25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Feb 28, 2025

பொடி இட்லி

தேவையான பொருட்கள் -  இட்லி மாவு - 2 கப், இட்லி மிளகாய்ப் பொடி 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை -சிறிது, எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) -ஒரு டேபிள்ஸ்பூன்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், டேபிள்ஸ்பூன். அரை டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.செய்முறை: இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறுசிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்து, அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு. கறிவேப்பிலை. எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

Feb 21, 2025

அவல் அல்வா

தேவையான பொருட்கள் - பொடித்த அவல், பால் தலா ஒரு கப், சர்க்கரை - 2 கப், நெய் அரை கப், கலர் சிறிதளவு, முந்திரி, பாதாம் தேவையான அளவு, குங்குமப்பூ சிறிதளவு. செய்முறை: கடாயை காயவைத்து 2 டீஸ்பூன் நெய் விட்டு, அவலை நன்றாக வறுத்து. மிக்ஸியில் போட்டு பாலை விட்டு நன்றாக அரைக்கவும். அடிகனமான கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைப் போட்டு இளம் பாகு வந்ததும் அரைத்த விழுதைக் கொட்டி கிளறவும். கலர், முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறி இறக்கவும். 

Feb 21, 2025

அத்திப்பழ அல்வா

தேவையான பொருட்கள் - அத்திப்பழம், பால், சர்க்கரை, நெய் தலா ஒரு கப், தேன் கால் கப், முந்திரி, பாதாம் - தேவையான அளவு.செய்முறை: அத்திப்பழத்தை நறுக்கி, பால் விட்டு வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைப் போட்டு இளம்பாகு காய்ச்சி, மசித்து வைத்த பழ விழுதை கொட்டி, நெய் விட்டுக் கிளறவும். முந்திரி, பாதாம் சேர்த்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி, தேன் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Feb 21, 2025

நேந்திரம்பழ அல்வா

தேவையான பொருட்கள் - நறுக்கிய நேந்திரம்பழம், நெய் - தலா ஒரு கப், பால் அரை கப், சர்க்கரை - ஒன்றரை கப், கலர் - சிறிதளவு. முந்திரி, பாதாம் -தேவையான அளவு.செய்முறை: நறுக்கிய நேந்திரம் பழத்துடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, 2 விசில் வந்ததும் எடுத்து நன்றாக மசிக்கவும். கடாயை சூடாக்கி, அதில் சர்க்கரையைக் கொட்டி ,இளம் பாகு வந்ததும், மசித்த பழ விழுதைச் சேர்த்து, நெய் விட்டுக் கிளறவும். கலர் முந்திரி, பிஸ்தா சேர்த்து ஒட்டாமல் வரும் பதத்தில் கிளறி இறக்கவும். 

Feb 21, 2025

மைசூர் அல்வா

தேவையான பொருட்கள் - கடலை மாவு, சர்க்கரை, நெய், தண்ணீர் தலா ஒரு கப், மில்க்மெய்டு - அரை டின், கேசரி கலர் அரை டீஸ்பூன், வறுத்த பாதம், முந்திரி துண்டுகள் ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில்கடலை மாவைக் கொட்டி, வாசனை வரும்வரை வறுக்கவும். இதில் சிறிது சிறிதாக தண்ணீரைக் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். மில்க்மெய்ட், நெய், கலர் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி, பாதாம், முந்திரி தூவி இறக்கவும். 

Feb 21, 2025

மிக்ஸட் வெஜிடபிள் அல்வா

தேவையானவை பொருட்கள் - கேரட் துருவல்,பீட்ரூட் துருவல், பரங்கிக்காய் துருவல், தேங்காய் துருவல் -தலா அரை கப், கோவா - கால் கப், சர்க்கரை - 2 கப் நெய் - கால் கப், பாதாம், முந்திரி துண்டுகள் -சிறிதளவு.செய்முறை: அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் நெய்யை விட்டு, தேங்காய் துருவலை போட்டு வறுக்கவும். காய்கறி துருவலைகளைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பாலை ஊற்றி வேக விடவும். கலவை நன்றாக வெந்ததும் கோவா சேர்த்து, சர்க்கரையைத் தூவி கிளறவும். இந்த கலவை ஒட்டாமல் அல்வா பதத்தில் வந்ததும் ஒரு முறை கிளறி இறக்கவும். பாதம். முந்திரி தூவி பரிமாறவும். 

