செவ்வாழைப்பழத்தில் மற்ற பழங்களை விட குறைவான கலோரி அளவு கொண்டுள்ளது. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். செவ்வாழைப் பழம் சருமத்தில் உள்ள குருதி சுற்று இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதில் 75% நீர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது. செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. தலைமுடியில் உள்ள பொடுகு மற்றும் வறட்சி குறைய, செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்க்கலாம். ஏராளமான நன்மைகள் இருக்கும் நிலையில் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடலாம்.
பேரிக்காயில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால்,ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படுகிறது.அதனை தினமும் சாப்பிட்டு வருபவர்களுக்கு பல வைட்டமின் சத்துக்கள் கிடைக்கும் .ஒரு பேரிக்காயில்6 கிராம் நார்ச்சத்து இருப்பதால், ஒரு பெண்ணுக்கு தேவைப்படும் சராசரி நார்ச்சத்து அளவில்24 சதவீதம் ஒரு பேரிக்காய் சாப்பிடுவதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்று கூறப்படுகிறது.பேரிக்காய் போன்ற குறைந்த கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடை சீக்கிரம் குறையும் என்றும் , பேரிக்காயில்84 சதவீதம் நீர் உள்ளதால்,உடலுக்கு தேவையான அளவுநீர்ச்சத்து கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.பேரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது, ஆரோக்கியமான உடல் மற்றும் நல்ல செரிமான அமைப்பு ஏற்படும்.
மூலநோய் குணமாக என்னென்ன உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் முன்னோர்கள் கூறியது . துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம். கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம். பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம். முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.
இருமல் சளி தலைவலி போன்ற உபாதைகள் இருந்தால், இதனை சாப்பிடக்கூடாது காரணம் தலையில் நீர் கோத்துக் கொள்ளும். இதில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த காய் என்பதால் வாங்கிய உடனே ,சமைத்து சாப்பிடுவது நல்லது, அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் உபயோகித்து விட வேண்டும். இதை வாங்கும்போது தோல்களில் வெடிப்பு அல்லது நிறம் மாறிப் போயிருந்தால் வாங்க வேண்டாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலுக்கும் மூல நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றில் அமில சுரப்பு ,அதிகமாவதை தடுக்கும் மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் ,நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது. சிறுநீரக கோளாறுகளுக்கு, நன்கு முற்றிய பீர்கங்காயை பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள், தோல் நோய்களையும் மற்றும் நீரழிவு நோய்களையும் குணப்படுத்துவதில் உதவுகின்றன. இதனை யாரும் இரவில் சாப்பிடக்கூடாது.
மருத்துவ காரணங்கள் அல்லாமல், வலிகளை தாங்க முடியாமலும், சிசேரியனை நோக்கி செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.ஆனால் ஆரோக்கியமான உடல்வலிமையோடு மனவலிமையும் கை கூடினால் சுகப்பிரசவம் எளிதான ஒன்று.மனஅழுத்தம் பிரசவத்திற்கு முதல் எதிரி.பிரசவம் எனக்கு எளிதில் நிகழும் என்ற கருத்தை மட்டுமே மனதில் வைத்து கொண்டு அந்த காலகட்டத்தை சந்தோசமாக அனுபவியுங்கள்.கர்ப்ப காலத்தின் பொழுது மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகள் தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவாக்குகின்றன.மேலும் பிறப்புறுப்பையும் இளக்கமாக்கி சுகபிரசவம் எளிதாக நடைபெற உதவுகின்றது. ஆனால் இத்தைகைய உடற்பயிற்சிகள் முறையாக நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில் மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் சிலநேரம் ஆபத்தாய் முடியக்கூடும்.எளிதான சுகப்பிரசவத்திற்கு தாயின் உடல் எடையும் வயிற்றில் உள்ள குழந்தையின் எடையும் குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பது அவசியம்.கர்ப்ப காலத்தின் பொழுது தாய்மார்கள் அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பிரசவத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாக சில சமயம் வலி வரும் அப்போ அது பிரசவ வலி தானா என்று தெரிந்து கொள்ள, ஒரு முட்டை (நாட்டுக்கோழி யாக இருந்தால் சிறப்பு) சிறிது மிளகு, 1 ஸ்பூன் விளக்கெண்ணை சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டால் அதே நாளோ அல்லது மறு நாளோ குழந்தை வலி இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும். வலி வரும் போது எல்லாம் இதை செய்து சாப்பிடலாம்.
இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது, அதிகசூட்டில் சமைக்கக் கூடாது.வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.மூட்டு வலிக்கு மருந்தாகிறது.செரிமானப் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. வயிற்று வலி ,வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.இரத்தத்தில் உள்ள சர்க்கரைஅளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது. இதில் கலோரிகள் மற்றும்கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால் ,தேவையிலலாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.இதில் உள்ள கேயின் என்னும் வேதிப் பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.ஒரு நல்ல ஆன்டி ஆக்சிடண்ட்டாக உள்ளது.இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராக செயல்பட இது உதவுகிறது.
