கத்திரிக்காயில் வைட்டமின் ஏ, பி,சி,கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.அரிப்பு, சரும அலர்ஜி, கண் எரிச்சல் மற்றும் கண்களில் ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் சருமம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் சுத்தரிக்காயை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக கல் பிரச்சனையை மோசமாக்கும் என்பதால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.கத்திரிக்காயில் இயல்பாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் பண்பு உள்ளதால் கருவுற்ற பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி சாப்பிடுவது நல்லது.கத்தரிக்காயை அதிகம் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் வாயு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அளவாகசாப்பிடுவது நல்லதுசர்க்கரை நோய், நுரையீரல் பிரச்சனை மற்றும் ஞாபக சக்திகுறைவாக உள்ளவர்கள் கத்தரிக்காயை உணவில் தாராளமாகஎடுத்துக்கொள்ளலாம்.
கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும்.பப்பாளி, பீன்ஸ், பாதாம் ,முந்திரி,நட்ஸ். பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் உறுதியாக. வலுவாக இருக்கும்.கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலமாக இருக்கும்.வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். ஆஸ்துமா, மார்பு சளி போன்றவை நீங்க, மலட்டுத்தன்மையை அகற்ற முருங்கை கீரை சூப் நல்லது.மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரித்து, பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.
குளிர்காலம் துவங்கும் போது, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் வைரஸ்களால் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம். பேரீச்சம் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் மற்றும் வைட்டமின்கள், நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், முக்கிய பங்கு வகிக்கின்றன என்கின்றனர், நிபுணர்கள்.பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதால். உடலின் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும்,ஆற்றலையும் மேம்படுத்துகிறது.ஜலதோகஷத்தை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பேரிச்சம் பழம். தண்ணீர் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம்பழம், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்நீரை படுக்கும் முன் குடித்து வந்தால் சளி குறையும். குளிர் காலத்தில், நம் உடலுக்கு அதிக ஆற்றல் தேவை. பேரீச்சம் பழத்தில் குளுகோஸ், ப்ரக்டோஸ் சுக்ரோஸ் போன்ற இயற்கையான இனிப்புகள் நிறைய உள்ளது. இது, ரத்த சர்க்கரையை துரிதமாக அதிகரித்து, உடலுக்கு ஆற்றலை வழங்கும்.போதிய நார்ச்சத்துஇல்லாதஉணவுகளைஉண்ணும்போதுஏற்படும்மலச்சிக்கலைதீர்க்கபேரீச்சம்பழம்உதவுகிறது.பொதுவாக, குளிர் காலத்தில்இதயம் சீராக இயங்க, அதிகமான ஆற்றல் தேவை. பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை, இதயத்தின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது.அதேபோன்று, குளிர் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, மலச்சிக்கல் ஏற்படும். பேரீச்சம் பழங்களில் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. அது, நம் உடல் இயக்கத்திற்கான நீர்ச்சத்து தேவையைபூர்த்தி செய்கிறது. குளிர் காலத்தில் சீரான ரத்த ஓட்டம் தேவை. அதற்கு, இரும்புச்சத்து அவசியம்.ஒவ்வொரு பேரீச்சம் பழத்திலும், 2 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள், மூன்று அல்லது நான்கு பேரீச்சம்பழங்களை நீரில் ஊற வைத்து, அதை மறுநாள் காலை சாப்பிடுவதால், ரத்த சோகை குணமாகும். பேரீச்சம் பழத்தில் மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் என்ற அமினோ அமில மூலக்கூறும் உள்ளது.இவை, குளிர் காலத்தில் நல்ல துாக்கத்திற்கு உதவும். தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன், பேரீச்சம் பழங்களை சாப்பிட வேண்டும். அதைதேனில் ஊற வைத்த பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம், பதட்டம், உடல் சோர்வு உள்ளிட்டவை நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், ஞாபக மறதி, ரத்த அழுத்தம், நரம்பியல் பிரச்னைகள் மற்றும் சரும பிரச்னைகளை சீர்செய்யும். முதியோர் நலன் காக்கும். வைட்டமின் பி 12,பேரிச்சம் பழத்தில் உள்ளது.
