அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகை,. இதன் மருத்துவ குணங்கள், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.அனேக நோய்களை நீக்குகிறது. மனிதர்களுக்கு தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி நிரம்பியது.அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது.ஊட்ட சத்தாகவும்,ரத்தப் போக்கை கட்டுப் படுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை திவர்த்தி செய்யவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறதுஅதிமரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து, வறுத்து, சூரணம் செய்து வைத்து, 3 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டால், அதிகச் சூட்டால் ஏற்படும் இருமல் தீரும்.அதிமதுரம், சீரகம் சரிசமமாக எடுத்து பொடித்து, 20 கிராம் பொடியை, 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். 100 மில்லியாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில், பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தி ஆகும்.அதிமதுரம் மற்றும் தேவதாரம், தலா, 35 கிராம் எடுத்து, வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால், சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்அதிமதுரச் சூரணம் 2 கிராம் எடுத்து, தேனில் குழைத்து, தினம், மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாகும். உடல் பலமும் ஆரோக்கியமும் விருத்தியாகும்.அதிமதுரம், ரோஜா மொட்டு, சோம்பு இவற்றை சம அளவில் எடுத்து, இடித் சலித்து, இரவு படுக்கும் போது, பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.அதிமதுரச் சூரணம் கலப்படம் சந்தனச் சூரணம், தலா, 0.8 கிராம் எடுத் பாலில் கலந்து, நான்கு வேளை சாப்பிட்டால் வாந்தியுடன் ரத்தம் வருதல் நிற்கும்.உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள். அதிமதுரச் சூரண 1கிராம் எடுத்து, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்கு கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்அதிமதுரம். வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக தலா, 10 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளவும். 250 கிராம் சர்க்கரையை தண்ணீர் சிறிதளவு விட்டு, பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும் போது, மேற்கண்ட சூரணங்களைக் கொட்டி, லேகியம் தயாரித்துக் கொள்ளவும். தினம். மூன்று முறை, இரண்டு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால், வறட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப்புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.அதிமதுரத்தை நன்றாக அரைத்து, பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால்,இளநரை ஏற்படாமல் தடுக்கும். முடி உதிர்தல் இருக்காது.அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால், உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால், தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கிவிடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்துவிடும்ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிடவும்...
சிறுதானியங்களில் 11.8 சதவீ தம் என்ற அளவில் அதிகமான புரதச்சத்து கம்பு தானியத்தில் தான் உள்ளது.வைட்டமின்-ஏ உடலில் உருவாவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன், என்ற சத்துப்பொருள் கம்பு பயிரில் அதிகம் உள்ளது. இதுதவிர, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்-சி, ரிபோ பிளேவின், நியாசின் சத்துக்கள் உள்ளன.கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க கம்பங் கூழ் உதவுகிறது. கம்பு தானியத்தை அடிக்கடி உணவாக உட்கொள்ளும்போது 2-ம் வகை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது. கம்பு தானியத்தில் உள்ள அதிக நார்ச்சத்து குடலில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து செரிமானத்தை மெதுவாக செய்வதால் ரத்த குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. மேலும், கம்பில் உள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால், ரத்த சர்க்கரை அளவு உடலில் கட்டுப்படுகிறது. கம்பு தானியத்தில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தை குறைக்க ஒன்றிணைந்து செயல்படுவதால் இதயம் சீராக இயங்க உதவுகிறது.பெண்களுக்கு ஏற்படும் பாலி சிஸ்டிக் ஒவரி சிண்ட்ரோம் எனும் கர்ப்பபை கட்டிகள், ஹார்மோன் சுரப்பு பாதிப்பு காரணமாக ஏற்படுகிறது. இதனை தடுக்க கம்பு உத வுகிறது. கம்பு தானி யத்தில் உள்ள அதிக நார்ச்சத்து மற் றும் மெக்னீசியம் ரத்த சர்க்கரை மற்றும் இன் சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதால் கட்டிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
தினமும் இரண்டு அல்லது மூன்று வெண்டைக் காய்களை சுத்தம் செய்து முனையையும், அடிப் பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்து குடித்து வந்தால், ஒரு சில மாதங்களில் ரத்த புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் எடை காரணமாக கால்கள் வீங்குதல் மற்றும் கால் வலி போன்ற இன்னும் பல பிரச்சனைகள் இருந்த இடம் இல்லாமல் போகும் என ஆயுர் வேத வைத்தியர்கள் கூறுகின்றனர்.