வேகவைத்த முட்டைகள் பெரும்பாலும் முட்டைகளை. கூடுதல் பொருட்களைச் சேர்க்காமல், அவற்றின் பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை தயாரிப்பது மற்றும் தக்கவைப்பது எளிது. யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்சலின் (USDA) கூற்றுப்படி, கடின வேகவைத்த முட்டையில் தோராயமாக 6 கிராம் உயர்தர புரதம் உள்ளது, இது தசை வளர்ச்சி மற்றும் பழுதுபார்ப்பிற்கான சிறந்த தேர்வாக அமைகிறது மேலும், வேகவைத்த முட்டைகள் அத்தியாவசிய வைட்டமின்களான பி12, ஏ மற்றும் டி, இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களுடன். இது உடலை திருப்திப்படுத்த உதவுகிறது, இதனால் தேவையற்ற பசி மற்றும் எடை அதிகரிப்பில் இருந்து விடுபட உதவுகிறது. முட்டையில் கோலின் உள்ளது, இது மூளை வளர்ச்சி, நினைவக செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்து ஆகும். முட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளான லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் வயது தொடர்பான மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நல்ல பார்வையை பராமரிக்கிறது வேகவைத்த முட்டைகள் வயிற்றில் மென்மையாக இருக்கும், இது நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு அல்லது உணர்திறன் வாய்ந்த செரிமானம் உள்ளவர்களுக்கு, இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. வேகவைத்த முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது. அவற்றில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகிறது மற்றும் இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது. ஒரு பெரிய வேகவைத்த முட்டையில் சுமார் 78 கலோரிகள்,ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை வயது தொடர்பான கண் சிதைவிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
கருப்பு திராட்சை என்றவுடன், அனைவருக்கும் நினைவுக்கு வருவது, புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட, அதன் விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.கருப்பு திராட்சை விதையில், புரோஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக உள்ளது. இது, ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகளை நீக்குகிறது.மூல நோயால் ஏற்படும் ரத்தப் போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பை கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப் போதல் போன்ற பிரச்னையை குணமாக்குகிறது.சிறுநீரக செயல்பாட்டிலுள்ள குறைகளை சரி செய்கிறது. மேலும், மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் பாதுகாக்கிறது.பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும். புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும்,புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.எனவே, திராட்சைப் பழத்துடன் விதைகளை சேர்த்து உண்பது, நல்ல பலனை தரும்.உடல் வளர்ச்சியில் குறைபாடு, உடல் பலகீனம், தோல் வியாதி, மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகிய பிரச்னை உள்ளோர், திராட்சை விதை தொடர்ந்து சாப்பிட்டு வர, விரைவில் நிவாரணம் கிடைக்கும். நினைவாற்றலை பெருக்கவும் இது பயன்படுகிறது.
முருங்கைக்காய் ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.மலச்சிக்கல்,வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு பயன்படுகிறது.இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும்,தாது உற்பத்தி அதிகரிக்கும்.இதில் ஜிங்க சத்து அதிகம் உள்ளதால் மலட்டுத்தன்மை விந்து வேகமாக வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காய்உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு மலசிக்கல், குடல் பிரச்சினைகள், வாயுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏறபட வாய்ப்புள்ளது.முதியவர்கள் மூட்டு நோய் உள்ளவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்ள வேண்டும்.
கரும்புச்சாறு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட உடலுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது.240 மில்லி கரும்புச் சாறில் 250 கலோரிகள், 50 கிராம் கார்போஹைட்ரேட், இரும்பு, மக்னீசியம், கால்சியம்,பொட்டாசியம்,மாங்கனீசு, வைட்டமின்கள் கரும்பின் மருத்துவ குணங்கள் உள்பட பல நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன.கல்லீரலை வலுவூட்டி நன்கு செயல்பட வைப்பதற்கு கரும்பில் உள்ள சத்துகள் உதவுகின்றது.சோர்வாக இருக்கும்போது கரும்புச்சாறு குடித்தால் கரும்பில் உள்ள குளுக்கோஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடனடியாக உடலால் உறிஞ்சப்பட்டு புத்துணர்ச்சியை வழங்கி சோர்வை நீக்கும். கரும்புச்சாறில் உள்ள பொட்டாசியமானது செரிமான திறனை மேம்படுத்துகிறது. மேலும், அது குறைந்த கிளை செமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இது ரத்த குளுக் கோஸ் அதிகரிப்பதை தடுக்கும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது...கரும்புச்சாறில் உள்ள கால்சியம் சத்தானது எலும்புகள் மற்றும் பற்களின் உறுதியை அதிகரிக்கச்செய்யும். கர்ப்பிணிகள் கரும்புச்சாறு உட்கொள்வதால் அதில் உள்ள இரும்பு மற்றும் போலிக் அமிலம், சிசுவின் சரியான வளர்ச்சியை ஊக்குவிப்பதாக மருத்துவ ஆய்வுகள்கூறுகின்றன. டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவில், கரும்புச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பொங்கல் சமயத்தில் கிடைக்கும் கரும்புகளை கடித்து சாப்பிட்டாலும் சரி, ஜீஸ் செய்து சாப்பிட்டாலும் இந்த நன்மைகளை பெறலாம் .