தேவையான பொருட்கள் - 1 கப்சுத்தம் செய்து நறுக்கின பிரண்டை,1/4 கப் நறுக்கின பெரிய வெங்காயம் ,2டேபிள்ஸ்பூன் தோலுரித்து நறுக்கின பூண்டு,1டீ ஸ்பூன் ம.தூள், 2 ஸ்பூன் காஷ்மீரி மி.தூள்,தேவைக்குகல்லுப்பு, 2 1/2ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் வெந்தயம்.2 சி.மிளகாய்,1 ஆர்க்குகருவேப்பிலை, 1 ஸ்பூன்பெருங்காயத் தூள், 1/4 கப் ந.எண்ணெய்,.1 கோலி குண்டளவு புளி செய்முறை –பிரண்டையை நன்கு சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், பூண்டை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில், கடுகு, வெந்தயத்தை நன்கு வறுக்கவும்.வறுத்து தட்டில் ஆற விடவும்.சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு,சற்று கொரகொரப்பாக பொடித்து தட்டில் போடவும்.அடுப்பைமீடியத்தில்வைத்து,ந.எண்ணெய்காய்ந்ததும்,வெங்காயம், புளி,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.பௌலில் ஆற விடவும்.பின், மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.கடாயில்,மீதமான ந.எண்ணெயில், பிரண்டையை நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.அரைத்த விழுதுடன், வதக்கிய பிரண்டையை போட்டு நன்கு அரைக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகை போடவும்.கடுகு பொரிந்ததும், மிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.தாளித்த எண்ணெயில், ம.தூள், மி.தூள், உப்பு போட்டு நன்கு, வதக்கவும்.அடுத்து வதக்கிய விழுதை போட்டு ஒன்று சேர சுருள வதங்கியதும், அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு, வறுத்த பொடி, பெருங்காயத் தூள் போட்டு கிளறவும்.அடுத்து,பௌலுக்கு, மாற்றி, மேலே காய்ச்சாத ந.எண்ணெயை விடவும். இப்போது, சுவையான, ஆரோக்கியமான, கிராமத்து பிரண்டை ஊறுகாய் தயார்.
தேவையான பொருட்கள் - 2 கப் சாம்பார் சின்னவெங்காயம் உரித்தது. ஒரு பெரிய நெல்லிக்காய்அளவு புளி,வெல்லப்பாகு1கரண்டி,தேவைக்கு உப்பு,தேவைக்கு நல்லெண்ணெய்,வரமிளகாய் , அரைஸ்பூன் பெருங்காயம்,1ஸ்பூன் கடுகு, அரைஸ்பூன் வெந்தயம்செய்முறை –முதலில்சின்னவெங்காயத்தைஉரித்து வைத்துக்கொள்ளவும்.கடுகு,வெந்தயம்வறுத்து அரைப்பதற்கு எடுத்து வைக்கவும். ஊறுகாய்போடுவதற்கு கடுகு,வெந்தயப்பொடி தான் ஸ்பெசல்.புளியை தண்ணீரில் சிறிதுநேரம்ஊறவைத்துக்கொள்ளவும்.மிக்ஸி ஜாரில்,வெங்காயம்,வரமிளகாய்,புளிமூன்றையும் அரைக்கவும். கடுகு,வெந்தயம்வறுத்து பொடிபண்ணிக்கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து, பின்பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுபின்பெருங்காயப்பொடிசேர்க்கவும்.உப்புசேர்க்கவும்.நன்குகொதிக்கவிடவும்.பின்னர்வெல்லப்பாகுசேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும்.பின் இறக்கிவைக்கும் போது வெந்தயப்பொடி, காயப்பொடி சேர்த்து உடனே கேஸை ஆப் செய்து விடவும்.எண்ணெய்பிரிந்துஅழகாகஊறுகாய் பளபள வென்று இருக்கும்.வெங்காய ஊறுகாய் ரெடி.இந்தவெங்காயஊறுகாய் இட்லி,தோசை,சப்பாத்தி, சாதம்எதற்கும் ஏற்ற தாகஇருக்கும்.
தேவையான பொருட்கள் - ஒரு கப் நல்லெண்ணெய் ,ஒரு பாக்கெட் மஸ்ரூம் ,கால்ஸ்பூன் கடுகு பொடி,இரண்டு ஸ்பூன்எலுமிச்சை பழச்சாறு,தேவையான அளவு உப்பு,கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்,அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்,அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள்,ஒருஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுசெய்முறை - மஸ்ரூம் ஐ பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்.அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,கரம் மசாலாத்தூள் ,கடுகு தூள், உப்பு,சேர்த்து வதக்கவும்.மஷ்ரூம் நன்றாக வெந்ததும், கடைசியாக எலுமிச்சை பழச்சாறு விட்டு இறக்கவும். ஊறுகாய் ஆறியதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரம் உபயோகப்படுத்தலாம்.
