தேவையான பொருட்கள் :- பாசுமதி அரிசி - 2 கப். பட்டன் காளான்- 12, பெரிய வெங்காயம் - 2, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகுதூள் கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு. தாளிக்க 2: பட்டை லவங்கம், ஏலக்காய் தலா 2, எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை : காளானை இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.பாசுமதி அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீரில் ஊறவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து. பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயத்தைச் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள்.பிறகு, காளானையும் சேர்த்து வதக்கி தயிரை அதோடு சேருங்கள். அத்துடன் கரம்மசாலா தூளைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதித்த பிறகு, ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, நன்கு கிளறி மூடிவைத்து, ஒரு விசில் வந்தபிறகு, தீயைக் குறைத்து. ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். விருந்துகளுக்கு ஏற்ற புலவு இது.
தேவையான பொருட்கள் - கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், 1 வெங்காயம், பொடியாக வெட்டியது. இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சமிளகாய் பொடியாக வெட்டியது, குடைமிளகாய் நைஸாக வெட்டியது. சேர்த்து வதக்கி விடவும், பின் நைஸாக அவித்த முட்டை கோஸ் அரை சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கி விடவும், நன்றாக சுருண்டு வந்தவுடன் இறக்கி வைக்கவும்.செய்முறை - மாவு அரை கப், கேப்பை அல்லது மைதா மாவு கால் கப்பு சோத்து நன்றாக கலந்து விடவும், இத்துடன் மாவைக் குழைத்து நடுவில் 2 முட்டை உடைத்து போட்டு முட்டையை நன்றாகக் கலந்து விட்டு, பின் 1 கப் பால் விட்டு நன்றாக கலந்து விட்டு மிக்ஸியில் போட்டு நன்றாக நைஸாக அடித்து எடுத்து ஆறிய கோஸ் கலவையை சேர்க்கவும் மல்லி இலை கொஞ்சம், சீரகம் அரை டீஸ்பூன் விட்டு நன்றாகக் கலந்து விடவும். பின் டவாவில் எண்ணெய் தடவி ஆம்லெட்டுகலாக ஊற்றி, பிரட்டி போட்டு வேக வைத்துப் பரிமாறவும். முட்டைகோஸ் ஆம்லெட் சுவையானதும், சத்தானதும் ஆன முட்டைகோஸ் ஆம்லெட் ரெடி தக்காளி சாஸ், அல்லது சில்லி சாஸ் சைட்டிஷ், சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்- 3 பாக்கெட் நூடுல்ஸ், 1/2 முட்டை கோஸ்,6 முட்டை,1 வெங்காயம்,2 பச்சை மிளகாய்,1ஸ்பூன் கடலைப்பருப்பு,சிறிதளவுகறிவேப்பிலை,தேவையானஅளவு உப்பு,1/4ஸ்பூன் மஞ்சள் தூள்,1ஸ்பூன் மிளகு தூள்,3 பாக்கெட்மேகி மசாலா,தேவையான அளவு தண்ணீர்சிறிதளவுகொத்தமல்லி, 2மேசைக்கரண்டி எண்ணெய். செய்முறை வாணலியில் தண்ணீர் ஊற்றி1 ஸ்பூன் எண்ணெய் விடவும்.1 ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் நூடுல்ஸ் உடைத்து போட்டு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு போட்டு தாளித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு இதில் முட்டை கோஸ் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி கொள்ளவும்.மஞ்சள் தூள், உப்பு, மேகி மசாலா தூள்களை சேர்த்து நன்றாக எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.பின்னர் முட்டை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.முட்டை சிறிது வெந்ததும் வேக வைத்த மேகி நூடுல்ஸ் சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.பின்னர் சிறிது மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