வேகவைத்த முட்டைகள் கலோரிகள் அல்லது ஆரோக்கியமற்ற கொழுப்பைச் சேர்க்கக்கூடிய பொருட்கள் இல்லாமல் எளிதான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை. குறைந்த தயாரிப்பு நேரத்துடன் எடுக்கப்பட்ட புரதச்சத்து நிறைந்த விரைவான உணவுக்கு வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட்டுகள் அவற்றின் தனிப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. வேகவைத்த முட்டைகள் குறைந்த கலோரி எண்ணிக்கையுடன் மிகவும் எளிமையானவை, அதே நேரத்தில் ஆம்லெட்டுகள் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன மற்றும் ஆரோக்கியமான பொருட்களால் நிரப்பப்பட்டால் அதிக ஊட்டச்சத்து உட்கொள்ளலை வழங்குகின்றன.ஆம்லெட்டுகள் காய்கறிகள் போன்ற கூடுதல் சேர்க்கைகள் மற்றும் அதிக அளவு சீஸ் அல்லது கெடுதலான எண்ணெய்கள் இல்லாமல் தயாரிக்கப்படும் போது இன்னும் கூடுதலான ஊட்டச்சத்து மதிப்பைச் சேர்க்க இடமளிக்கிறது.
குளிர்காலத்தில் இனிப்பு, புளிப்பு. உப்புச்சுவை மற்றும் பசைத்தன்மை உள்ள உணவுகள் நல்லது. கோதுமை கஞ்சி மற்றும் ஆட்டுக்கால் சூப்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு சூட்டைத் தரும். சுரைக்காய், பறங்கிக்காய் போன்ற நீர்க்காய்கள் பனிக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை. பப்பாளி, அன்னாசி பழங்கள் சாப்பிடலாம். நாட்டுக்கோழி மற்றும் வெள்ளாட்டுக் கறி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.கதகதப்பான உடைகளுடன் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது, குளிர்கால தசை இறுக்கத்தை சீராக்கும். வெயில் படும்படியாக இருப்பது நல்லது. குளிர்காலங்களில் பச்சைத் தண்ணீரை தவிர்த்து, சுடு தண்ணீரில் குளிக்கலாம். உங்களின் உடைகள், விரிப்புகள் கதகதப்பாக இருக்கட்டும்.குளிரால், சளி உறைந்து போகும். தொண்டையைச் செருமித் துப்பினால் கூட சளி வராது. நல்லெண்ணெயில் மிளகு, சீரகம் பொரித்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். வெதுவெதுப்பாய் இருக்கும் எண்ணெயை,ஐந்தாறு சொட்டு மூக்கு வழியாக விட்டால், தொண்டை வழியாக இறங்கி சளியை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து வெளியேற்றும்ஒரு லிட்டர் தண்ணீரில், கோரைக் கிழங்கு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) 10 கிராம், சுக்கு -5 கிராம் சேர்த்து, அரைலிட்டராக கொதிக்க வைத்து குடிக்க, மார்பில் சளி கட்டாது. துளசி தீர்த்தமும் பலன் தரும்சுற்றிலும் பனியாய்,வானம், மப்பும் மந்தாரமுமாய் இருந்தால், சாம்பிராணி புகை போட்டு, அந்தப் புகையில், போர்வையை காட்டுங்கள். அந்த துணியால் உடம்பைப் போர்த்த கதகதப்பு கூடும். இதுவும் பழங்காலத்தில் இருந்த ஒரு பழக்கம்.
