25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


16-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

16-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர்  மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (25.01.2026) தேர்தல் பிரிவின் மூலம் 16-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல் ஆணையர் அவர்கள் வெளியிட்ட விழிப்புணர்வு காணொளி காட்சிகளை மாணவர்கள் பார்வையிட்டனர்.மேலும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை, ஓவியம், கோலம்  உள்ளிட்ட போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.
 
பின்னர், புதிய வாக்காளர்களாக பதிவு செய்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ ரமணாஸ் பெண்கள் கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவி எஸ்.சண்முகபிரியா என்பவர் உரையாற்றினார்.மேலும், கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பந்தல்குடி கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பெ.கவிதா என்பவர் கட்டுரை வாசித்தார்.இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கம் தேர்தல் ஆணையம். இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளான ஜனவரி 25 ஆம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக 2011ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 தகுதியுள்ள அனைவரையும் விடுதலின்றி வாக்காளராகப் பதிவு செய்வதன் மூலம் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவது மற்றும் தேர்தல் நடைமுறைகளில் குடிமக்களின் பங்கெடுப்பை அதிகரிப்பது ஆகியவையே இந்நாளினைக் கொண்டாடுவதன் நோக்கமாக உள்ளது. 18-வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களும் வாக்காளராகப் பதிவு செய்து கொண்டு உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தில் பங்கெடுக்க இயலும். தமிழ்நாட்டில்  சிறப்புத் தீவிரத் திருத்த முறையில் புதிதாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி முன்னதாக 16,26,485 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது, சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வரைவு பட்டியலில் 14,36,521 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தங்களது பெயர் சரியான முறையிலும் சரியான இடத்திலும் பதிவாகி உள்ளதா என்றும் சரிபார்த்து, பெயரை சேர்த்துக் கொள்ளவோ, தேவை ஏற்பட்டால் திருத்தங்கள் செய்து கொள்ளவோ வேண்டும்.நமது நாட்டை ஆட்சி செலுத்தும் ஆட்சியாளர்களை குடிமக்களாகிய நாமே தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுப்பதே மக்களாட்சி.நமக்கு தேவையான படிப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளும் நாம் தேர்ந்தெடுக்கூடிய தலைவர்களால் உருவாக்கக் கூடிய கொள்கைகளால் தான் கொண்டு வரப்படுகின்றன.அப்படிப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்க நம்முடைய வாக்குகளை நாம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். நடைபெறும் தேர்தல்கள் மக்களுக்கு தேவையான சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் அமைதியானதாகவும் நடைபெற குடிமக்கள் அனைவரும் சீரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.தேர்தல்களில் அச்சமின்றியும், மதம், சாதி, இனம், வகுப்பு மற்றும் மொழி ஆகிய பாகுபாடு இல்லாமல் வாக்களிக்க வேண்டும். மேலும் எந்தவொரு தூண்டுதலுக்கு ஆளாகாமல் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம், நமது நலன் கருதும் மரபுகளைக் காப்பதுடன் தேர்தல்களின் மாண்பை நிலை நிறுத்துவோம்.

இந்திய ஜனநாயகம் என்றென்றும் துடிப்புடன் இயங்க, அதன் இதயமாக உள்ள வாக்காளர்களாகிய நாம், வாக்காளர் என்பதில் பெருமை கொள்வதோடு, 100 சதவீதம் விடுதலின்றி நேர்மையாக வாக்களிப்போம் எனவும் பெருமிதம் கொள்வோம் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நமது இலக்கு 100 சதவிகிதம் வாக்குப்பதிவு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து,  16- வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்தமாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு மையத்தினையும், வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு நடமாடும் வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டார்.மேலும், 16 ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்டில்(Selfei Stand) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புகைப்பட எடுத்துக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, தேர்தல் வட்டாட்சியர் திரு.ரமணன்,  அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் திரு.செந்திவேல், எஸ்.பி.கே.கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.இராதா,  கல்லூரி செயலாளர் திரு.ஆசைத்தம்பி, எஸ்.பி.கே. பள்ளி செயலாளர் திரு.காசிமுருகன்,அரசு அலுவலர்கள்,  பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *