25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தமிழகத்தின் தான்யா, விஷ்ணு, யுவராஜ் தேசிய ஜூனியர் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகத்தின் தான்யா, விஷ்ணு, யுவராஜ் தேசிய ஜூனியர் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்றனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், 40 வது சீசன், சிறப்பாக செயல்படும் பட்சத்தில், 2026ல் அமெரிக்காவில் நடக்கவுள்ள ஜூனியர் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் பங்கேற்க தகுதி பெறலாம்.

தமிழகத்தின் தான்யா16 வயதுக்கு உட்டோருக்கான (பெண்கள்) நீளம் தாண்டுதலில், 4.23 மீ., தாண்டி தங்கம் வென்று, ஜூனியர் அரங்கில் புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2024ல் அனன்யா, 4.05 மீ., தாண்டியதே அதிகமாக இருந்தது. தவிர, 2 முதல் 4 வரையிலான இடங்களை பெற்ற திக் ஷா (4.11, ஹரியானா), அனாமிகா (4.08, கேரளா), கின்ஜல்பென் (4.07, குஜராத்)என மூவரும் தேசிய சாதனை படைத்தனர்.

தமிழகத்தின் அபிநாத் 16 வயது ஆண்கள் பிரிவு நீளம் தாண்டுதலில் (4.94 மீ.,) புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார். தமிழகத்தின் விஷ்ணு (31.74 வினாடி), குருதீப் (352.02) என இருவரும் 400 மீ., தடை ஓட்டத்தில் தங்கம், வெள்ளி கைப்பற்றினர். 4X400 மீ., கலப்பு தொடர் ஓட்டத்தில் (20 வயதுக்கு உட்பட்ட) தமிழகத்தின் ஸ்ரீநிவாஸ், சக்தி ஸ்ரீ, விஷ்ணு, அக்ஸ்லின் கூட்டணி (3:32.76 நிமிடம் ) வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

தமிழகத்தின் பிரித்திகா (400 மீ., தடை ஓட்டம், 1:02.79 நிமிடம்), உவின் (800 ., ஆனந்தன் 1:50.60 நிமிடம்), அம்பி ரியஷ் (உயரம் தாண்டுல், 1.96 மீ.,), வெண்கலப் பதக்கம் வென்றனர்.

 தமிழகத்தின் யுவராஜ் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான டிரிபிள்ஜம்ப்' போட்டியில் (15.61 மீ.,) தங்கமும் ,பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில்சுபா தர்ஷினி (24.35) வெள்ளியும் வென்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News