தேவையான பொருட்கள் - பச்சைப்பட்டாணி (தோல் உரித்தது) - 500 கிராம் கிரீம் - 50 கிராம் சூடான பால் - 100மி.லி ,உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்பசெய்முறை -பச்சைப் பட்டாணியை மூன்று கோப்பை தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பச்சைப் பட்டாணியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.பால் சேர்த்து மீண்டும் சூடாக்கிக் கொள்ள வேண்டும். பரிமாறும் முன் கிரீம் சேர்த்துக் கொள்ளவும். சூடாகப் பரிமாறவும்.
தேவையான பொருட்கள் -வெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1 வெள்ளரிக்காய் (துருவியது) -1மைதா மாவு - 1 மேசைக்கரண்டி வெண்ணெய் - 25 கிராம்காய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மி.லிபாலேடு (அ) கிரீம் – 2 மேசைக்கரண்டிஉப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்பசெய்முறை - வெங்காயத்தை 2 நிமிடம் வரை வெண்ணெயில்வதக்கவும்.பிறகு வெள்ளரிக்காயைப் போட்டு 2 நிமிடம் வரை வதக்கவும். மாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். காய்கறி வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள், பாலேட்டையும் சேர்த்து சூடாகப்பரிமாறவும்.
உடல் ஆரோக்கியத்துடன் தேவையான குளுக்கோஸ், சோடியம் பொட்டாசியம், அயோடின் போன்ற தாது உப்புக்கள் தேங்காயில் தாராளமாக உள்ளன. இது வாயுவையும், பித்தத்தையும் போக்கி உடலுக்கு வலிமையை சேர்க்கிறது.தேங்காயுடன் காரப்பொருள்கள் சேர்த்து சூப் செய்தால் இதன் சத்துக்கள் குறைவுபடும். ஆதலால், இனிப்புச் சுவையுடன் கூடிய சூப்பாகத் தயாரித்துக் கொள்வதே நல்லது.தேவையான பொருட்கள்- முற்றிய தேங்காய் - 2,முந்திரிப் பருப்பு 10,எலக்காய் 3,பச்சை அரிசி - 50,கிஸ்மிஸ் பழம் - 10,தண்ணீர் - தேவையான அளவு செய்முறை-நன்றாக முற்றிய தேங்காய் இரண்டை உடைத்து.துருவி150 மி.லி வெந்நீர் விட்டு சிறிது நேரம் கழித்து நன்றாகக் கசக்கிப் பிழிந்து, கெட்டியாகப் பால் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு தேங்காய்த் துருவலை அம்மியில் வைத்து அரைத்து100 மி.லி நீர்விட்டு, நன்றாகக் கசக்கிப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.மீண்டும் ஒருமுறை200 மி.லி நீர்விட்டு அந்தப் பாலை அடுப்பில் வைத்து பச்சை அரிசி50 நெய்யாக உடைத்து பாலில் போட்டு கொதிக்க விட வேண்டும்.அரிசி வெந்து பதமானதும், இரண்டாவது பாலைவிட்டுக் கொதிக்கவிட வேண்டும் பாயாசம் போல ஆனதும்10 முந்திரிப் பருப்பையும்10 கிஸ்மிஸ் பழத்தையும் வறுத்துப் போட வேண்டும்.3 ஏலக்காய்களை தோல் போக்கி, விதைகளை மட்டும் பொடி செய்து போட வேண்டும். இனிப்பு சூப்பை கீழே இறக்கி சூடு சிறிது ஆறியதும், முதல் பாலை விட்டுச் சூடு ஆறும் வரை கரண்டியால் கிளறவும் இளஞ்சூடாக இந்த இனிப்பு தேங்காய் சூப்பை பரிமாறவும்.
பூசணிக்காய் உடலுக்கும் உரமூட்டும் சக்தி பெற்றது உடல் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சிறுநீரில், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.தேவையான பொருட்கள் -பூசணிக்காய்- முக்கால் கிலோ, பால் - 3 கப்,வெண்ணெய் - 1மேசைக்கரண்டி ,மைதா மாவு -1 மேசைக்கரண்டி,மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்பசெய்முறை - பூசணிக்காயின் தோலைச் சீவி சிறுசிறு துண்டுகளாக்கி வேக வைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை மிதமாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெய் விட்டு மாவைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். சூடான பால், பூசணிக்காய் விழுது, மிளகுத்தூள், உப்புத்தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கி வைத்து இறக்கவும்.சூடாகப் பரிமாறவும்.