புரதச்சத்து அதிகம் நிறைந்த ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று சோளம், சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். இதற்கு சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்ற வேறு பெயர்களும் உண்டு.வட அமெரிக்காவில் இருக்கின்ற மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும்.அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர்.சோளத்தில் வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்புநிற சோளம் என பல வகைகள் இருக்கின்றன.அரிசியுடன் ஒப்பிடும்போது இதில் நார்ச்சத்து அதிகம், இதனை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது, எனவே வயிறு மற்றும் குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.கோதுமை போன்ற தானியங்களை ஒப்பிடுகையில் சோளத்தில் குளுட்டன் இல்லை, குளுட்டன் அதிகமாக உட்கொண்டால் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், ஆனால் சோளத்தில் குளுட்டன் கிடையாது, எனவே இதை தாராளமாக சாப்பிடலாம்.உடல் எடையை அதிகரிக்க விரும்பும் மக்கள், சோளத்தை உட்கொள்ள வேண்டும். இதில், போதிய அளவில் கார்போஹைட்ரேட்களும் உள்ளன, இவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.சோளத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஏராளமான இரும்புச்சத்துகள் உள்ளன, இவை இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது, இது உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் சோளத்தை தாராளமாக உட்கொள்ளலாம்.இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து விடுகிறது, எனவே இதயம் தொடர்பான நோய்கள் உங்களை நெருங்காது, இதுதவிர ஆன்டி ஆக்சிடன்டுகள், மெக்னீசியம், விட்டமின் பி மற்றும் இ இருப்பதால் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.சோளத்தில் போலிக் ஆசிட் நிறைந்துள்ளதால், கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். இதில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடாமல் பாதுகாக்கின்றது. இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகின்றது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இஞ்சியில் காணப்படும் மருத்துவ குணங்களால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை பெறுகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.இஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. அஜீரணம், புண்கள், மலச்சிக்கல் நீங்கும். குடல் சார்ந்த பாதிப்புகளில் குணம் கிடைக்கும்.இஞ்சி ஒரு இயற்கை வலி நிவாரணி. அழற்சி எதிர்ப்பு மற்றும் வலியை விளைவிக்கும் உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.ரத்தம் கெட்டியாகி உறைவதை தடுக்கும் இயல்பையும் இஞ்சி கொண்டுள்ளது. தொடர்ந்து இஞ்சி உட்கொள்ள ரத்தம் கெட்டியாவது தடுக்கப்பட்டு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இஞ்சி இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை சீராக இருக்க உதவுகிறது. இஞ்சியை உட்கொள்வது உடல் எடையை குறைக்க உதவுகிறது . இஞ்சியை உணவில் சரியான அளவில் தினமும் உண்டு வந்தால் மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை எதுவும் வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.காலை இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்கிறது, சித்த மருத்துவம்.
மணம் தரும் அற்புதமான மூலிகை மரிக்கொழுந்து. ஆரோக்கியத்தை தரும் இது, பூஞ்சை காளான்களுக்கு மருந்தாகிறது. நோய் கிருமிகளை தடுக்கிறது. வலியை போக்குகிறது, வீக்கத்தை வற்ற செய்கிறது. மன அழுத்தத்தை போக்கும் ஒன்றாக விளங்குகிறது. மரிக்கொழுந்தை பயன்படுத்தி தலைவலி, மூட்டுவலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: மரிக்கொழுந்து, நல்லெண்ணெய், சுக்குப்பொடிசெய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் மரிக்கொழுந்து, சிறிது சுக்குப்பொடி சேர்த்து வதக்கி இளஞ்சூடாக தலையில் பற்றாக போட்டுவர தலைவலி சரியாகும்.மரிக்கொழுந்தை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, சிவப்பு தன்மையை போக்கும் தைலம் தயாரிக்கலாம்.தேவையானபொருட்கள்: மரிக்கொழுந்து,தேங்காய்எண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.இதனுடன், நீர்விடாமல் அரைத்த மரிக்கொழுந்து விழுது சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதைவடிகட்டி பயன்படுத்திவர தோல்நோய்கள் குணமாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட மரிக்கொழுந்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. எவ்வகை வலியையும் போக்க கூடிய தன்மை உடையது.அரிப்பை தரும் நோய்களுக்கு மேல்பற்று மருந்தாகிறது. உள், வெளி மருந்தாகவும், விஷத்தை முறிக்க கூடியதாக மரிக்கொழுந்து விளங்குகிறது.