தேவையான பொருட்கள் -1கப் முட்டை கோஸ், மெல்லியதாக, பொடியாக நறுக்கியது.1கப்உளுந்து,1 அங்குலம் தோலுரித்த இஞ்சி,2 பச்சை மிளகாய்,2 மேஜைகரண்டி அவில்,1 சிட்டிகை பெருங்காய பொடி,1 டீஸ்பூன் மிளகாய், பொடி, 1டீஸ்பூன் சுக்கு பொடி,1டீஸ்பூன் கொத்தமல்லி விதை பொடி,1டீஸ்பூன் மிளகு பொடி,1 சிட்டிகை மஞ்சள் பொடி,1டீஸ்பூன் சீரகப் பொடி,தேவையான உப்பு,1/4 கப் கறிவேப்பிலை,1/4 கப் கொத்தமல்லி,தேவையான அளவு எண்ணை (refined oil உபயோகிக்க வேண்டாம்.)செய்முறை -3 கப் நீரில் உளுந்து ஊறவைக்க வடித்து சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் அறைக்க. மாவு கெட்டியாக இருக்கவேண்டும் ஒரு கிண்ணத்தில் போட்டு அறைத்த உழுந்து மாவுடன், கோஸ்,, ஸ்பைஸ் பொடிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, அவில். சேர்த்து பிசைக. உப்பு பொரிப்பதற்க்கு முன் சேர்க்கஓரு கனமான வாணலியில் எண்ணையை சூடு பண்ணுங்கள். 1/4 கப் மாவை உள்ளங்கையில் சிறிது எண்ணை தடவி தட்டிக்கொள்ளுங்கள். ஜாக்கிரதையாக மெதுவாக வடையை எண்ணையில் சேர்க்க. 4-5 வடைகள் ஒரே சமயத்தில் பொறிக்கலாம். ஜல்லி கரண்டியால் எண்ணையை சூழற்றினால் வடைகள் சமமாக வேகும். 1 நிமிடம் கழித்து திருப்புக.2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும். விண்டு பார்த்தால் வெந்துவிட்டதா என்று தெரியும். பேப்பர் டவல் மீது. பொறித்த வடைகளை போட்டால் ஒட்டிய எண்ணையை நீக்கலாம்.சூடான ருசியான சத்தான வடைகள் ருசிக்க தயார்,
தேவையான பொருட்கள் - 200 கிராம் முட்டைக்கோஸ்,இரண்டு சிறிய துண்டுகள் இஞ்சி,2 பல் பூண்டு,2 சிறிய பச்சை மிளகாய்,3ஸ்பூன் கடலை மாவு,இரண்டு ஸ்பூன்கான்பிளவர்,ஒரு ஸ்பூன்அரிசிமாவு,சிறிதளவுசோம்பு,தேவையான அளவு உப்பு,எண்ணெய் ,சிறிதளவுசில்லி சிக்கன் பவுடர்செய்முறை -முட்டைக்கோஸை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.பச்சை மிளகாய் ,இஞ்சி, பூண்டு, சோம்பு, இவற்றை விழுதாக அரைக்கவும். அரைத்த கோஸ் கலவையில் இந்த மசாலாவை சேர்த்து கடலை மாவு, கான்பிளவர் அரிசி மாவு ,உப்பு, சில்லி சிக்கன் பவுடர், கருவேப்பிலை, சேர்த்து கிளறவும்.இந்தக் கலவையை தோசைக்கல்லில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் விருப்பப்பட்ட வடிவத்தில் கைகளால் தட்டி நன்கு வேகவிடவும் இருபுறமும் நன்கு வேகவிடவும். இப்பொழுது மிக மிக ருசியான கோஸ்கட்லட் தயார்.
தேவையான பொருட்கள்-1 கப்கடலை மாவு,250 கிராம் முட்டைகோஸ்,1/4 கப் அரிசி மாவு,3 ஸ்பூன்மிளகாய் தூள்,1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு, சிறிதுகறிவேப்பிலை,தேவையான அளவு எண்ணெய்,செய்முறை - நறுக்கிய கோஸ்உடன் கடலை மாவு,அரிசி மாவு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு,கறிவேப்பிலை யுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்கடாயில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். சுவையான முட்டைகோஸ் பக்கோடா ரெடி.
தேவையான பொருட்கள் -1 கப் பாசுமதி அரிசி,1/4 கிலோ முட்டைக்கோஸ்,பாதி கேப்ஸிகம்,1 பெரிய வெங்காயம்,1 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி,5 பல் பூண்டு,2 1/2டேபிள் ஸ்பூன் எண்ணெய்,தேவைக்கு உப்பு,1 டீஸ்பூன் சோயா சாஸ்,2 டீஸ்பூன் நல்ல மிளகு தூள்.செய்முறை - முட்டைக்கோஸை நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.கேப்ஸிகத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.ஒரு பாத்திரம் அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெயும் தேவைக்கு உப்பும் சேர்த்து கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து வேக வைக்கவும்அரிசி முக்கால் பாகம் வெந்ததும், ரைஸை ஒரு வடிகட்டியில் வடித்து எடுக்கவும்.வடித்த ரைஸை நன்றாக ஆற விடவும்.ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு பச்சைமிளகாய், கேப்ஸிகம் சேர்த்து வதக்கவும்.இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் இதில் முட்டைக்கோஸை சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பின்னர் இதில் ரைஸ் சேர்க்கவும். இதனுடன் சோயா சாஸ், நல்ல மிளகு தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி இறக்கவும்.
