25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சமையல்

Jan 31, 2025

பூசணிக்காய் பரோட்டா 

செய்முறை  :- பூசணிக்காய் கால் கிலோ, தோல் சீவிய விட்டு துண்டுகளாக வெட்டி ஆவியில் வேக வைக்கவும். பின் அதை நன்றாக மசித்து விட்டு 1 டீஸ்பூன் வத்தல் பொடி, அரை டீஸ்பூன் சீரகப் பொடி, கரம் மசாலா அரை டீஸ்பூன், கஸ்தூரி மேதி அல்லது மல்லி இலை பொடியாக வெட்டியது. சுவைக்கு ஏற்ப உப்பு, பெருங்காயத்தூள் வெள்ளை எள் 3 டீஸ்பூன் சேர்த்து, 2 கப் கோதுமை மாவு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, எண்ணெ தடவி 10 நிமிடம் மூடிவைத்து பின் உருண்டையாக சப்பாத்தி மாதிரி திரட்டி ஒரங்களை சதுரமாக மடித்து, மறுபடியும் சதுர சப்பாத்திகளாக திரட்டி, டவாவில் லேசாக எண்ணெய் தடவி ,சப்பாத்திகளை போட்டு நெய் விட்டு மிதமான தீயில் இரண்டு பக்கமும் வேக வைக்கவும். நெய் இல்லாவிட்டால் எண்ணெய் விட்டும் வேக வைக்கலாம். சூடான சப்பாத்திகளில் சிறிதளவு வெண்ணெய் வைத்து உருகியவுடன் சாப்பிட்டால் சாப்டான சுவையான பூசணி சப்பாத்தி ரெடி.

Jan 31, 2025

ஓட்ஸ் பேக்ட் தோசை 

செய்முறை :- ஒட்ஸ் 1 கப், பால் 1 கப், சோத்து நன்றாகக் கலந்து விடவும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தூள், அல்லது மல்லி இலை, 1 காரட் (மீடியம் சைஸ்) பொடியாக துருவியது. முட்டை 1, உப்பு சேர்த்து மிளகு பொடி காரத்திற்கு ஏற்ப சேர்த்து கலந்து விடவும் கொஞ்சம் துருவிய சீஸ் சேர்த்து  ஊற வைத்த ஓட்ஸையும் சேர்த்து கலந்து விடவும் ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து இந்தக் கலவையை ரவுண்டாகத் தட்டி 180 டிகிரி, 20 minites அவனில் பேக் செய்து மொறு, மொறு ஒட்ஸ் தோசை ரெடி.உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் ஓட்ஸ் கலவையுடன் 1 முட்டை, 1 ஆப்பிள், 1 வாழைப்பழம் நன்றாக மசித்தது, சேர்த்து நன்றாகக் கலந்து விடவும். பின் ஒரு கேக் மோல்டில் வெண்ணெய் தடவி அதில் இந்தக் கலவையை ஊற்றி,, பின் பொடித்த வால் நட்டை (20 gm) மேலே தூவி 180 டிகிரியில் 40 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து வைக்கவும். சுவையான சத்தான ஒட்ஸ் மீல் கேக்  ரெடி  

Jan 24, 2025

சிறுதானிய வெஜிடபிள் பிரியாணி. 

 ஆரோக்கியமான உணவென்றால் சுவையாக இருக்காது என்ற ஒரு கருத்து உண்டு, தானியங்கள் என்றாலே  ராகி, கேழ்வரகு போன்றவைதான் நினைவிற்கு வரும். ஆனால் இவையனைத்தையும் விட ஆரோக்கியமானது தினை அரிசி.தானியங்கள் என்றால் அதில் தோசை அல்லது கஞ்சி போன்றவைதான் செய்வார்கள், ஆனால் தினை அரிசியில் பிரியாணியே செய்யலாம். தினை அரிசியில் செய்யும் வெஜிடபிள் பிரியாணி சீரக சம்பா அரிசியில் செய்வது போன்ற சுவையில் இருக்கும். தேவையான பொருட்கள்: - தினை அரிசி - 1 கப் - தண்ணீர் - 3 கப் - நெய் - 2 ஸ்பூன் - உப்பு - தேவைக்கு ஏற்ப - நறுக்கிய காய்கறிகள் - அரை கப்(கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு) - இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் ,புதினா – சிறிதளவு, பிரியாணி இலை - 1 , ஏலக்காய் - 2 , கிராம்பு - 4 , இலவங்கப்பட்டை - 1 , அன்னாசி பூ - 1 , சீரகம் - கால் ஸ்பூன். செய்முறை:- தினை அரிசியை நன்றாக கழுவி, வெதுவெதுப்பான நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். - ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் கிராம்பு, ஏலக்காய் உட்பட அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து அவை வெடிக்கும் வரை வதக்கவும்.- அதன்பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். - அதன்பின் காய்கறிகள் மற்றும் புதினாவைச் சேர்த்து, 3 முதல் 4 நிமிடங்கள், பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். - அதன்பின் தண்ணீரை ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கும் வரை காத்திருக்கவும்.  தினை அரிசியை வடிகட்டி அதை கொதிக்கும் நீரில் சேர்க்கவும். அரிசி முழுமையாக வேகும் வரை நடுத்தர முதல் குறைந்த தீயில் சமைக்கவும். தண்ணீர் நன்கு வற்றும் வரை கலவையை நன்கு கிளறி விடவும். தினை அரிசி நன்கு வெந்ததும் உப்பு பார்த்து அடுப்பை அணைக்கவும். அடுப்பை அணைத்தவுடன் இறுக்கமான மூடி போட்டு7 நிமிடம் மூடி வைக்கவும்.சூடான தினை அரிசி வெஜிடபிள் பிரியாணி ரெடி. தயிர் வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிடவும்.