சித்த மருத்துவத்தில் மிளகு சிறப்பான இடம் வகிக்கிறது. மிளகு சேராத சித்த மருந்தே இல்லையெனலாம். காமாலை, இருதய நோய் இருமல், தொண்டை தொடர்பான நோய்கள், அஜீரணம், குளிர் காய்ச்சல் போன்ற நோய்களை குணமாக்குவதுடன் அன்றாட உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் மேற்சொன்ன நோய்கள் வராமலும் தடுக்கும். தேவையான பொருட்கள் -துவரம் பருப்பு - 50கிராம்,உப்பு - 2தேக்கரண்டி,மிளகு - 11/2 தேக்கரண்டி,துவரம் பருப்பு -1தேக்கரண்டி,நெய் -1/4 தேக்கரண்டி,கறிவேப்பிலை ஈர்க்கு,புளி - சிறு எலுமிச்சையளவு,மிளகாய் வற்றல் - 4 ,சீரகம் - 1/2 தேக்கரண்டி,தனியா - 1 தேக்கரண்டி,கடுகு - அரைக்கால் தேக்கரண்டி, தண்ணீர் - தேவையான அளவுசெய்முறை - ஒரு பாத்திரத்தில் ஐம்பது கிராம் துவரம் பருப்பைப் போட்டு தண்ணர் விட்டுக் குழைய வேக வைத்து எடுத்துதெளிவாக இறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு நீரில் புளியும், உப்பும் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க விட வேண்டும். புளிநீர் பாதியளவு சுண்டியதும், இறுத்து எடுத்து வைத்துள்ள துவரம் பருப்பு நீரைப் புளி நீரில் கொட்டவும்.'மிளகாய்வற்றல், மிளகு, சீரகம், துவரம் பருப்பு1 தேக்கரண்டி தனியா ஆகிய அனைத்தையும் அம்மியில் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து சூப்பில் கொட்டவும்.நூரை கூடி வாசம் வரும்போது நெய்யில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சூப்பில் கொட்டி இறக்கி கொஞ்சம் நீர் தெளித்துக் கலக்கிப் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்: வாழைப்பழம் -8,சர்க்கரை -1 கப்,சோள மாவு-50 கிராம், பாதாம், முந்திரி,நெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை: வாழைப்பழத்தை தோல் நீக்கி அரைக்கவும். கடாயில் நெய் சூடானதும் அரைத்த வாழைப்பழத்தை போட்டு கிளறவும். பின், சோள மாவை தண்ணீருடன் சேர்த்து கரைசலாக்கி ஊற்றவும். அதனுடன் சிறிது நெய் ஊற்றி, அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம் முந்திரியை பொடியாக நறுக்கி அதில் போடவும்.சுவைமிக்க,'வாழைப்பழ அல்வா!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள் - காரட் நீளமான - 1கிலோ ,பால் - 800 மி.லி, சீனி - 1கிலோ,நெய் (அ) டால்டா - 400 கிராம் , ஏலம், கிராம்பு-சிறிதளவு, முந்திரிப்பருப்பு - சிறிதளவுசெய்முறை-காரட்டை கழுவி சுத்தம் செய்து துருவி வைத்துக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் பாலில் கேரட் துருவலை மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும். பால்வற்றி சீனியைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை வருகையில் சீனியை சிறியதாக எரியவிடவும். விடாமல் கிள்றிக் கொண்டே இருக்கவும். அல்வா பதத்தில் வரும்போது டால்டா(அ) நெய் சேர்க்கவும். ஏலம், கிராம்பு பொடி செய்து போடவும். அல்வா நன்றாக திரண்டு வந்தபின் நெய் அல்லது டால்டா தடவிய தட்டில் கொட்டி மேலே வறுத்த முந்திரிப்பருப்பையும் போடவும்.
தேவையான பொருட்கள் - பூசணிக்காய் - 500 கிராம்,சீனி - 250 கிராம், ஏலம் - 4 எண்ணம், நெய் - 100 கிராம் செய்முறை: பூசணியை நைஸாக துருவி, வெறும் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த பூசணி துருவலை போட்டு வறுக்கவும். தண்ணீர் இல்லாத போது சீனியைப் போடவும். அதன் மீது கோவாவைப் போட்டு புரட்டிவிட்டுக்கொண்டே இருக்கவும். அதன் மீது பொடி பண்ணிய ஏலம். இவற்றுடன் நெய்விட்டு மேலும், மேலும் புரட்டவும். புரட்டியதும் நெய் தடவிய ட்ரேயில் ஊற்றி விருப்பப்படி துண்டு போட்டுக் கொள்ளவும்.
தேவையான பொருட்கள்: ஆப்பிள் துருவியது 200 கிராம், கோதுமை மாவு - 200 கிராம்,நெய் - 100 மில்லி, ஏலத்தூள் – சிறிதளவு, பால் - 200 கிராம்,முந்திரிப்பருப்பு – சிறிதளவு ,கேசரி பவுடர் – சிறிதளவு,சர்க்கரை - 400 கிராம்செய்முறை - பாலில் ஆப்பிள் துருவியது போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரி பவுடர் சேர்த்து கிளறவும். சீனியையும் கலந்து சற்று இருகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி விடவும் இது சுவையாக இருக்கும். உடம்புக்கு சத்தானது குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள்.
தேவையான பொருட்கள்: சர்க்கரை-400 கிராம், பாதாம் பருப்பு-200 கிராம், நெய்-400 கிராம்,குங்குமப்பூ-1கிராம்,லெமன் எல்லோ பவுடர் - 1 சிட்டிகை,ஏலக்காய் - 5 கிராம்செய்முறை: பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு2 நிமிடங்கள் கழித்து, அவைகளை உரித்து பின்பு தண்ணீரில் 2.3 முறை அலசி எடுத்துக் கொள்ளவும் அலசிய பாதாம்பருப்புகளை100 மி.லி தண்ணீர் விட்டு சற்று கரகரப்பாக அரைத்தெடுக்கவும். பின்பு அடுப்பில் வாணலியை ஏற்றி அதில் பாதாம் பருப்பு விழுது,சர்க்கரையைப் போட்டு நன்றாக உருட்டும் பதம் வரை கிளற வேண்டும். பின்பு வாணலியைக் கீழே இறக்கி பாதாம்பருப்புவிழுது, சர்க்கரை கலவையில் நெய்விட்டுக் கிளற வேண்டும். அடுப்பில் வைத்து நெய் ஊற்றிக் கிளறினால் அல்வாவின் நிறம் மாறி வரும் என்பதால் தான் வாணலியை இறக்கிய பின்பு நெய் ஊற்றிக் கிளற வேண்டும். நெய்விட்டு நன்கு கிளறிய பின்பு அந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். பின்பு அதில் ஏலப்பொடி, குங்குமப்பூ போட வேண்டும்.