தேவையான பொருட்கள் :- தக்காளி 3, வத்தல், 6, சின்ன வெங்காயம் 3,பூண்டு 5 பல், இஞ்சி 1 துண்டு, மிக்ஸியில் நைசாக, ரவை 1 கப், சோதுமை மாவு அரைகப், தேங்காய் துருவல் அரை கப், உப்பு தேவையான அளவு.செய்முறை - இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.பின் இவை இரண்டையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். ரொம்பவும் தண்ணீராக இரைக்காமல் கொஞ்சம், கெட்டியாகவே கரைத்துக் கொள்ளவும். இத்துடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து மல்லி இலை பொடியாக வெட்டியதைச் சேர்க்கவும். பின் 10 நிமிடம் அப்படியே மூடி வைக்கவும். பின் தோசைக் கல்லை சூடாக்கி மாவைக் கலந்து விட்டு நைஸாக ஊற்றாமல் கொஞ்சம் தடிமனாக ஊத்தப்பம் மாதிரி ஊற்றி, மூடி வைத்து 3 செகன்ட்ஸ் மிதமான சூட்டில் வேகவைத்து திருப்பி போடாமல் சிறிதளவு நெய்விட்டு பிரட்டிப் போடாமல் அப்படியே எடுத்து விடவும். தேங்காய்ச் சட்டினியுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கம், இது காலை டிபன், இரவு டின்னருக்கு சுவையான ஊத்தப்பம் ரெடி.
தேவையான பொருட்கள் :- உள்தொக்கிற்கு தேவையான பொருட்கள் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன், கடுகு சிறிதளவு, வெங்காயம் 1 பொடியாக வெட்டியது. இஞ்சி பூண்டு அரை டீஸ்பூன், கருவேப்பிலை பொடியாக வெட்டியது. தக்காளி 1 பெரியது. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன், வத்தல்பொடி முக்கால் டீஸ்பூன், கரம் மசாலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் கால் கப், கோதுமை மாவு 1 கப், எண்ணெய் 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,செய்முறை - எண்ணெய் விட்டு, கடுகு வெடித்தவுடன் வெங்காயம் இஞ்சி, பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கி விடவும். நன்றாக வதங்கியதும், மஞ்சள், வத்தல் பொடி, கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி விடவும், பின் தேங்காய்த்துருவலை சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, பொடியாக வெட்டிய மல்லித்தழை அல்லது கஸ்தூரி மேத்தி பவுடர் சேர்த்து இறக்கி விடவும். நன்றாக ஆற விடவும்.சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக சாப்ட்டாக பிசைந்து எடுத்துக் கொண்டு 10 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும். பின் மாவை எடுத்து சின்ன உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக மெல்லிசாக தேய்த்து எடுக்கவும், திரட்டிய சப்பாத்திக்குள் வதக்கிய தொக்கை நடுவில் வைத்து, பின் ஓரங்களை ஒன்ற சேர்த்து மூடி லேசாக தட்டி விடவும். கையில் எண்ணெய் தடவி மசாலா வெளிவராமல், சின்ன ரவுண்டாகத் தேய்த்து, தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பேனில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சப்பாத்திகளை போட்டு பிரவுன் கலராக வரும் வரையில் சுட்டு எடுக்கவும் இதற்கு சைட்டிஷ் தேவையில்லை. வேண்டுமென்றால் Tomoto ketchep, Mayonize. தயிர் தொட்டு சாப்பிட, சுவையான டிபன் ரெடி.
தேவையான பொருட்கள் :- ஒரு பேனில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் சீரகம், சேர்த்து பொரிந்தவுடன் 2 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கி சோத்து நன்றாக வதக்கவும், 2 பச்சமிளகாய் பொடியாக வெட்டி சேர்க்கவும். பின் சிறிதளவு இஞ்சி துருவி சேர்த்து, பொடியாக வெட்டிய கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிடவும், 1 சிறிய கேரட் துருவி சேர்த்து விட்டு வதக்கி மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் சேர்த்து விட்டு இறக்கி ஆற வைக்கவும்.செய்முறை - கோதுமை மாவு ஒன்றரை கப், அல்லது கேப்பை மாவு, அரிசி மாவு 3 டேபிள் ஸ்பூன், பின் இத்துடன் வதக்கியவற்றை சேர்த்து அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு, உப்பு சேர்த்து 3 டேபிள் ஸ்பூன் பொடியாக உடைத்த நிலக்கடலை சேர்த்து மல்லி இலை சேர்த்து தண்ணீர் விடாமல் கலந்து விடவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவு மாதிரி இல்லாமல் கொஞ்சம் லூசாகப் பிசைந்து உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் எண்ணெய் தடவி ,உருண்டைகளை வைத்து நைஸாகத் தட்டி விட்டு (ரவுண்டாக) காய்ந்த தோசைக்கல்லில் லேசாக எண்ணெய் விட்டு, வாழை இலையில் அப்படியே பேனில் தட்டி விட்டு மெதுவாக வாழை இலையை எடுத்து விட்டு, இரண்டு பக்கமும் நன்றாக வேகவிட்டு, எடுத்து வைக்கவும். இந்த அடைக்கு சைட்டிஷ் தேவையில்லை. தேவையானால் தேங்காய் சட்னி செய்து சாப்பிடலாம். சுவையான சத்தான தோசை அடை ரெடி.