மனிதகுலம் இனிப்புக்காக தேனைப் பயன்படுத்தி வருகிறது. அதன் மருத்துவ குணங்களுக்காகவே பல நாடுகளின் பாரம்பரிய வைத்தியத்தில் தேன் முக்கிய இடம் பிடித்துள்ளது. தேனில் பல வகைகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பூக்களிலிருந்து ,தேனீக்கள் தேனைச் சேகரித்து வைக்கும்போது, அவற்றின் சுவை, மருத்துவ குணம் தனித்து வம் நிறைந்ததாக இருக்கும்.அப்படியான ஒன்று தான் மனுகா தேன்(Manukahoney). ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு வகை மரம் மனுகா. இதிலிருந்து தேனீக்களால் சேக ரிக்கப்படும் தேனில் மருத்துவ குணம் அதிகம். பாக்டீரியா எதிர்ப்பு, நோய் எதிர்ப்புத் திறன்இந்தத் தேனுக்கு உண்டு என்பது ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று தான். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை, இந்தத் தேனை மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளது. பொதுவாக மார்பகப் புற்றுநோய் செல்கள், ஈஸ்ட்ரோஜன் எனும் நாளமில்லா சுரப்பியைத் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதைத் தடுக்கவே ரசாயன மருந்துகள் உப யோகப்படுகின்றன. இதற்கு மாற்றாகத் தான் தேனைப் பயன்படுத்தலாம் என்கிறது ஆய்வு. விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக மார்பகப் புற்றுநோய் கட்டிகளை உருவாக்கினர். அவற்றின் வளர்ச்சியை மனுகா தேன் கட்டுப்படுத்துவதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து எலிகள் மீது சோதித்தனர். மனிதர்களின் உடலில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை எலிகளில் பொருத்தினர். எலிக ளுக்குத் தேனை உண்ணக் கொடுத்தனர். இது, எலிகளின் உடலில் வளர்ந்த கட்டிகளைப் பிற செல்களுக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல்84 சதவீதம் வரை அழித்துவிட்டது.மனுகா தேனுக்கு புற்றுநோயைக் கட்டுப் படுத்தும் திறன், மேற்கண்ட சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. இதனால், இந்த தேனை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்த லாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தினசரி கிராம்புகளை மெல்லுவது போன்ற சிறிய உணவு மாற்றங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, கிராம்புகளின் ஆக்ஸிஜனேற்றங்கள் நாள்பட்ட நோய்களைத் தடுக்கின்றன, அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன, மேலும் அவை பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கூடுதலாக, கிராம்பு கல்லீரலை சுத்தப்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இது வகை2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது. பொது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறிய உணவு மாற்றங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். சாதுவான உணவில் சுவை சேர்ப்பதோடு, ஒரு துண்டு கிராம்பு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்ட ஒரு சிறிய மசாலா, உங்கள் உடலுக்கு நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களின் ஊக்கத்தை அளிக்கிறது.