Feb 21, 2025

கேரட்-இஞ்சி அல்வா

தேவையான பொருட்கள் - இஞ்சி துருவல் - அரை கப். கேரட் துருவல், சர்க்கரை - தலா ஒரு கப், பால் ஒன்றரை கப். நெய் - அரை கப், கலர் - கால் டீஸ்பூன்.செய்முறை: கேரட், இஞ்சியுடன் பால் சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதை அடுப்பில் வைத்துக் கிளறவும். கலவை வெந்து கொதித்துக் கொண்டிருக்கும் போது சர்க்கரை, நெய், கலர் சேர்த்துக் கிளறி கெட்டியாக ஒட்டாமல் வரும்போது இறக்கவும். 

Feb 14, 2025

பட்டாணி புலவு

 தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பட்டாணி - அரை கப்,பெரிய வெங்காயம் - 2. எலுமிச்சம்பழச்சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு. தாளிக்க: பட்டை - 1. லவங்கம் -2, ஏலக்காய் -2, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.அரைக்க : பச்சை மிளகாய் - 4. புதினா - ஒரு கட்டு, மல்லி - அரை கட்டு, தேங்காய் துருவல் - அரை கப், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு - 5 பல்.செய்முறை: ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து வதக்கி அரைத்தெடுங்கள். பாசுமதி அரிசியை ஊறவைத்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து வெங்காயம் சேர்த்துக் கிளறுங்கள். சிறிது உப்பையும் போட்டு நன்கு வதக்குங்கள். பிறகு, பட்டாணியையும் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறுங்கள். பச்சை வாசனை போக வதங்கியதும், உப்பு. எலுமிச்சம்பழச் சாறு, வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைத்து மூடி போட்டு 10 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறுங்கள்.  பீஸ் புலாவ் தயார்.

Feb 14, 2025

தக்காளி புலவு

தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பெரிய வெங்காயம் -3,தக்காளி -5, இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் -2. தேங்காய்ப்பால் அரை கப் (அல்லது) ஆவின் பால் - அரை கப், உப்பு தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி. தாளிக்க: எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், நெய் -ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை லவங்கம், ஏலக்காய் - தலா 1.செய்முறை : அரிசியைக் கழுவி. இரண்டரை கப் தண்ணீரில்ஊறவையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து. தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாயை சேருங்கள். அத்துடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, நன்கு வதக்குங்கள். வெங்காயம் நிறம் மாறி வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது, புதினா, மல்லித்தழை, தக்காளி. மிளகாய்தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, தேங்காய்ப்பால், உப்பு, ஊறவைத்த அரிசி (தண்ணீருடன்) ஆகிய எல்லாவற்றையும் கலந்து, மூடி வையுங்கள். ஒரு விசில் வந்ததும், 'ஸிம்'மில் வைத்து. ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள்.

Feb 14, 2025

சீரக புலவு

 தேவையான பொருட்கள் :- பாசுமதி அரசி 2 கப், முந்திரி - 10. பச்சை மிளகாய் -2, உப்பு - தேவையான அளவு. தாளிக்க : சீரகம் ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, நெய் - 4 டேபிள்ஸ்பூன்செய்முறை : பாசுமதி அரிசியை ஊற வைத்து உப்பு சேர்த்து, உதிராக வடித்து ஆறவிடுங்கள். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள். அடிகனமான வாணலியில் நெய்யைக் காயவைத்து, சீரகம், பட்டை தாளித்து முந்திரி, பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறுங்கள். முந்திரி சற்று நிறம் மாறியதும், வடித்த சாதம், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். விரைவாக செய்யக் கூடிய, வயிற்றுக்கு இதமான புலவு இது.

1 2 ... 46 47 48 49 50 51 52 ... 72 73

AD's



More News