Jan 24, 2025

சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி .

காலை உணவாக வரகரிசி மற்றும் சாமை அரிசியைக் கொண்டு, அத்துடன் முருங்கைக்கீரை சேர்த்து கஞ்சி செய்யுங்கள். இந்த கஞ்சி சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. வேகமாக உடல் எடையையும், தொப்பையையும் குறைக்க உதவி புரியும்.உங்களுக்கு எடையைக் குறைக்க உதவும்.தேவையான பொருட்கள்: வரகரிசி - 100 கிராம் , சாமை அரிசி - 100 கிராம் , பாசிப்பருப்பு - 100 கிராம் , தண்ணீர் - 8 கப் , சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது) , பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது) ,பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) சீரகம் - 1 டீஸ்பூன்,மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,  மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் , சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன் , உப்பு – சுவைக்கேற்ப,  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,  முருங்கைக்கீரை - 1 கைப்பிடி , எலுமிச்சை – பாதி செய்முறை:முதலில் ஒரு பாத்திரத்தில் வரகரிசி மற்றும் சாமை அரிசியை எடுத்து, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து நீர் ஊற்றி 2 முறை கழுவிவிட்டு, பின் சுத்தமான நீரை ஊற்றி1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.1/2 மணிநேரம் கழித்து, அரிசி மற்றும் பருப்பை கழுவிவிட்டு, பின் அதை குக்கரில் போட வேண்டும். பின் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில்8 கப் நீரை ஊற்ற வேண்டும்.  அதன் பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்பிறகு அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், சோம்புத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.பின்னர் குக்கரை மூடி உயர் தீயில்1 விசில் விட்டு, பின் குறைவான தீயில்2 விசில் விட்டு இறக்க வேண்டும்.விசில் போனதும் குக்கரைத் திறந்து நன்கு கிளறி விட வேண்டும்.கஞ்சி மிகவும் கெட்டியாக இருந்தால், சுடுநீரை தேவையான அளவு ஊற்றி கிளறி விட வேண்டும்.  அதில் 1 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து, குக்கரை அப்படியே அடுப்பில் வைத்து5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பரிமாறினால், சுவையான சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி தயார்.

Jan 24, 2025

தினை சக்கரை பொங்கல்

தேவையான பொருட்கள் தினை - 1/2 கப்வெல்லம் - 3/4 கப்நெய் - 1 1/2 டீஸ்பூன்முந்திரி பருப்பு - 5-6திராட்சை - 6-7ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி,சுக்கு தூள், பச்சை கற்பூரம்- செய்முறைதிணையைக் கழுவி15 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு கடாயை சூடாக்கி, அதன் நிறம் மாறாமல் மணம் வரும் வரை வறுக்கவும்.பிரஷர் குக்கரில் திணை, மூங்கால், பால், தண்ணீர் இரண்டையும் பிரஷர் குக்கரில்4 விசில் விடவும். வெல்லத்தை தட்டி அளந்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து,2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து வெல்லம் முழுவதுமாக உருகும் வரை சூடாக்கி, சிரப்பை ஒரு வடிகட்டி வழியாக அசுத்தங்களை வடிகட்டவும்.பிரஷர் வெளியானதும் பிரஷர் குக்கரைத் திறந்து, சமைத்த தினை மற்றும் வெல்லம் பாகு சேர்க்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, பொங்கலை குறைந்த தீயில்7,10 நிமிடங்கள் நன்கு கலக்கவும். நெய் விட்டு சூடாக்கி அதில் உடைத்த முந்திரியை, திராட்சை,சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதை சமைக்கும் திணை சக்கரைப் பொங்கலுக்கு மாற்றவும். ஏலக்காய் தூள், சுக்கு தூள், பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கலக்கவும். தீயை அணைத்து சூடாக பரிமாறவும்.

