25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் ,பயிற்சியின்போது கழுத்தில் பந்து தாக்கியதால்  மரணம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் ,பயிற்சியின்போது கழுத்தில் பந்து தாக்கியதால்  மரணம் .

ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின். பெர்ன்ட்ரீ கல்லி, ராவ்வில்லே, எடிசன் பார்க் கிளப் அணிகளுக்காக விளையாடினார்.'T-20' போட்டிக்கு தயாராகும் வகையில், மெல்போர்னின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள பெர்ன்ட்ரீ கல்லி மைதானத்தில் சக வீரர்களுடன் இணைந்து, கடந்த அக். 28ல் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது 'த்ரோடவுன்' முறையில் சக வீரர் ஒருவர் வீசிய பந்தை எதிர்கொண்டார் பென். 

தலையில் 'ஹெல்மெட்' அணிந்திருந்த போதும், பந்து  கழுத்து, தலைப்பகுதியில் பலமாக தாக்கியது. உடனடியாக மயங்கி சரிந்த இவரை, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 'வென்டி லேட்டர்' பொருத்தப்பட்டு சிகிச்சை தரப்பட்டது.  இரண்டு நாள் சிகிச்சை பலன் தராத நிலையில், பென் மரணம்   அடைந்தார். எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, பென்னுக்கு வலைப் பயிற்சியில் பந்து வீசிய சக வீரரை, அதிகம் பாதித்து இருக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News