ஆதாரில் திருத்தம் செய்ய எங்கும் அலைய வேண்டாம்
இந்திய குடிமகன்களாகிய ஒவ்வொருவருக்கும்வாக்காளர் அட்டை எப்படி முக்கியமாக இருந்ததோ அதுபோன்று தற்போது ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை கூட18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் உள்ளது, ஆனால் ஆதார் அட்டை18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆதார் அட்டையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்தால் கூட அது பாதகமாகிவிடும், அதேசமயம் ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருப்பின்,அதனை திருத்தம் செய்வது குறித்து அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆதார் அட்டையில் திருத்தத்தங்களை மேற்கொள்ள அரசு பல்வேறு வழிவகைகளை செய்திருக்கிறது.
இதுவரை நாம் ஆதார் அட்டைகளில் பெயர், பிறந்த தேதி, முகவரி, போன்ற எதையாவது திருத்தம் செய்ய வேண்டுமானால் வங்கிகளுக்கோ அல்லது தலைமை தபால் நிலையங்களுக்கோ தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது நீங்கள் அப்படி வெளியில் அலைய வேண்டிய தேவையில்லை, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள, உங்கள் ஊரிலேயே இருக்கும் தபால் நிலையத்தின் கிளைகளுக்கு சென்றே மாற்றி கொள்ளமுடியும். தற்போது தபால் துறை கிராமின் தாக் சேவாக்களிடம் டிரான்ஸாக்ஷன் செய்வது, உள்ளிட்ட பல சேவைகளுக்கான அணுகலை வழங்கியுள்ளது,
டெபாசிட் போன்ற பல சேமிப்பு திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்துகொள்ளவும், ஜிடிஎஸ் மூலம் ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இங்குள்ள வங்கிகளில் ஆதார் அட்டையில் எத்தகைய திருத்தம் செய்யவேண்டுமோ அதனை செய்துகொள்ளலாம் வேண்டுமென்றால் இங்கு புதிய ஆதார் கார்டையும் பெற்றுக்கொள்ள முடியும்.
0
Leave a Reply