முருங்கை மரத்தில் எல்லாமே சத்துக்கள்தான். இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் என ஒவ்வொரு பாகமும், உடலிலுள்ள நோய்களை தீர்க்கக்கூடியது.அந்தவகையில், முருங்கைக்காய்களும் தவிர்க்க முடியாதவை.புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் என்ற 4 சத்துக்களின் மிகச்சிறந்த ஆதாரமாக முருங்கை திகழ்வதே இதன் பிளஸ் பாயிண்ட்டாகும்.. இதிலுள்ள வைட்டமின் C சத்தானது, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகம். மற்ற அனைத்து கீரைகளில் இருப்பதைவிட, இந்த முருங்கையில் ஏகப்பட்ட இரும்புச் சத்துக்கள் உள்ளன. இதிலிருக்கும் பொட்டாசிய சத்து, வாழைப்பழத்தை விடவும் அதிகம். இதிலிருக்கும் புரோட்டின் சத்துக்களோ, முட்டைக்கு இணையானது. கால்சியம் சத்துக்கள், பசும்பாலைவிட,4 மடங்கு அதிகம். முருங்கைக்கீரைகள் ரத்தவிருத்தியை தருவதைப்போலவே, இந்த காய்களும் இரும்புச்சத்து கொண்டிருக்கின்றன. அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் தவறாமல் முருங்கையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த இந்த முருங்கை உதவுகிறது.. வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் Cயின் சிறந்த ஆதாரமாக உள்ளதால், ரத்த சோகை வருவதைத் தடுக்கிறது.முருங்கைக்காயில் உள்ள இரும்புச்சத்து உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. தொற்றுக்கள் உண்டாக்குவதை தவிர்க்கக்கூடிய வைட்டமின் C முருங்கைக்காயில் உள்ளது. வைட்டமின் A உள்ளதால், மூளை மற்றும் கண்பார்வை வளர்ச்சியும் மேம்படும். கர்ப்பிணிகள் முருங்கையை அடிக்கடி சாப்பிட வேண்டும். தாய்க்கு மட்டுமல்லாமல், வயிற்றிலுள்ள குழந்தைக்கும், அதிக நன்மையை தருவதால், முருங்கைக்காய் கர்ப்ப காலத்தில் ஒரு சிறந்த சப்ளிமெண்டாகவே செயல்படுகிறது. கர்ப்ப காலத்தில் 100 கிராம் அளவு முருங்கைக்காய் சாப்பிடுவதால், வயிற்றிலுள்ள கருவினுடைய உறுப்புகள் நன்றாக வளரும். எனவே டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று கர்ப்பிணிகள் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ளலாம்.நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள், மூலநோயால் அவதிப்படுபவர்கள், வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த காய் சிறந்த மருந்தாகும்காரணம், ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, கட்டுக்குள் வைக்கும்.
சுரைக்காய்வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது.இது 96 சதவீதம்நீர்ச்சத்துநிரம்பியது.நம்உடலைகுளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும்.பரோட்டீன், வைட்டசின் பி1. பி5. பி6. சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி சாறு பிழிந்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வர, சிறுநீரக தொடர்பான பிரச்னைகள் குணமாகும்.அதிகளவு சுரைக்காயை உணவில் சேர்ப்பது உங்க ஞாபக சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் வயதான காலத்தில் . ஏற்படும் மறதி நோயான அல்சைமர் போன்ற நோய் வராமல் தடுக்க முடியும்.சுரைக்காயில் உள்ள உயர்ந்த அளவு பொட்டாசியம் உங்க இதயஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். இது உங்க உயர் ரத்த அழுத்தத்தை சீராக்குதல், உயர் கொழுப்பை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது.சுரைக்காயில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுகிறது.