இந்தியாவின் ரோகித் சர்மா ஐ.சி.சி ஒருநாள் போட்டி பேட்டர் தரவரிசையில் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி. சி.,) ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட் டியலை , துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் சர்மா, 781 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதன் முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ரோகித் சதம் (121*) விளாசினார் .இதன்மூலம் ஐ.சி. சி., தரவரிசை பட்டியலில் அதிக வயதில் (38 ஆண்டு, 182 நாள்) 'நம் பர்-1' இடம் பிடித்த வீரரானார்.
0
Leave a Reply