தேவையானவை:காளான் - 1 கப் (நறுக்கியது)நறுக்கிய வெங்காயம் - 1/2 கப் (நீளமாக நறுக்கியது)பச்சை மிளகாய் - 1 (பொடித்தது)மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்உப்பு -தேவையான அளவுஎண்ணெய் - 2 டீஸ்பூன்கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவுகரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்சாம்பார்பொடி தனியாதூள். 1 டீஸ்பூன்செய்முறை:முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கியதும் சாம்பார்பொடி, கரம்மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும்மசாலா உடன் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும் பின் உப்பு சேர்த்து, சிறிது நீர்விட்டு வேகவைக்கவும் காளான் நன்றாக வெந்து நீர் வற்றியதும் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தேவையானவை :இஞ்சி -1/4கிலோஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் -தேவையான அளவுபச்சை மிளகாய்-50 கிராம்புளி - 100 கிராம்வெல்லம் - சிறு துண்டுதாளிக்க தேவையானவை :கடுகு -1ஸ்பூன்,வெந்தயம் -1 ஸ்பூன், எண்ணெய் - 3 ஸ்பூன், பெருங்காயம் - 1 ஸ்பூன் செய்முறை;நான்கு கழுவிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயைக் கறிக் கொள்ளவும் தண்ணீரில் புளியை ஊற வைத்துக் கொள்ளவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் வதக்கிய இஞ்சி பச்சை மிளகாய் புளி உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும் வாணலியில் தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் இதில் அரைத்து விழுதைச் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.
தேவையான பொருட்கள்:பூண்டு - 20 லிருந்து 25மிளகாய் பொடி-2 tbspsகொத்தமல்லி பொடி-1tbspகடுகு-1 tspவெந்தையம்-1 tspபெருங்காய பொடி-3tspகறிவேப்பிலை- தேவைக்கேற்பபுளி - சிறிய எலுமிச்சை அளவுஉப்பு-தேவைக்கேற்பநல்லஎண்ணெய்-2 தேக்கரண்டியளவுசெய்முறைமுதலில் பூண்டை தோலுரித்து எடுத்து கொள்ளவும்.புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.1/4 tsp கடுகையும் ,வெந்தையத்தையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.பின்னர் எண்ணெயை காயவைத்து அதில் கடுகையும் வெந்தையத்தையும் சேர்த்து மற்றும் பெருங்காய பொடி பூண்டையும் சேர்த்து வதக்கவும்."நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்த்தூள் கொத்தமல்லி பொடி ஆகியவற்றைசேர்த்து பிரட்டி நன்றாக வதக்கி பச்சைவாசனை போனவுடன் இறக்கவும்.
தேவையானவை :பெரிய வெங்காயம் 1/2 கிலோ (பொடித்தது)பூண்டு - 10 பல் (நசுக்கியது)வினிகர் 1/4 கப்சோம்பு 1/2டீஸ்பூன்கடுகு 1 டீஸ்பூன்எண்ணெய் 1/2 கப்கருவேப்பிலை சிறிதுமிளகாய்த்தூள் 1டேபிள் ஸ்பூன்உப்பு 1 டேபிள் ஸ்பூன்வெந்தயம் 1 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்பெருங்காயம் - 1 டீஸ்பூன்செய்முறை :ஒரு வெறும் வாணலியில் ஊற்றி சீரகம், பெருங்காயம் வெந்தயம் சோம்பு ஆகியவற்றை வறுத்து மிக்ஸ்சியில் பொடி செய்து கொள்ளவும்அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறிப் பொரிந்ததும், பூண்டைச் சேர்த்து2 நிமிடம் வதக்கவும் இதனுடன் வினிகர், மிளகாய்த்தூள், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
தேவையானவை:மாங்காய் - 2 பெரியது (துருவியது)வற்றல் மிளகாய் தேவைகேற்பபெருங்காயம் 1 சிறு துண்டுஉப்பு -1டீஸ்பூன்நல்லெண்ணெய் 1/2 கப்வறுத்த வெந்தயப் பொடி 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை :1 வெறும் கடாயில் வற்றல் மிளகாயை வறுத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும்.அதே கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இதனுடன் மாங்காய் துருவல், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.மாங்காய் துருவல் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மிளகாய்ப் பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி இறக்கி வைக்கவும். இதை சுத்தமான ஜாடியில் வைத்து சுமார் 180 நாட்கள் உபயோகிக்கலாம்.
தேவையானவை:தக்காளி -1 கிலோ (நறுக்கியது)மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்கடுகு-1 டீஸ்பூன்வெந்தயம் - 1 டீஸ்பூன்பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்நல்லெண்ணெய் -1/2கப்புளி விழுது – சிறிதுஉப்பு-தேவைக்கேற்பசெய்முறை :நறுக்கிய தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும் ஒரு வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுத்து மிக்ஸ்சியில்அரைத்துக் கொள்ளவும்.வாணலியில்1/4 கப் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு கருவேப்பிலை பெருங்காயம் வெந்தயப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி விழுது பாதியாகும் வரை வேக விடவும். இடையிடையே கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். தக்காளி விழுது பாதியாகக் குறைந்த பின் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மீதமுள்ள. எண்ணெய் புளி விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் இருபது நிமிடங்கள் வேக விடவும் எண்ணெய் மிதந்து வரும் வரை வேக விட்டு இருக்கவும்.தக்காளி தொக்கு தயார்.
தேவையானப் பொருட்கள்:முருங்கைப்பூ- 2 கப் ,பாசிப்பருப்பு - 100 கிராம் ,பெரிய வெங்காயம் -2,தக்காளி -2,பூண்டு பல் -10 பச்சை மிளகாய் -4,எண்ணெய், கடுகு,மஞ்சள் பொடி- சிறிதளவு கறிவேப்பிலை,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாசிப்பருப்புடன் நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய தக்காளி, பூண்டு, மஞ்சள் பொடி, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணை சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, நீள வாக்கில் வெட்டிய பச்சை மிளகாய் தாளித்து, சுத்தம் செய்த முருங்கைப் பூ போட்டு வதக்கவும். அதில், வெந்த பாசிப்பருப்பு கலவை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.மருத்துவ குணம் நிறைந்த, 'முருங்கை பூ கூட்டு!' தயார். சுவை அமோகமாக இருக்கும்.