கேஸ் பர்னரை பளபளப்பாக சுத்தம் செய்ய......
பர்னரை அடுப்பிலிருந்து எடுத்து, வெதுவெதுப்பான சோப்பு கலந்த' நீரில் 15-20 நிமிடம் ஊறவைக்கவும்.
பிடிவாதமான அழுக்கை அகற்ற பேக்கிங் சோடா + சிறிதளவு வினிகர் சேர்த்து தேய்க்கவும்.
எண்ணெய் மற்றும் கருமையை அகற்ற எலுமிச்சை சாறு + பேக்கிங் சோடா சேர்த்து தேய்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பர்னாரின் துளைகளில் அடைப்பு இருந்தால், மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்யுங்கள். அதிகமாக குத்தி விரிவாக்க வேண்டாம்.
நன்றாக தண்ணீரில் கழுவி, முழுமையாக உலர்ந்த பிறகே மீண்டும் அடுப்பில் பொருத்தவும்.
பர்னர் ஈரமாக இருந்தால் தீ சரியாக எரியாது. அதனால் முழுவதும் உலர்ந்திருப்பதை உறுதி செய்யுங்கள்.
வாரத்திற்கு ஒருமுறை சுத்தம், செய்தால், பர்னர் அடைப்பு ஏற்படாமல் நீண்ட நாட்கள் நன்றாக செயல்படும்.
மாதத்திற்கு 2-3 முறை ஆழமாக சுத்தம் செய்தால், தீ சீராக எரிந்து எரிவாயு பயன்பாடும் சீராக இருக்கும்.
சிறிய பராமரிப்பு, பெரிய பாதுகாப்பு -சுத்தமான பர்னர் சமையலை எளிதாக்கும்.
0
Leave a Reply