25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


விருதுநகர் மாவட்டம் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் ஆதார் எண்ணினை இணைக்கும் சிறப்பு முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் ஆதார் எண்ணினை இணைக்கும் சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்து அவர்களது ஆதார் எண்ணை பெற்று வாக்காளார் விபரங்களுடன் இணைக்கும் பணியானது 01.08.2022 முதல் நடைபெற்று வருகிறது.  விருதுநகர்  மாவட்டத்தில் மொத்தமுள்ள 16,26,710 வாக்காளர்களில் 31.08.2022 வரை 7,00,484 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணினை இணைக்காத பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணினை தேசிய வாக்காளர் சேவை இணையதளம் (http://www.nvsp.in), வாக்காளர் உதவி செயலி அல்லது வாக்காளர் இணைய தளம் https://voterportal.eci.gov.in ஆகியவற்றின் மூலம்  தாங்களே ஆதார் எண்னை இணைத்துக்கொள்ளலாம் .
வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் எண்ணானது பொது வெளியில் எக்காரணம் கொண்டும் காட்சிப்படுத்தப்படாது. ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணினை இணைக்காத வாக்காளர்களின் வசதிக்காக 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் ஆதார் எண்ணினை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.  
எனவே வாக்காளர்கள் இவ்வாய்ப்பினை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி, I A S , அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News