தேவையான பொருட்கள் - கோதுமை மாவு - 2 கப். நெய் - 2 டீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், எண்ணெய் நெய் கலவை தேவையான அளவு. பூரணத்துக்கு: முள்ளங்கி துருவல் ஒன்றரை கப் மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மாங்காய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாதூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலா தூள் அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை - முள்ளங்கியை தோல் சீவி துருவுங்கள். எண்ணெயைக் காய வைத்து முள்ளங்கியைச் சேர்த்து நன்கு வதக்கி, அதில் கொடுத்துள்ள தூள்களை சேர்த்து சுருள கிளறி இறக்குங்கள். கோதுமை மாவுடன் நெய், உப்பு, தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசையுங்கள். சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து சிறிது பூரணத்தை உள்ளே வைத்து நன்கு மூடி, சப்பாத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் போடுங்கள். இருபுறமும் எண்ணெய் - நெய் கலவை ஊற்றி கட்டெடுங்கள்.குறிப்பு: ஸ்டஃப் செய்யும் சப்பாத்திகளை திரட்டும்போது, மாவை கிண்ணம் போல செய்து பூரணத்தை உள்ளே வைத்து தேய்க்கும்போது. பூரணம் சிறிது வெளியே வர வாய்ப்புண்டு. அதற்கு பதிலாக, ஒரு சப்பாத்திக்கு உரிய மாவை எடுத்து, அதை இரு உருண்டைகளாக்கி, இரு மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டுங்கள். ஒரு சப்பாத்தியின் மேலே பூரணத்தை மெல்லிய அடுக்காக பரப்பி, அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிடுங்கள். இம்முறையில் பூரணம் வெளியே வராது.
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு 2 கப். நெய் 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்,பூரணத்துக்கு: பொடியாக துருவிய காலிஃப்ளவர் - கப், தேங்காய் துருவல் ஒரு டீஸ்பூன், துருவிய வெங்காயம் 2 டீஸ்பூன். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லி -2 டீஸ்பூன், மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன். உப்பு -தேவையான அளவு.செய்முறை - மாவை நெய். உப்பு சேர்த்து பிசையுங்கள். காலி ஃப்ளவருடன் வெங்காயம். உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து அழுத்தி வையுங்கள். 10 நிமிடம் கழித்து நன்கு பிழிந்தெடுங்கள். அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து கலந்து வையுங்கள். இதுதான் பூரணம்.பிறகு கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்து, முள்ளங்கி சப்பாத்தி போலவே செய்து சுட்டெடுங்கள். ருசியான மாலை டிபன்.
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு 2 கப், மிளகாய்தூள் -அரைடீஸ்பூன், கரம் மசாலாதூள்.- ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் கால் டீஸ்பூன். நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரைடீஸ்பூன், எண்ணெய் -நெய் கலவை - தேவையான அளவு.செய்முறை - கோதுமை மாவுடன் மிளகாய்தூள், சுரம் மசாலாதூள், மஞ்சள்தூள், உப்பு, நெய் எல்லாம் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். சப்பாத்திகளாக திரட்டி. தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் நெய் கலவை சேர்த்து வேகவிடுங்கள். கரம் மசாலா மணத்துடன் கமகமக்கும் இந்த மசாலா சப்பாத்தி,
தேவையான பொருட்கள் - கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை தேவையான அளவு அரைக்க: பசலைக்கீரை (பாலக்) - ஒரு கட்டு, பச்சை மிளகாய் -3, இஞ்சி -ஒரு துண்டு, உப்பு - சிறிதளவு.செய்முறை - பசலைக்கீரையை சுத்தம் செய்து கழுவி, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். விசிலைத் தூக்கி பிரஷரை வெளியேற்றிவிட்டு, குக்கரைத் திறந்து வையுங்கள். ஆறியதும், அவற்றை நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் கோதுமை மாவு, உப்பு, நெய் சேர்த்துப் பிசைந்து, வழக்கம் போல சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் சுட்டெடுங்கள்.
