இந்தியா ஆசிய யூத் விளையாட்டில் ஒரே நாளில் 21 பதக்கம் வென்றது.
ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் பஹ்ரைனின் மனாமா நகரில் ,பீச் மல்யுத்தம் 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான 55 கிலோ பிரிவுபைனலில் இந்தியாவின் அஞ்சலி, 2-1 என வியட்நாமின் தோம் தாவோவை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 60 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சுபாஷ், 2-0 என ஈரானின் அமிராலியை வென்று, தங்கம் வென்றார்.
90 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அர்ஜுன், 2-1 என ஈரானின் முகமதுமதியை வீழ்த்தி தங்கம் கைப்பற்றினார். மற்ற - இந்திய வீரர்கள் ரவிந்தர் (80 கிலோ), சுஜாய் (70 கிலோ) பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
இந்தியாவின் சந்திரிகா (50 கிலோ), பெண்களுக்கான குத்துச்சண்டை பைனலில் 5-0 என உஸ்பெகிஸ்தானின் கும்ரின் சோவை வென்று ,தங்கம் கைப்பற்றினார்.
இந்தியாவின் ஆஹானா (50 கிலோ), வடகொரியாவின் ஜோங் ஹயாங்கை வென்று தங்கம் கைப்பற்றினார்.
இந்தியாவின் குஷி சந்த் 46கிலோ பிரிவில், 4-1 என ஜின் ஜியுவை (சீனா) வென்று, தங்கம் வென்றார்.
இதுவரை இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 17 வெண்கலம், என மொத்தம் 47 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது.
0
Leave a Reply