25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


குடும்ப   அட்டைதாரர்கள்  தங்கள்   குடும்ப அட்டையுடன்   அருகில்   உள்ள   நியாய   விலைக்   கடைக்குச்  சென்று  31.07.2026-க்குள்   கைரேகை  பதிவினை கட்டாயமாக  செய்துகொள்ள வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையுடன் அருகில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று 31.07.2026-க்குள் கைரேகை பதிவினை கட்டாயமாக செய்துகொள்ள வேண்டும்.

குடியிருப்புக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று தங்களது கைரேகையினை பதிவு 31.07.2026 இக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு, தமிழ்நாட்டில்  உள்ள   குடும்ப  அட்டைதாரர்கள்,  குடும்ப  அட்டையில்  உள்ள அனைத்து உறுப்பினர்களின்     e-KYC  கைரேகையினை கட்டாயமாக பதிவு செய்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

எனவே,  இதுவரை  கைரேகை   பதிவு  செய்யாத   குடும்ப  அட்டைதாரர்கள் தங்கள்   குடும்ப அட்டையுடன்   அருகில்   உள்ள   நியாய   விலைக்  கடைக்குச்  சென்று 31.07.2026-க்குள்   கைரேகை  பதிவு செய்து e-KYC   மேற்கொள்ள வேண்டும். மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் பணி  நிமித்தமாக  வேறு    பகுதிகளில்  தற்காலிகமாக  வசிப்பவர்கள் தற்போது வசிக்கும்   பகுதிக்கு  அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவு  செய்து  தங்கள்   உரிமையை உறுதி  செய்ய  வேண்டும்.

      இறந்த உறுப்பினர்களின் பெயர்களை வரும் 25 ஆம் தேதிக்குள் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நீக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் தங்களது பகுதியில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினரின் குடும்ப அட்டை எண்ணுடன் ஆதார் அட்டையின் நகலை வழங்க வேண்டும்.

                கைரேகை இல்லாத குழந்தைகள் மற்றும் முதியோர்கள் முதலில் தங்கள் ஆதார் அட்டையில் கைரேகை மற்றும் கண் பதிவை புதுப்பித்த பின்னரே e-KYC மேற்கொள்ள வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18,00,580 உறுப்பினர்களில் 16,34,820 நபர்கள் பதிவு செய்துள்ளனர்.  1,65,760 நபர்கள் பதிவு செய்யாமல் உள்ளனர். இப்பணி 90.79% நிறைவடைந்துள்ளது.
   
இதற்காக  அருப்புக்கோட்டை , காரியாபட்டி,  இராஜபாளையம்,   சாத்தூர், சிவகாசி,  திருவில்லிபுத்தூர்,  திருச்சுழி,  வத்திராயிருப்பு,  வெம்பக்கோட்டை,  விருதுநகர் ஆகிய  பத்து வட்டாட்சியர்  அலுவலங்களில்  உள்ள  ஆதார்   இ-சேவை  மையங்களை அணுகி  ஆதார்  புதுப்பிப்பை  மேற்கொண்ட  பிறகு  குடும்ப அட்டையுடன் நியாயவிலைக் கடைக்குச்  சென்று e-KYC  கைரேகை பதிவு செய்து கொள்ளலாம்  என  மாவட்ட  ஆட்சித் தலைவர், அவர்கள்   தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News