25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மருத்துவ நன்மைகள் கொண்ட வேப்பம் பூ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மருத்துவ நன்மைகள் கொண்ட வேப்பம் பூ

வேப்பமரத்தின் இலை, வேர், காய், பழம், பூ மற்றும் வேர் என அனைத்து பாகங்களிலும் மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளது. அதனால்தான் வீட்டுக்கு ஒரு வேப்பமரம் முன்னோர்கள் வளர்த்தனர்.

வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டது என்றாலும் வேப்பம் பூ அதில் சிறப்பு மிக்கது.

வேப்ப மரத்தின் பூக்களை மென்று சாப்பிட்டால் ஏப்பம் வருவது, பசியின்மை மற்றும் வாயுத்தொல்லை சரியாகும்.

வேப்பம் பூவில் துவையல் அல்லது ரசம் வைத்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி, மயக்கம் குணமாகும்.

வேப்பம் பூவை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வர பித்தம் தெளியும்.

வேப்பம் பூவில் உள்ள கசப்புத்தன்மை குடலில் உள்ள புழுக்களை அழித்து குடலை சுத்தப்படுத்தும்.

சூடான நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, தலையில் நீர் கோர்த்தல் பிரச்சினைகள் சரியாகும்.

வேப்பம் பூவை தேனீராக செய்து குடித்து வந்தால் வயிறு பிரச்சினைகள், மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News