Jan 24, 2025

வரகு அரிசி பாசிப்பருப்பு பொங்கல்

தேவையான பொருட்கள்-1கப் வரகு அரிசி,1கப் பாசிப்பருப்பு,2ஸ்பூன் பட்டர்,உப்பு சுவைக்கேற்ப ,2 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி,1ஸ்பூன் சீரகம்,1ஸ்பூன்மிளகு,2 கொத்து கருவேப்பிலை,நெய்,1டம்ளர் பால்.செய்முறை.வரகு அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி1/2மணி நேரம் ஊற விடவும்.பின்னர் குக்கரில் சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய்,1/2ஸ்பூன் சீரகம், பட்டர், இஞ்சி சேர்த்து அதனுடன்1பங்கு அரிசிக்கு3பங்கு தண்ணீர் சேர்த்து4விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.பின்னர் பால், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்(பால் சேர்ப்பதால் பொங்கல் ஆறிய உடனும் கெட்டி படாமல் இலகுவாக இருக்கும்).பின்னர் ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் மிளகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து பொங்கலில் சேர்க்கவும். செம டேஸ்டி ஹெல்த்தி பொங்கல் தயார்.

Jan 24, 2025

சிறுதானிய பருப்பு அடை

தேவையான பொருட்கள் 50 கிராம்சோளம், 50 கிராம்கம்பு, 50 கிராமிகவுனி அரிசி50 கிராம்கோதுமை , 50 கிராம்கேழ்வரகு , 50 கிராம்திணை.50 கிராம் வரகு ,50 கிராம் சாமை , 50 கிராம் குதிரைவாலி100 கிராம் உளுந்து , 25 கிராம் குழம்பு கடலை பருப்புதேவையான அளவுஉப்பு செய்முறை.ஒரு பாத்திரத்தில் உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிறு தானியங்கள் அனைத்தையும் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.உளுந்தையும் சிறு தானியத்தையும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதை8 மணிநேரம் உப்பு சேர்த்து கரைத்து ஊறவைத்துக் கொள்ளவும்.பின்னர் தோசைக்கல்லில் குழந்தைகளுக்கு விரும்பிய வடிவத்தில் வார்த்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் .சுவையான சத்தான சிறுதானிய பருப்பு அடை ரெடி.குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.

Jan 24, 2025

கம்பு சோள கார பணியாரம்.

தேவையான பொருட்கள்1 டம்ளர் இட்லி அரிசி,1/2டம்ளர் கம்பு,1/4டம்ளர் சோளம்,1/4 கப் உளுந்து பருப்பு,1ஸ்பூன் வெந்தயம், தேவையானஅளவு உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய்,1/2ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் கடலை பருப்பு செய்முறை.கம்பு ,சோளம், இட்லி அரிசி, உளுந்து பருப்பு ,வெந்தயம் ,அனைத்தையும் கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின் நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கி புளிக்க வைக்கவும். பின் மாவில் கடுகு கடலை பருப்பு வெங்காயம் பச்சை மிளகாய் தாளித்து கொட்டி கலக்கவும். அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் தடவி பின் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

Jan 17, 2025

சோயா சப்பாத்தி

தேவையான பொருட்கள் -  கோதுமை மாவு 2 கப், சோயா மாவு - அரை கப். நெய் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.செய்முறை  - மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில், எண்ணெய் நீங்கலாக எல்லாவற்றையும் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து பிசைந்து, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டுங்கள். வழக்கம்போல தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி வேக விடுங்கள். 

Jan 17, 2025

வாழைப்பழ சப்பாத்தி

தேவையான பொருட்கள் - கோதுமை மாவு - ஒரு கப், வாழைப்பழம் - 1. சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, நெய் 2 டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை தேவையான அளவு. செய்முறை - வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.எண்ணெய், நெய் கலவை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள். பிறகு, சப்பாத்திகளாக தேய்த்து எண்ணெய் நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுங்கள். இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும். எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி. 

1 2 ... 44 45 46 47 48 49 50 ... 68 69

AD's



More News