பச்சை பட்டாணியில் மாவுச்சத்து, கொழுப்பு, தயாமின், நயாசின், ரைபோஃப்ளேவின், புரதச்சத்து(இறைச்சியிலிருந்து கிடைக்கும் சக்திக்கு ஈடானது), கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து,போன்ற ஊட்ட சத்துக்கள் உள்ளன.உடலுக்குச் சக்தியைத் தரும், பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் மூளைக்குத் தேவைப்படும் ஊட்டத்தைத் தரும், மூளை நோயைத் தடுக்கும்.ஜீரண உறுப்புகள் பலமடையும். குடல் புண்ணை ஆற்றும், வாய் துர்நாற்றமும் நீங்கும், வாய்,நாக்குப் புண் குணமாகும், ஜீரண உறுப்புகள் நன்கு செயல்படும்.கண் பார்வைக்கு வைட்டமின் ஏ இன்றியமையாதது.உடல் வலி, தலைவலி ஆகியவை ஏற்படாமல் இருக்கவும், பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதிலுள்ள வைட்டமின் சி பயன்படுகிறது.நுரையீரல் நோய் குணமடையும், நுரையீரலுக்கும் இதயத்துக்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது, இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.மருந்துபோல இதைத் தினமும் ஒரு கைப்பிடி அளவுபிறகாய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுங்கள்.
வயிற்றை சுத்தம் செய்ய இதை மட்டும் செய்தால் போதும். அதற்கு, காலையில் வெறும் வயிற்றில், சோறு வடித்த கஞ்சி சூடாக ஒரு டம்ளர், அதில் ஒரு டம்ளர் நல்ல புளித்த மோர், கொஞ்சம் அதிகமாக உப்பு சேர்த்து நல்ல கலந்து, சூடாக, குடித்தால் அடுத்து ஒரு மணி நேரத்தில் வயிறு நல்ல சுத்தமாகி விடும். இப்படி மூன்று மாதம் ஒரு முறை செய்யலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உணவு வயிற்றுக்கு, உறக்கம் மனதுக்கு, உழைப்பு பணத்துக்கு, உதவி சேவைக்கு,உத்தரவு பதவிக்கு ,உறவு குழப்பத்துக்கு,உயர்வு பெருமைக்கு ,உடை மானத்துக்கு ,உள்ளம் எண்ணத்துக்கு, உயிர் வாழ்வுக்கு ,உரிமை பாசத்துக்கு….
பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்ட, குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் ஒரு உணவுப்பொருள் என்றால் அது கோழி முட்டை மட்டுமே.தசைகளின்இயக்கத்திற்கு,மூளையின்செயல்பாட்டிற்கு,கண்களின்பார்வைக்கு,இதயத்தின் சீரான இயக்கத்திற்கு என்று ஒட்டுமொத்த உடலின் சீரான செய்ல்பாட்டுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சீரான அளவில் கோழி முட்டை கொண்டுள்ளது.கால்சியம், வைட்டமின்ஏ, பி1, தையமின், வைட்டமின்பி2எனும்ரிபோப்ளேவின், குரோமியம், நியாசின், செம்பு, வைட்டமின்பி 5 எனும்பாந்தோயோனிக்அமிலம், இரும்பு, மெக்னீசியம்,மாங்கனீசு, பயோட்டின், மாலிப்டினம், போலேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம். துத்தநாகம், கோலின், ஒமேகா உள்பட பல்வேறு சத்துகள் முட்டையில் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர்கள்,முட்டை என்பது உயர்தரபுரதம், அத்தியாவசிய கொழுப்புகள், உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட முட்டையை, தினமும் உட்கொள்ளும் போது சத்துக்குறை பாட்டால் ஏற்படும் பல உடல் பாதிப்புகளை தடுக்கலாம் என்கிறார்கள்.
செவ்வாழைப்பழத்தில் மற்ற பழங்களை விட குறைவான கலோரி அளவு கொண்டுள்ளது. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். செவ்வாழைப் பழம் சருமத்தில் உள்ள குருதி சுற்று இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதில் 75% நீர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது. செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. தலைமுடியில் உள்ள பொடுகு மற்றும் வறட்சி குறைய, செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்க்கலாம். ஏராளமான நன்மைகள் இருக்கும் நிலையில் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடலாம்.