தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம்
தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் ஆகியோருக்கு, குடற்புழு நீக்கும் திட்டத்தின் கீழ் “தேசிய குடற்புழு நீக்க நாள்“ முகாம் நமது விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முறையாக 09.09.2022 வெள்ளிக்கிழமை அன்றும் மற்றும் விடுபட்டவர்களுக்கு 16.09.2022 வெள்ளிக்கிழமை அன்றும் நடைபெற உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் மொத்தம் 5,95,026 குழந்தைகளுக்கும் மற்றும் 1,33,884 எண்ணிக்கையில் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் ஆக மொத்தம் 7,28,910 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
குடற்புழு தொற்றினால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், படிப்பில் கவனமின்மை, பசியின்மை, இரத்தசோகை ஆகியவை ஏற்படும். எனவே, குடற்புழு தொற்றிலிருந்து விடுபட அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம்.
மதிய உணவு சாப்பிட்ட பின் அரை மணி நேரம் கழித்து இம்மாத்திரைகள் Ïடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதனால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது. இம்மாத்திரைகள் மாவட்டத்தில் உள்ள 1,743 பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமும் மற்றும் 1,504 அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலமும், 1 வயது முதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும். ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு அக்காப்பகத்திலேயே அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படும்.
1 வயது முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் ½ மாத்திரை அளவு வழங்கப்படும். 2 வயதிற்கு மேற்பட்ட 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் 1 மாத்திரை அளவு வழங்கப்படும். சிறிய குழந்தைகளுக்கு மாத்திரையை நன்றாக பொடி செய்து தண்ணீருடன் கலந்து கொடுக்கப்படும். குழந்தைகள் நோய் வாய்ப்பட்டிருந்தால் மாத்திரை வழங்கப்படாது.
எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குழந்தைகளை குடற்புழு தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply