பிரஞ்ஜலிக்கு (236.8) வெள்ளி கிடைத்தது.
'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில், ஆண்களுக்கான 10 மீ., 2022 டெப்லிம்பிக்கில் தங்கம் வென்ற, இந்தியாவின் அபினவ் தேஷ்வல், உலக சாதனையை 576 புள்ளி) சமன் செய்து, பைனலுக்கு முன்னேறினார். பைனலில் 235.2 புள்ளி மட்டும் எடுத்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.அனுயா பிரசாத் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தியா இதுவரை இந்தப் போட்டிகளில் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது, மேலும் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
0
Leave a Reply