25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


அசால்டாக எடை குறைக்கும் திமிங்கலம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அசால்டாக எடை குறைக்கும் திமிங்கலம்.

மனிதர்களை விட பல நூறு மடங்கு அதிக எடை கொண்ட ஒரு மிகப்பெரிய உயிரினம், வெறும் இரண்டு மாதங்களில் தனது உடல் எடையில் கணிசமான அளவை குறைத்துக் கொள்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

அந்தச் சாதனையைச் செய்வது ஹம்ப்பேக் திமிங்கலம் (Humpback Whale).

ஒவ்வொரு ஆண்டும் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு இடம்பெயர்கின்றன. மேற்கு அட்லாண்டிக் பகுதிகளில் இருந்து தென் அமெரிக்காவின் கொலம்பியா கடற்கரைப் பகுதிகளுக்கு இனப்பெருக்கத்திற்காக அவை பயணம் செய்கின்றன.

இந்த நீண்ட பயணத்தின்போது தொடர்ந்து உணவு கிடைப்பது சாத்தியமில்லை. எனவே, பயணத்துக்கு முன்பே உடலில் அதிக அளவு கொழுப்பைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.

ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ட்ரோன்கள் மூலம் ஹம்ப்பேக் திமிங்கலங்களை கண்காணித்து அவற்றின் உடல் அளவு மற்றும் எடை மாற்றங்களை ஆய்வு செய்துள்ளனர்.

நீண்ட தூரப் பயணத்தின்போது உடலில் சேமித்து வைத்திருக்கும் கொழுப்பை ஆற்றலாக மாற்றிக் கொள்வதால், அவற்றின் உடல் எடை கணிசமாகக் குறைகிறது.

சில ஆய்வுகளின்படி, இடம்பெயர்வு காலத்தில் திமிங்கலங்கள் தங்கள் உடல் எடையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை இழக்கக்கூடும்.

மனிதர்களுக்கு கடினமான எடை மாற்றம்... திமிங்கலங்களுக்கு இயற்கையான வாழ்க்கைச் சுழற்சியின் ஒரு பகுதியாகவே இருக்கிறது!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News