தேவையான பொருட்கள் – ஒரு கப் சாமை அரிசி, கால் கப் முழு உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கல் உப்பு, தேவையான எண்ணெய்செய்முறை -தேவையான பொருட்களை எடுத்து5 மணி நேரம் அரிசி உளுந்து தனித்தனியாக ஊற வைக்கவும்.இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் உளுந்து, வெந்தயம் நன்றாக நைசாக அரைக்கவும். பிறகு சாமை அரிசியை சேர்த்து நன்கு அரைக்கவும்.அதில் கல் உப்பு சேர்த்து கலக்கி ஆறு மணி நேரம் வைக்கவும்.அது நன்கு பொங்கி வந்திருக்கும். இப்பொழுது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை வார்த்து எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் துவையல், கார சட்னி, கொத்தமல்லி சட்னி எல்லாமே சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் – 2 கப்கம்புமாவு, கால்கப் அரிசிமாவு , கால்கப்தோசைமாவு, தேவைக்குதண்ணீர், தேவைக்கு உப்பு,1 கப் கட் பண்ணிய முருங்கைக்கீரை இலை,1 வெங்காயம், 1பச்சைமிளகாய் , தேவைக்குசமையல் எண்ணெய்செய்முறை -கம்புமாவு, தோசைமாவு, அரிசி மாவு, உப்பு, தேவையான தண்ணீர் விட்டு கலக்கவும்.தோசைமாவு பதம் இருந்தால்போதும். பச்சைமிளகாய், வெங்காயம் கட்பண்ணிசேர்க்கவும்.முருங்கைக்கீரையைகைபார்த்து இலைகளை சிறிதாக கட் பண்ணி சேர்க்கவும். நன்கு கலந்துவிட்டு, சுற்றிஎண்ணெய் விட்டுதோசை சுடவும்.கம்புதோசை ரெடி.சூடாகச்சட்னிவைத்துசாப்பிடவும்.சத்தான இரும்புசத்து நிறைந்தது. தோசைமேலேயும் கீரையை தூவி சுடலாம்.நன்றாக இருக்கும்.மாவுடன்கலந்தும் சுடலாம். மேலே தூவியும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்-2 கப்தினை,2 மேஜை கரண்டி அரிசி,½கப்முழு உளுந்து,1 தேக்கரண்டி வெந்தயம்,1கப் பீட்ரூட், வேகவைத்து துருவியது,1 அங்குலம் இஞ்சி, தோலுரித்தது,4பச்சை மிளகாய்,½கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது.2 மேஜை கரண்டி கொத்தமல்லி பொடியாக நறுக்கியது, 1 தேக்கரண்டி ஈஸ்ட், தேவையான எண்ணெய்,தேவையான உப்பு.செய்முறை- ஓரு குக்கரில் பீட்ரூட், நீராவியில் வேகவைத்து பின் தோலுரித்து துருவவும்.மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் தினை, அரிசி லேசாக வறுக்கவும். பொறிந்து வாசனை வரும். வேறொரு பாத்திரத்திக்கு மாற்றி 6 கப் நீர் சேர்த்து ஊறவைக்கவும். உளுந்து , வெந்தயம் 3 கப் நீரில் 6 மணி நேரமாவது ஊறவேண்டும். வடித்து நீர் சேர்த்து முதலில் உளுந்து, வெந்தயம் பிளேண்டரில் போட்டு மழ மழ வென்று அரைக்கவும். பின் தினை, அரிசி, பீட்ரூட், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து அரைக்க. மாவுகளை ஒன்றாக சேர்க்கவும். அன்றே தோசை செய்ய ஈஸ்ட் சேர்க்கவும். ஈஸ்ட் சேர்த்து ,ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும்,தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, சூடான பின், எண்ணை தடவி எப்பொழுதும் போல தோசை செய்வது போல சுடவும் .தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றவும். இரண்டு பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். 2,3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான தோசை தயார்.
தேவையான பொருட்கள்-1கப் முழு ராகி,1/4கப் கொள்ளு,2டேபிள்ஸ்பூன் மாவு ஜவ்வரிசி,1ஸ்பூன் வெந்தயம், தேவையானஅளவு உப்புசெய்முறை - தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி8,10மணி நேரம் ஊற வைக்கவும்.8மணி நேரம் கழித்து,ஊற வைத்தவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து,தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.மாவை மிகவும் தண்ணீயாக கலக்காமல்,இட்லி பததிற்கே தயார் செய்து,8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.புளித்த மாவில், தோசைக்கு தேவையான அளவில் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும், மெல்லியதாக விரித்து விடவும். எண்ணெய் சேர்க்காமலேயே மொறு மொறு மொறுப்பாக வரும்.சுவையான,சத்து நிறைந்த தோசை ரெடி.தக்காளி,புதினா,மல்லி,தேங்காய் சட்னி,என எல்லா சட்னிகளும் பொருத்தமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்-1கப் தினை,1/4கப் உளுந்து,1/4ஸ்பூன் வெந்தயம்,1/4கப் சிவப்பு அவல், தேவையானஅளவு உப்பு, தேவையான எண்ணெய்.செய்முறை - தினை, உளுந்து, வெந்தயம், அவல் எடுத்து வைத்துக்கொள்ளவும். இவற்றை6மணி நேரம் ஊறவைத்து, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.இதை6மணி நேரம் புளிக்க வைக்கவும். அடுப்பில் தோசைக் கல் வைத்து சூடானதும்,தோசை வார்க்கவும். சுற்றி ஆயில் ஊற்றவும். சூப்பரான தோசை ரெடி.
தேவையான பொருட்கள் - 2 கப் குதிரைவாலி அரிசி, முக்கால் கப் இட்லி அரிசி,முக்கால் கப் உளுந்து, அரை ஸ்பூன் வெந்தயம்செய்முறை - குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஐந்து முறை கழுவ வேண்டும். பின்னர் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.நன்கு ஊறிய பின்னர், ஊறவைத்த தண்ணீரை வைத்தே மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் உப்பு சேர்த்து கரைத்து 6 லிருந்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.பின்னர் தோசை மாவு பதத்திற்கு கரைத்து, தோசை கல்லில் நெய் ஊற்றி தோசை சுட்டு எடுக்கவும்.ஆரோக்கியமான குதிரைவாலி தோசை தயார். சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.