பொடுகு பிரச்சனையை தீர்க்க....
வாழைப்பழம் எலுமிச்சை சாறு முட்டை வெள்ளை கரு ஆகியவற்றை கலந்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு சுத்தமாக இருக்காது முடி உதிர்வும் இருக்காது.
கோவக்காய் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
ஆலிவ் ஆயில் தயிர் முட்டை வெள்ளை கரு எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் முடி வலுவாக இருக்கும் முடி உதிர்வும் குறைந்துவிடும்.
வெந்தயத்தை அரைத்து அதனை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். அதேபோல, தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை கண்டிப்பாக நீங்கும்.
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் தலையை அலசுங்கள். இதுபோன்ற எண்ணற்ற இயற்கை வழிகள் மூலம் உங்கள் பொடுகு பிரச்சனையை தீர்க்கலாம்.
0
Leave a Reply